52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?

52 இ-செல்லாண்களுடன் தொடர்ச்சியாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த ஃபுட் டெலிவரி பாய் போக்குவரத்து போலீஸிடம் சிக்கியுள்ளார். அவர் எவ்வாறு, போலீஸிடம் சிக்கினார் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?

நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல் மற்றும் வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போர் நடைபெற்று வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, நாள்தேறும் செய்திதாள்கள் மற்றும் நமது வீட்டு டிவிக்களில் ஒலிக்கும் செய்திகள் இருக்கின்றன.

52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?

அந்தவகையில், போக்குவரத்து விதிமீறலை முற்றிலும் ஒழித்துகட்டும் விதமாக, முன்னதாக விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை மத்திய அரசு பத்துமடங்கு உயர்த்தி அறிவித்தது. இதனால், ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தை இயக்குதல், ரேஷ் டிரைவ் செய்தல், குடித்துவிட்டு வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களின் அபராதம் பன் மடங்கு உயர்ந்துள்ளது.

52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?

இவ்வாறு, போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும், தமிழ்நாட்டைக் காட்டிலும் மற்ற மாநில போலீஸார்கள் இந்த விவகாரத்தில் அதிதீவிரம் காட்டி வருகின்றனர். அதேசமயம், தமிழக போலீஸார் தற்போதுதான், போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக போர் கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.

52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?

இதில், ஆரம்பகட்டத்திலிருந்தே வாகன சட்டம் விதிமீறலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகர போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அதனை அதிதீவிரப்படுத்தவும் அவர்கள் தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில், முறையற்ற மற்றும் சேதப்பட்ட நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தி வந்த வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

சிசிடிவி கேமிரா மற்றும் போலீஸாரின் இ-செல்லாண் நடவடிக்கைக்கு பயந்து பலர், தங்களது நம்பர் பிளேட்டைச் சேதப்படுத்தி பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது. ஆகையால், நம்பர் பிளேட் முறைகேட்டில் ஈடுபட்டு வந்த, வாகன ஓட்டிகளுக்கு எதிரான நடவடிக்கையை அம்மாநில போலீஸார் எடுத்து வருகின்றனர்.

52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?

அவ்வாறு, மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையால் வெறும் இரண்டே நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்தவகையில், அடையாளம் காணமுடியாத மற்றும் சேதப்பட்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தியதற்காக 940 பேர் மீதும், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்களை இயக்கிய குற்றத்திற்காகவ 363 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?

இந்த குற்றத்திற்காக வாகன ஓட்டிகள் மீது, ஏமாற்றுதல் மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. பொதுவாக மோட்டார் வாகன விதிமீறலுக்கு, அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்தநிலையில், அவர்கள்மீது குற்றப் பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கையை போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?

இந்நிலையில், கர்நாடாக மாநிலம் பெங்களூருவில், வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, ஃபுட் டெலிவரி பாய் ஒருவர் 52 இ-செல்லாண்களுடன் அபராதத்தைச் செலுத்தாமல் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதுகுறித்த செய்தியை பெங்களூர் மிர்ரர்ஸ் என்ற ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர் எப்படி சிக்கினார், என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?

பெங்களூருவைச் சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞர்தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இவர், கோரமங்களா வாட்டர் டேங்க் பகுதியில் ஃபுட் டெலிவரி பாயாக பணி புரிந்து வருகின்றார். அவ்வாறு, அவர் ஃபுட் டெலிவரி செய்யும்போது, பல முறை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு, அவர் ஒவ்வொரு முறையும் விதிமீறலில் ஈடுபட்டதற்காக போலீஸாரிடம் இருந்து இ-செல்லாணைப் பெற்றுள்ளார்.

52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?

அந்தவகையில், ஆனந்த் இதுவரை 52 செல்லாண்களைப் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து, 53வது முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும்போது அவர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அதாவது, 53வது முறையாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டபோது, அவர் போலீஸாரின் கண்களில் சிக்கியுள்ளார். அப்போது, அவருக்கு அபராதம் விதிக்கும் விதமாக, இ-செல்லாண் எந்திரத்தில், பைக்கின் பதிவெண்ணை உள்ளிட்டபோது, அவர்மீது ஏற்கனவே 52 இ-செல்லாண்கள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெங்களூரு கோரமங்களா போக்குவரத்து போலீஸார், அவருக்கு 53வது இ-செலாணை வழங்கும்போது, அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தற்போது, இந்த புகைப்படம்தான், இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதேசமயம், அவரின் நிலுவைத் தொகையாக ரூ. 5,300 இருப்பதாகக் கூறப்படுகின்றது.

52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...?

முன்னதாக தெலுங்கானா மாநிலத்திலும் இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த சம்பவத்தில், தமிழக பதிவெண் கொண்ட கார், ரூ. 1 லட்சம் அபராத நிலுவையுடன் சிக்கியது. பின்னர், அந்த காரைப் பறிமுதல் செய்த ஹைதராபாத் போலீஸார், ஓட்டுநரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Food delivery personnel caught when he was committing his 53. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X