3 விநாடியில் 96கிமீ வேகத்தை தொடும் ஹார்லி டேவிட்சனின் முதல் மின் வாகனம்: இதன் டாப் ஸ்பீட் தெரியுமா?

பாரம்பரியமிக்க மாடல் மோட்டார் சைக்கிள்களைத் தயாரித்து வரும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம், மின் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இதனடிப்படையில், தற்போது சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதுகுறித்த முழு தகவலையும் இந்த பதிவில் காணலாம்.

3 விநாடியில் 96கிமீ வேகத்தை தொடும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்: இதன் டாப் ஸ்பீட் எவ்வளவு தெரியுமா...?

அமெரிக்காவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது பாரம்பரியமிக்க மாடல் மோட்டார்சைக்கிள்களை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் விற்பனைச் செய்து வருகின்றது.

கடந்த 1904ம் ஆண்டு வில்லியம் எஸ் ஹார்லி மற்றும் ஆர்தர் டேவிட்சன் ஆகியவர்கள் மூலம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், சுமார் 115 ஆண்டுகளைக் கடந்தும், மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனம் ஸ்டைல் மற்றும் பாரம்பரிய தோற்றமுடைய மோட்டார்சைக்கிள்களை தயாரிப்பதில் முன்னோடியாக இருந்துவருகிறது.

3 விநாடியில் 96கிமீ வேகத்தை தொடும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்: இதன் டாப் ஸ்பீட் எவ்வளவு தெரியுமா...?

இந்த நிலையில், இந்த நிறுவனம் தற்போது மின் மோட்டார்சைக்கிளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகிவரும் இந்த மோட்டார் சைக்கிள், மற்ற மின் மோட்டார்சைக்கிளைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற இ.ஐ.சி.எம்.ஏ., என்னும் சர்வதேச மோட்டார் சைக்கிள் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சியில், 'லிவ் வையர்' என்ற ஸ்பெக் மாடல் மின்மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், நான்கு வருடங்கள் கழித்து தற்போது ஸ்பெக்-மாடல் மின்மோட்டார் சைக்கிளின் உற்பத்தியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

3 விநாடியில் 96கிமீ வேகத்தை தொடும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்: இதன் டாப் ஸ்பீட் எவ்வளவு தெரியுமா...?

இ.ஐ.சி.எம்.ஏ., கண்காட்சியின் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சார்பில் கலந்துக்கொண்ட அதிகாரி ஒருவர், "இந்த மோட்டார் சைக்கிள் முழுக்க முழுக்க மின் சாதனங்களைக்கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 177 கிமீ தூரம் வரைச் செல்லலாம். இதன் விலை 29,799 அமெரிக்க டாலர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது (இந்திய மதிப்பில் ரூ. 21 லட்சம்)" என கூறினார்.

3 விநாடியில் 96கிமீ வேகத்தை தொடும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்: இதன் டாப் ஸ்பீட் எவ்வளவு தெரியுமா...?

இந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது முதல் மின் மோட்டார்சைக்கிள் குறித்த மேலும் ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதில், ஸ்பெக் மாடல் மின்மோட்டார்சைக்கிளின் தயாரிப்பானது தொடங்கப்பட்டுள்ளது. இது நகர்ப்புறம் அல்லாத சாலையில் பயணிக்கும்போது 225 கிமீ தூரத்தையும், நகர்ப்புற சாலைகளில் செல்லும்போது 142 கிமீ தூரத்தையும் முழுமையான சார்ஜில் கடக்கும். இது அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 177 கிமீ வேகத்தில் செல்லும்" என அறிவித்துள்ளது.

3 விநாடியில் 96கிமீ வேகத்தை தொடும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்: இதன் டாப் ஸ்பீட் எவ்வளவு தெரியுமா...?

மேலும், "லிவ் வையர் மின் மோட்டார் சைக்கிளின் பேட்டரிகளை டிசி ஃபாஸ்ட் முறையில் சார்ஜ் ஏற்றும்போது, ஒரு மணி நேரத்திற்குள் 0-த்தில் இருந்து 100 சதவீதம் சார்ஜ் அடைந்துவிடும். அதேபோன்று, 40 நிமிடங்களில் 0-த்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜையும் எட்டிவிடும். இதனால், சார்ஜ் செய்ய அதிகம் நேரம் வீணடிப்பது தவிர்க்கப்படும்" எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சனின் இந்த மின் மோட்டார்சைக்கிளில் தொழில்நுட்ப வசதியாக மாடர்ன் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டருடன் ஸ்மார்ட்போன் கன்னெக்டிவிட்டி அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கன்னெக்டிவிட்டியானது, ஜிபிஎஸ், கிளவுட் சேவை மற்றும் சர்வீஸ் ரிமைண்டர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளிக்கும்.

3 விநாடியில் 96கிமீ வேகத்தை தொடும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்: இதன் டாப் ஸ்பீட் எவ்வளவு தெரியுமா...?

இதையடுத்து, சாதரணமாக லிட்டர்-மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தும் மாடர்ன் எலக்ட்ரானிக் போன்ற சில தொழில்நுட்பங்களும் இந்த லிவ் வையரில் பயன்படுத்த உள்ளது. மேலும், டி.எஸ்.சி.எஸ்., எனப்படும் டிராக்-டார்க் ஸ்லிப் கன்ட்ரோல் சிஸ்டம், ஐஎம்யூ பேஸ்ட் ஈசிசி சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் மற்றும் டிராக்ஸன் கன்ட்ரோல் ஆகியவை கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளன.

3 விநாடியில் 96கிமீ வேகத்தை தொடும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்: இதன் டாப் ஸ்பீட் எவ்வளவு தெரியுமா...?

இதைத்தொடர்ந்து, மோட்டார் சைக்கிளின் முன் மற்றும் பின் சஸ்பென்ஷன்களை முழுமையாக அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வசிதியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, முன்பக்க பிரேக்கில் டுயூவல் 300 எம்எம் டிஸ்க்குகள் பிரெம்போ மோனோபிளாக்ஸும், பின் பக்கத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

3 விநாடியில் 96கிமீ வேகத்தை தொடும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்: இதன் டாப் ஸ்பீட் எவ்வளவு தெரியுமா...?

இந்த மோட்டார் சைக்கிளுக்கான ப்ரீ புக்கிங் ஏற்கனவே அமெரிக்காவில் தொடங்கப்பட்டு விட்டது. மேலும், ஐரோப்பாவின் சந்தையில் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் ப்ரீ புக்கிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, மோட்டார் சைக்கிளை இந்த வருடத்தின் இறுதிக்குள் டெலிவரி செய்ய இருப்பதாகவும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு இந்த மோட்டார் சைக்கிள் வருவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Harley Davidson Livewire Electric 225 KM Range. Read In Tamil.
Story first published: Saturday, March 16, 2019, 11:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X