அவல நிலையில் இந்திய வாகன துறை: எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு டூ வீலர்கள் விற்பனை... முழுமையான தகவல்!

ஆட்டோமொபைல் டீலர்கள் அசோசியேஷன் கூட்டமைப்பு, வாகனங்களின் பதிவு செய்தது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

மிக மேசமான நிலையில் இந்திய வாகன துறை: எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு வாகனங்கள் விற்பனை... முழுமையான தகவல்!

இதுவரை கண்டிராத விற்பனை வீழ்ச்சியை இந்திய வாகனச் சந்தை தற்போது சந்தித்து வருகின்றது. இந்நிலை, நடப்பு 2019ம் ஆண்டு தொடங்கிய முதலிலிருந்தே நிலவி வருகின்றது.

இந்த மோசமான மந்த நிலை காரணமாக, இந்தியாவில் இயங்கி வரும் பல டீலர்கள் ஷோரூம் இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆட்குறைப்பு நடவடிக்கையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

மிக மேசமான நிலையில் இந்திய வாகன துறை: எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு வாகனங்கள் விற்பனை... முழுமையான தகவல்!

மேலும், நிதி இழப்பை தவிர்க்க வாகன உற்பத்தி குறைப்பு உள்ளிட்ட செயல்களிலும் அவை ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வாகனங்கள் பதிவு செய்தது குறித்த தகவலை ஆட்டோமொபைல் டீலர்கள் அசோசியேஷன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

மிக மேசமான நிலையில் இந்திய வாகன துறை: எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு வாகனங்கள் விற்பனை... முழுமையான தகவல்!

இதில், இருசக்கர விற்பனை கடந்த காலத்தைக் காட்டிலும் மிக மோசமான மந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தெரிய வருகின்றது. மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இத்தகைய சூழலில்தான் இருக்கின்றது என்பதை விளக்கும் வகையில் அது உள்ளது.

மிக மேசமான நிலையில் இந்திய வாகன துறை: எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு வாகனங்கள் விற்பனை... முழுமையான தகவல்!

அந்தவகையில், தற்போது வெளியாகியுள்ள வாகன பதிவுகுறித்த தகவல் கடந்த ஆண்டைக் காட்டிலும், தற்போதைய விற்பனை விகிதம் சற்றே முரண்பாடுடன் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது வாகனத் தொழில் அதன் வரலாற்றில் மிகக் கடினமான காலகட்டத்தில் இருப்பதை உணர்த்துகின்றது.

மிக மேசமான நிலையில் இந்திய வாகன துறை: எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு வாகனங்கள் விற்பனை... முழுமையான தகவல்!

அதேசமயம், ஒரு சில மாநிலங்கள் மட்டும் சற்று மாறான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இருப்பினும், பெரும்பாலான மாநிலங்கள் சரிவையேச் சந்தித்திருக்கின்றது. அந்தவகையில், மேற்கு வங்கம் (45.58 சதவீதம்), பிஹார் (2.75 சதவீதம்), உத்தர பிரதேசம் (1.47 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் மட்டும் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன.

மிக மேசமான நிலையில் இந்திய வாகன துறை: எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு வாகனங்கள் விற்பனை... முழுமையான தகவல்!

இதுகுறித்த முழுமையான தகவலை கீழே உள்ள பட்டியலில் காணலாம்...

வரிசை மாநிலங்கள் ஜுலை-19 ஜுலைl-18 வருடம் 5
1 உத்தர பிரதேசம் 2,61,976 2,58,172 1.47
2 தமிழ்நாடு 1,49,291 1,61,586 -7.61
3 மஹாராஷ்டிரா 1,20,900 1,43,148 -15.54
4 மேற்கு வங்கம் 1,02,071 70,115 45.58
5 கர்நாடகம் 46,491 1,05,656 -8.67
6 குஜராத் 90,209 1,06,139 -15.01
7 பிஹார் 88,193 85,831 2.75
8 ராஜஸ்தான் 78,594 89,331 -12.02
9 ஒடிசா 54,678 60,697 -9.92
10 கேரளா 54,658 NA NA
11 ஹரியானா 49,535 50,206 -1.34
12 சத்தீஸ்கர் 44,654 38,452 16.13
13 பஞ்சாப் 39,928 57,510 -30.57
14 ஜார்கண்ட் 36,903 42,920 -14.02
15 டெல்லி 35,005 42,569 -17.77
16 அசாம் 28,426 28,271 0.55
17 உத்தர்காண்ட் 16,184 19,735 -17.99
18 ஜம்மு மற்றும் காஷ்மீர் 10,505 12,196 -13.87
19 ஹிமாசல் பிரதேசம் 6,249 7,478 -16.43
20 பாண்டிச்சேரி 4,815 5,349 -9.98
21 திரிபுரா 3,659 3,221 13.60
22 கோவா 2,661 3,233 -17.69
23 மணிபூர் 2,360 2,747 -14.09
24 சண்டிகர் 2,163 2,447 -11.61
25 மிசோரம் 2,133 1,637 30.30
26 மெகாலயா 1,430 1,787 -19.98
27 அருணாசல பிரேதசம் 1,415 1,029 37.51
28 தாத்ரா மற்றும் நகர் ஹவேலி 615 539 3.71
29 தமான் மற்றும் தியு 494 403 22.58
30 நாகலாந்து 483 692 -30.20
31 சிக்கிம் 364 232 56.90
மிக மேசமான நிலையில் இந்திய வாகன துறை: எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு வாகனங்கள் விற்பனை... முழுமையான தகவல்!

தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் இந்திய வாகன சந்தை மிகப் பெரிய கஷ்ட காலத்தில் சிக்கியிருப்பது மிக தெளிவாக தெரிய வந்துள்ளது. இந்த சிக்கலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமானதாக ஜிஎஸ்டி, புதிய மாசு உமிழ்வு விதி, எரிபொருள் விலையுயர்வு, வாகன பதிவு விலையுயர்வு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன.

MOST READ: தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

மிக மேசமான நிலையில் இந்திய வாகன துறை: எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு வாகனங்கள் விற்பனை... முழுமையான தகவல்!

அதேசமயம், மின் வாகன ஊக்குவிப்பிற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சியும் இதற்கு ஓர் முக்கிய காரணமாக இருப்பதாக வாகனத்துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

MOST READ: 31 லட்ச ரூபாய் பைக்கை ஓட்டி வந்தவரை தடுத்து நிறுத்திய போலீசார்... காரணம் என்னவென்று தெரியுமா?

மிக மேசமான நிலையில் இந்திய வாகன துறை: எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு வாகனங்கள் விற்பனை... முழுமையான தகவல்!

எரிபொருள் வாகனங்களில் வெளியேறும் புகை பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுகின்றது. அத்துடன், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், நாட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது.

MOST READ: பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கிய திரை பிரபலம்... யார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

மிக மேசமான நிலையில் இந்திய வாகன துறை: எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு வாகனங்கள் விற்பனை... முழுமையான தகவல்!

இவைகளுக்கு தீர்வு காணும் விதமாகவே, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விலை, பதிவு கட்டணம் போன்றவற்றை உயர்த்தி வருகின்றது.

இதனால், மக்கள் எரிபொருள் வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். இதன் பின்விளைவாக இந்திய வாகனத்துறை அதலபாதாளத்திற்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மிக மேசமான நிலையில் இந்திய வாகன துறை: எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு வாகனங்கள் விற்பனை... முழுமையான தகவல்!

இதில், தப்பிக்க வாகன உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசிடம், ஜிஎஸ்டி வரி குறைப்பு, எரிபொருள் வாகனங்களுக்கு சலுகை வழங்குதல் போற்றவற்றிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Most Read Articles

English summary
FADA Revealed Vehicle Registration Data. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more