எவோக் நிறுவனத்தின் புதிய மாடல் எலக்ட்ரிக் பைக்கின் கான்செப்ட் வரைபடம் வெளியானது...!

எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை தயாரித்து வரும் எவோக் நிறுவனம் அதன் புத்தம் புதிய மாடல் 6061 மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

எவோக் நிறுவனத்தின் புதிய மாடல் எலக்ட்ரிக் பைக்கின் கான்செப்ட் வரைபடம் வெளியானது...!

எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்கும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் எரிபொருள் அல்லாத வாகனப் பயன்பாட்டிற்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதே முயற்சியில் இந்தியாவும் சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.

எவோக் நிறுவனத்தின் புதிய மாடல் எலக்ட்ரிக் பைக்கின் கான்செப்ட் வரைபடம் வெளியானது...!

ஆகையால், பன்னாட்டு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் அவர்களது மின்வாகனங்களை களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த எவோக் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனம், இந்தியாவில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியிட்டது.

எவோக் நிறுவனத்தின் புதிய மாடல் எலக்ட்ரிக் பைக்கின் கான்செப்ட் வரைபடம் வெளியானது...!

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, செய்தியாளர்களைச் சந்தித்த அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான நாதன் சூய் கடந்த வாரத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து கூறியிருந்தார். தற்போது, எவோக் நிறுவனம் அர்பன் எஸ் மற்றும் அர்பன் கிளாசிக் ஆகிய இரண்டு மாடல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனைச் செய்து வருகிறது.

எவோக் நிறுவனத்தின் புதிய மாடல் எலக்ட்ரிக் பைக்கின் கான்செப்ட் வரைபடம் வெளியானது...!

இதைத்தொடர்ந்து, மூன்றாம் மாடலாக எவோக் 6061 என்ற க்ரூஸர் ரக புதிய மாடல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை தயாரிக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்த புதிய கான்செப்ட் மாடலுடைய கான்செப்ட் வரைபடத்தை எவோக் நிறுவனம் வெளியிட்டிருப்பதாக ஆட்டோகார் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எவோக் நிறுவனத்தின் புதிய மாடல் எலக்ட்ரிக் பைக்கின் கான்செப்ட் வரைபடம் வெளியானது...!

இந்த பிரீமியம் ரக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தற்போது முதன்மைக்கட்ட வடிவமைப்பில் இருக்கிறது. அவ்வாறு, இதன் வடிவமைப்பு தற்போது உறுவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதற்கான பேட்டரி மற்றும் உள்கட்டமைப்புகளை தயார் செய்யும் பணியில் அந்த நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

எவோக் நிறுவனத்தின் புதிய மாடல் எலக்ட்ரிக் பைக்கின் கான்செப்ட் வரைபடம் வெளியானது...!

இந்த மோட்டார்சைக்கிளின் ஃபிரேம் மற்றும் பேட்டரி பாக்ஸ் உள்ளிட்ட சில பாகங்கள் T6061 என்ற அலுமினியம் ட்வின் பிளேட்டைக் கொண்டு தயார் செய்யப்பட உள்ளன. ஆகையால், இந்த க்ரூஸர் மாடல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கு 6061 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எவோக் நிறுவனத்தின் புதிய மாடல் எலக்ட்ரிக் பைக்கின் கான்செப்ட் வரைபடம் வெளியானது...!

இந்த புதிய மாடல் க்ரூஸர் மோட்டார்சைக்கிளின் பேட்டரி பாக்ஸ், எஞ்ஜின் உட்பட மேலும் சில முக்கிய பாகங்கள் ட்வின் பிளேட் ஃபிரேமின் மீது நேரடியாக பொருத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இந்த மின் மோட்டார்சைக்கிளில் 10 இன்ச் கொண்ட டச்ஸ்கிரீன் வழங்கப்பட உள்ளது. இது, பெட்ரோல் அளவு, வாகனத்தின் வேகம், பேட்டரி பவர் உள்ளிட்ட தகவலை வழங்கும்.

எவோக் நிறுவனத்தின் புதிய மாடல் எலக்ட்ரிக் பைக்கின் கான்செப்ட் வரைபடம் வெளியானது...!

இந்த மோட்டார்சைக்கிளை மலிவான விலையில் அதிக பவர் கொண்டதாக உருவாக்கும் முயற்சியில் எவோக் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக இந்த மின்மோட்டார்சைக்கிளில் சக்தி வாய்ந்த 120kW திறனுடைய மின் மோட்டார் பொருத்தப்பட உள்ளது. இது 160எச்பி பவரையும், 271 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

எவோக் நிறுவனத்தின் புதிய மாடல் எலக்ட்ரிக் பைக்கின் கான்செப்ட் வரைபடம் வெளியானது...!

இதேபோன்று, இந்த எவோக் 6061 மோட்டார்சைக்கிளில் எவோக்கின் ஜென்2 பேட்டரி பொருத்தப்பட உள்ளது. இது, 15.4kWh கொண்ட லித்தியம் அயன் பேட்டரியாகும். இந்த பேட்டரி 15 நிமிடத்தில் 80 சதவீத சார்ஜை அடைந்துவிடும் திறனுடையது.

Most Read Articles
English summary
Evoke 6061 Electric Bike Design Revealed. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X