ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களிலிருந்து சற்று வித்தியாசமான டிசைன் அம்சங்களுடன் இந்த மாடல் வந்துள்ளது.புதிய ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக்கில் 15.5kWh திறன் வாய்ந்த பேட்டரி வபொருத்தப

நீண்ட தூரம் பயணிக்கும் அம்சங்கள் பொருந்திய உயர் வகை க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உலக அளவில் பிரபலமான நிறுவனமாக விளங்குகிறது. மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் நூற்றாண்டுக்கும் மேலாக பாரம்பரியம் கொண்ட ஹார்லி டேவிட்சன் எதிர்கால சந்தையை மனதில் வைத்து பேட்டரியில் இயங்கும் மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

2014ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட லைவ்வயர் என்ற பெயரிலான கான்செப்ட் மாடல் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு தயாரிப்பு நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களிலிருந்து சற்று வித்தியாசமான டிசைன் அம்சங்களுடன் இந்த மாடல் வந்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

வி- ட்வின் எஞ்சின் மூலமாக புகழ்பெற்ற ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் திறன் மீது அதிக ஆவல் எழுவது இயல்புதான். ஆம். இந்த எலெக்ட்ரிக் பைக்கின் மின் மோட்டார் அதிகபட்சமாக 103 பிஎஸ் பவரையும், 116 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எலெக்ட்ரிக் பைக் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

புதிய ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக்கில் 15.5kWh திறன் வாய்ந்த பேட்டரி வபொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை சாதாரண ஏசி சார்ஜர் மூலமாக முழுமையா சார்ஜ் செய்வதற்கு 12.5 மணிநேரம் பிடிக்கும். ஆனால், டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் 249 கிலோ எடை கொண்டது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் அடையாளமாக சொல்லப்படும் சைலென்சர் சப்தத்தை செயற்கையாக வழங்கும். இதுவும் இந்த பைக்கின் மிக முக்கிய அம்சமாக கூறலாம்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

புதிய ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக் பெல்ட் டிரைவ் சிஸ்டத்தில் எஞ்சின் சக்தி பின்சக்கரத்திற்கு கடத்தப்படுகிறது. டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டட்ர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புளூடூத் மூலமாக ஸ்மார்ட்போனை இணைத்துக் கொண்டு ஏராளமான வசதிகளை பெற முடியும். விரைவில் இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் தயாரிப்புக்கு செல்ல இருக்கிறது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

 ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

இந்த பைக்கில் ஏழுவிதமான நிலைகளில் இயக்குவதற்கான டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இது நிச்சயம் ஓட்டுபவருக்கு சிறந்த ஓட்டுதல் அனுபவத்தை தரும்.

 ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

புதிய ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் இந்திய மதிப்பில் ரூ.21 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
American cruiser bike manufacturer, Harley-Davidson has unveiled the production version of its first electric cruiser called Livewire.
Story first published: Sunday, July 14, 2019, 12:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X