இத்தாலியன் ஸ்டைலில் மோட்டோ குஸ்ஸி வி85 டிடி அட்வென்ஜர் பைக்... டெலிவரி ஆரம்பமானது

இத்தாலிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான மோட்டோ குஸ்ஸி, தனது முதல் வி85 டிடி அட்வென்ஜர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளது. முதல் வாடிக்கையாளராக பெங்களூரை சேர்ந்த அடுல் சைனி என்பவர் கடந்த 6ஆம் தேதி இந்த பைக்கை டெலிவரி செய்துள்ளார்.

இத்தாலியன் ஸ்டைலில் மோட்டோ குஸ்ஸி வி85 டிடி அட்வென்ஜர் பைக்... டெலிவரி ஆரம்பமானது

பெங்களூரில் உள்ள அவண்ட் கிரேட் மோட்டார்ஸ் நிறுவனம் தான் அடுல் சைனிக்கு வி85 டிடி பைக்கை வழங்கியுள்ளது. குஸ்ஸி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களை மட்டும் அல்லாமல் அவண்ட் கிரேட் மோட்டார்ஸ் நிறுவனம் பல முன்னணி பைக் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களின் வாகனங்களையும் விற்பனை செய்து வருகிறது.

இத்தாலியன் ஸ்டைலில் மோட்டோ குஸ்ஸி வி85 டிடி அட்வென்ஜர் பைக்... டெலிவரி ஆரம்பமானது

மோட்டோ குஸ்ஸியின் இந்த வி85 டிடி பைக்கின் சில்லறை விலை, பெங்களூரில் உள்ள இந்த அவண்ட் கிரேட் மோட்டார்ஸில் ரூ.17.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அட்வென்ஜர் பைக்கில் யூரோ-4க்கு இணக்கமான 853சிசி வி-ட்வின் என்ஜின் ஸ்டீல் டுபுளர் சேசிஸுடன் பொருத்தப்பட்டுள்ளது.

இத்தாலியன் ஸ்டைலில் மோட்டோ குஸ்ஸி வி85 டிடி அட்வென்ஜர் பைக்... டெலிவரி ஆரம்பமானது

இதன் என்ஜின் 7,750 ஆர்பிஎம்மில் 79.1 பிஎச்பி பவரையும் 5,000 ஆர்பிஎம்மில் 80 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் ஆறு நிலை வேகங்களை வழங்கக்கூடிய கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இத்தாலியன் ஸ்டைலில் மோட்டோ குஸ்ஸி வி85 டிடி அட்வென்ஜர் பைக்... டெலிவரி ஆரம்பமானது

இந்த பைக்கில் உள்ள வி-ட்வின் என்ஜின் ஆற்றல்களை பின்புற சக்கரத்திற்கு வழங்குகிறது. இந்த கடத்தல் வழங்கமான பைக்குகளை போல் சங்கிலி அல்லது பெல்ட் ட்ரைவ் மூலம் நடைபெறாமல் இவற்றிற்கு பதிலாக நீண்ட தண்டு ஒன்றின் மூலம் நடைபெறுகிறது.

இத்தாலியன் ஸ்டைலில் மோட்டோ குஸ்ஸி வி85 டிடி அட்வென்ஜர் பைக்... டெலிவரி ஆரம்பமானது

பகல் நேரத்தில் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகளுடன் ஹெட்லைட்ஸ் ரெட்ரோ தோற்றத்தில் இந்த பைக்கில் வடிவமைக்கபட்டுள்ளது. பைக்கில் உள்ள மோட்டோ குஸ்ஸி என்ற லோகோவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியன் ஸ்டைலில் மோட்டோ குஸ்ஸி வி85 டிடி அட்வென்ஜர் பைக்... டெலிவரி ஆரம்பமானது

மற்ற அம்சங்களாக எல்இடி டெயில் லேம்ப்ஸ் மற்றும் டர்ன் இண்டிகேட்டர், பெரிய பரப்பில் இரண்டாக பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு, ரெட்ரோ தோற்றத்தில் பெட்ரோல் டேங்க், இரயில் தண்டாவள அமைப்பில் பொருட்களை ஏற்றி செல்ல உதவும் ரேக், ஸ்டேரிங்கை பிடித்திருக்கும் கைகளை பாதுகாக்கும் பாகம், நீண்ட கண்ணாடி போன்றவையும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

இத்தாலியன் ஸ்டைலில் மோட்டோ குஸ்ஸி வி85 டிடி அட்வென்ஜர் பைக்... டெலிவரி ஆரம்பமானது

இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலிற்காக 4.3 இன்ச்சில் டிஎஃப்டி திரை வழங்கப்பட்டுள்ளது. ரைடர் தனது ஸ்மார்ட்போனை பைக்கில் உள்ள இசியு மூலம் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையுடன் இணைத்து கொள்ளலாம். இந்த வசதி மூலம் ரைடர் மொபைல் போனில் உள்ள பாடல்களையும் அழைப்புகளையும் டிஎஃப்டி திரை மூலமே கட்டுப்படுத்தலாம்.

Most Read:கிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...

இத்தாலியன் ஸ்டைலில் மோட்டோ குஸ்ஸி வி85 டிடி அட்வென்ஜர் பைக்... டெலிவரி ஆரம்பமானது

இந்த அட்வென்ஜர் பைக்கில் முன்புற சக்கரத்தில் 41 மிமீ தலைக்கீழான ஃபோர்க்ஸும் பின்புற சக்கரத்தில் அட்ஜெஸ்ட் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள மோனோ ஷாக்கும் சஸ்பென்ஷன் அமைப்பாக உள்ளன. ப்ரேக்கிங் அமைப்பாக, முன்புறத்தில் சக்கரத்துடன் சுழலக்கூடிய இரட்டை 320 மிமீ டிஸ்க்கும் பின்புறத்தில் 260 மிமீ சிங்கிள் ரோடாரும் குஸ்ஸி வி85 டிடி பைக்கில் உள்ளன. டுயுல் ஏபிஎஸ் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் அமைப்பும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தாலியன் ஸ்டைலில் மோட்டோ குஸ்ஸி வி85 டிடி அட்வென்ஜர் பைக்... டெலிவரி ஆரம்பமானது

ஸ்போக் சக்கரம் 17 இன்ச்சில் பின்புறத்திலும் 19 இன்ச்சில் முன்புறத்திலும் உள்ளன. இவற்றுடன் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் அமைப்பாக இந்நிறுவனத்தின் "மோட்டோ குஸ்ஸி கண்ட்ரோல்லோ டி ட்ராஜியொன் (எம்ஜிசிடி)" உள்ளது. ஸ்ட்ரீட், மழை, ஆப்-ரோடு என மூன்று ரைடிங் மோட்களை வெவ்வேறான ட்ராக்‌ஷன்களுடன் இந்த வி85 டிடி பைக் பெற்றுள்ளது.

இத்தாலியன் ஸ்டைலில் மோட்டோ குஸ்ஸி வி85 டிடி அட்வென்ஜர் பைக்... டெலிவரி ஆரம்பமானது

ஏற்கனவே கூறியதுபோல் பெங்களூருவில் உள்ள அவண்ட் கிரேட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பல நிறுவனங்களின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மோட்டோ குஸ்ஸி, வெஸ்பா, அப்ரில்லா, நோர்டோன், எஃப்.பி. மொண்டியல், எம்வி அகுஸ்டா, ஹயோசுங் மற்றும் எஸ்டபிள்யூஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் பைக்குகள் அவண்ட் கிரேட் மோட்டார்ஸில் கிடைக்கிறது.

Most Read:அசத்தலான ஐந்து விதமான நிறங்களில் அறிமுகமாகும் 2020 கவாஸாகி இசட்900 பைக்

இத்தாலியன் ஸ்டைலில் மோட்டோ குஸ்ஸி வி85 டிடி அட்வென்ஜர் பைக்... டெலிவரி ஆரம்பமானது

மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்கின் விலை சிறிது அதிகம் தான். இதே விலையில் இந்த பைக்கை விட அதிக ஆற்றலை தரக்கூடிய ஏராளமான சூப்பர் பைக்குகள் இந்திய மார்கெட்டில் உள்ளன. டைகர்ஸ், ஆப்பிரிக்கா ட்வின்ஸ், வெர்ஸிஸ் உள்ளிட்டவை அவற்றுள் சில. ஆனால் இந்த பைக்கின் மிக முக்கிய சிறப்பம்சமே இத்தாலியன் டிசைன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு தான்.

Most Read Articles

English summary
Moto Guzzi V85 TT Adventure Motorcycle: First Bike Delivered In India
Story first published: Friday, November 8, 2019, 12:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X