அரசின் மானிய திட்டத்துடன் அறிமுகமான அதிக திறனுடைய புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்...!

க்ரீவ்ஸ் காட்டன் இஞ்ஜினியரிங் நிறுவனம், அதன் ஹை-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில், ஃபேம்-2 மானிய திட்டத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

அரசின் மானிய திட்டத்துடன் அறிமுகமான அதிக திறனுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்...!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் க்ரீவ்ஸ் காட்டன், பலதரப்பட்ட பொருட்களை தயாரிக்கும் இஞ்ஜினியரிங் நிறுவனமாக இருக்கின்றது. இந்தநிறுவனம், ஆம்பியர் பிராண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரித்து வருவதாக அண்மையில் தகவல் வெளியாகியது.

அரசின் மானிய திட்டத்துடன் அறிமுகமான அதிக திறனுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்...!

இந்த ஸ்கூட்டரைதான் தற்போது, க்ரீவ்ஸ் காட்டன் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கின்றது. அதிவேகத்தில் செல்லக்கூடிய இந்த ஸ்கூட்டருக்கு ஆம்பியர் ஸீல் என பெயரிடப்பட்டுள்ளது. அறிமுகத்தின் சிறப்பாக இந்த ஸ்கூட்டர் மத்திய அரசின் ஃபேம்2 திட்டத்தின்கீழ், மானியச் சலுகையுடன் களமிறங்கியிருக்கின்றது.

அரசின் மானிய திட்டத்துடன் அறிமுகமான அதிக திறனுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்...!

எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் மாசினை குறைக்க, மின் வாகனங்களின் பயன்பாட்டுக்கு மாறும் சூழல் தற்போது நிலவி வருகின்றது. இதனால், உள் மற்றும் வெளி நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின், ஈகோ ஃப்ரெண்ட்லியான பசுமை வாகனங்களை (எலக்ட்ரிக் வாகனங்கள்) இந்தியாவில் களமிறக்கி வருகின்றன.

அரசின் மானிய திட்டத்துடன் அறிமுகமான அதிக திறனுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்...!

அந்தவகையில், க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனம், ஆம்பியர் ஸீல் என்ற ஹை-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கின்றது. இதுமட்டுமின்றி, இந்த மாடலில் வேகம் குறைந்த மற்றும் மலிவு விலையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் அறிமுகம் செய்துள்ளது.

அரசின் மானிய திட்டத்துடன் அறிமுகமான அதிக திறனுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்...!

இந்த ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 1-3 வருடங்கள் வாரண்டியுடன் அறிமுகமாகியிருக்கின்றது. அதேபோன்று, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பான சர்வீஸுக்காக நாடு முழுவதும் 300க்கும் ரீடெயில் ஸ்டோர்களும், 5000 அவுட்லெட்டுகள் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

அரசின் மானிய திட்டத்துடன் அறிமுகமான அதிக திறனுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்...!

ஸீல் ஹை-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. அதேபோன்று, இந்த ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், குறைந்தது 75 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 5.5 மணி நேரமே போதுமானதாக இருக்கின்றது.

MOST READ: மாருதி சுஸுகி ஏஜிஎஸ்: அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் புரட்சிகரமான ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்

அரசின் மானிய திட்டத்துடன் அறிமுகமான அதிக திறனுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்...!

இந்த ஸ்கூட்டருக்கு, ஃபேம் 2 திட்டத்தின்கீழ், ரூ. 18 ஆயிரம் வரை அரசு மானியமாக வழங்க இருக்கின்றது. இதனால், இந்த ஸ்கூட்டர் அனைவரையும் சென்றடைவது சாத்தியமாகி இருக்கியிருக்கின்றது. மேலும், அரசின் இந்த மானியம் மட்டுமின்றி, ஸீல் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர், பெட்ரோல் ஸ்கூட்டரைக் காட்டிலும் அதிக சேவிங்கைப் பெற முடிகிறது.

அரசின் மானிய திட்டத்துடன் அறிமுகமான அதிக திறனுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்...!

இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிமையான மற்றும் அனைவரும் அணுகும் வகையிலான நிதி திட்டத்தை, பைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனம் வழங்க இருக்கின்றது. இதனால், அனைத்து தரப்பினரும் இந்த ஆம்பியர் ஸீல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது.

அரசின் மானிய திட்டத்துடன் அறிமுகமான அதிக திறனுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்...!

இந்த புத்தம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போமேயானால், இதன் ஸ்டைல் மிகவும் போல்டான லைக்கைப் பெற்றிருக்கின்றது. மேலும், இதற்கு சிறப்பான லுக்கை வழங்கும் வகையில், ஸ்கூட்டரின் பாடியில் கிராஃபிக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் நவீன வசதிகளாக, ஹெட்லேம்ப், இன்டிகேட்டர், ரியர் விளக்கு உள்ளிட்டவை எல்இடி தரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

அரசின் மானிய திட்டத்துடன் அறிமுகமான அதிக திறனுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்...!

மேலும், பிரத்யேக வசதியாக எகாணமி மற்றும் பவர் என இரண்டு மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பெயருக்கு ஏற்ப, எல்க்ட்ரிக் ஸ்கூட்டரின் செயல்திறனை மாற்றியமைக்க உதவும். இதற்கேற்ப, மின் மோட்டார் இந்த ஸீல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின்மோட்டார் 0-50 கிமீ என்ற வேகத்தை வெறும் 14 செகண்டில் தொடுவதற்கு உதவும்.

அரசின் மானிய திட்டத்துடன் அறிமுகமான அதிக திறனுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு தகவல்...!

ஸ்கூட்டரின் பாதுகாப்பு வசதியாக ஆண்டி தெஃப்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சமானது, ஸ்கூட்டரை யாரேனும் திருடிச் சென்றால், ஸ்கூட்டரின் உரிமையாளருக்கு உடனடியாக எச்சரிக்கை தகவலை அனுப்பி வைக்கும். மேலும், ஸ்கூட்டர் இருக்கும் இடத்தையும் அது ஷேர் செய்யும். இதனால், ஸ்கூட்டர் காணமால் போனால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

Most Read Articles
English summary
Greaves Cotton Launched Ampere Zeal e-Scooter. Read In Tamil.
Story first published: Wednesday, May 29, 2019, 14:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X