பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க!

இளைஞர் ஒருவர் ரஜினி பாணியில் உண்மையைக் கூறிய காரணத்தால், அபராதம் ஏதுமின்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க!

இந்தியாவில் புதிதாக அமலுக்கு வந்துள்ள திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் உள்ளது. இதற்கு அண்மைக் காலங்களாக வாகனம் மற்றும் அபராதம் குறித்து வெளிவரும் செய்திகளே முக்கியச் சான்று.

பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க!

அதற்கேற்ப வகையில், நாள்தோறும் அபராதம் குறித்து வெளிவரும் அனைத்து செய்திகளும், பிரதான இடத்தைப் பிடிக்கின்றன. அதுமட்டுமின்றி, மக்கள் மத்தியில் மிகப் பெரிய களோபரத்தை ஏற்படுத்தும் வகையில் அவை அமைகின்றன.

பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க!

ஆகையால், சில மாநிலங்கள் புதிய மோட்டார் வாகன சட்டம் விதிக்கும் அதிகபட்ச அபராதத்தை குறைக்கும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளன. அந்தவகையில் குஜராத் மாநிலம் ஏற்கனவே இந்த செயலில் இறங்கிவிட்டது. அதேபோன்று கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் இதற்கான நடவடிக்கையில் களமிறங்கியுள்ளன. மேலும், அவை அதற்கான ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றன.

பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க!

இந்த நிலையில், உச்சபட்ச அபராதத்தில் இருந்து தப்பிப்பதற்காக வாகன ஓட்டிகள், தங்களை நடைமுறைக்கு ஏற்பவாறு மாற்றிக்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதேசமயம், ஒரு சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டுவிட்டு, போலீஸாரின் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக முற்றிலும் வித்தியாசமான முறையை கையாண்டு வருகின்றனர்.

பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க!

அந்தவகையில், டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்துவிட்டு, போலீஸாரிடம் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி தப்பிச் செல்லும் வீடியோக் காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.

பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க!

இந்த சம்பவம்குறித்த பரபரப்பு அடங்காத சூழ்நிலையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாட்ஷா திரைப்படத்தில் வரும் ரஜினி பாணியில் உண்மையைச் சொல்லி அபராதம் இன்றி தப்பிச் சென்ற சம்பவம் மிக வேகமாக வைரலாகி வருகின்றது.

குஜராத் மாநிலம், சோட்டா உதெப்பூர் மாவட்டத்தில் உள்ள பொடல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் மமோன். இவர், அதே பகுதியில் பழக்கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க!

அண்மையில், இவர் வியாபாரத்தை முடித்துவிட்டு வந்துக்கொண்டிருந்தபோது, போலீஸார் மடக்கியுள்ளனர். அப்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறப்படுகின்றது. ஆகையால், ஜாகீருக்கு ஹெல்மெட் அணியாததற்கான அபராதத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர்.

பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க!

அப்போது, போலீஸாரிடம் சென்ற ஜாகீர், "சார், நான் சட்டத்தை மதிக்கின்றவன். அனைத்து சட்ட விதிமுறைகளையும் சரியாக கடைபிடித்து வருகின்றேன். ஹெல்மட் விவகாரத்திலும் அப்படிதான். ஆகையால், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கின்றேன். ஆனால், என்னுடைய தலை அளவிற்கு ஏற்ப ஹெல்மட் கடைகளில் கிடைக்கவில்லை. இதனால், பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றேன்" என்றார்.

பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க!

மேலும் பேசிய அவர், "ஹெல்மட் கிடைக்காத காரணத்தால், நான் தினம்தோறும் போலீஸாருக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே, பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டே சுற்றி வருகின்றேன். அதேசமயம், இங்குள்ள அனைத்து கடைகளிலும் ஏறி இறங்கிவிட்டேன், இதுவரை எனக்கு ஏற்ற ஹெல்மட் கிடைத்தபாடில்லை" என ஆசுவாசப்பட்டார்.

பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க!

அதேசமயம், ஜாகீரிடம் வாகனம்குறித்த அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்துள்ளது. இதனால், அவரின் சங்கடமான இந்த சூழ்நிலையை உணர்ந்த போலீஸார், அவருக்கு அபராதம் ஏதுமின்றி அனுப்பி வைத்தனர்.

பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க!

இதுகுறித்து பொடலி நகர் பகுதி உதவி ஆய்வாளர் வசந்த் ரத்வா கூறியதாவது, "இது ஒரு புது விதமான பிரச்னையாக காணப்படுகின்றது. இதற்கு முன்பாக நாங்கள் இதுபோன்ற நிகழ்வைக் கண்டதில்லை. ஜாகீர் விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிப்பவராக இருக்கின்றார். அவர் வைத்துள்ள ஆவணங்களை பார்ப்பதிலேயே நமக்கு அது தெரிய வருகின்றது. இதனாலயே அவருக்கு அபராதம் ஏதுமின்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

குஜராத் அரசு கடந்த வாரம்தான் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய அபராதத்தை பாதியாக குறைத்து மாநிலத்தில் அறிமுகம் செய்தது. ஆகையால், ஹெல்மட் அணியாமல் முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு விதித்த ரூ. 1,000 என்ற அபராதம் 500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Gujarat Man Convinces Cop From Escape Hefty Penalty. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X