ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் அறிமுக விபரம்!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் அறிமுக விபரம்!

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பிரிமீயம் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் பிரபலமாக விளங்குகிறது. இந்தநிலையில், இந்த நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை விரைவில் களமிறக்க உள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் அறிமுக விபரம்!

லைவ்வயர் என்ற பெயரிடப்பட்டு இருக்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் வரும் 28ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் என்பதோடு, அந்நிறுவனம் உருவாக்கிய பைக்குகளில் மிக சக்திவாய்ந்த மாடலாகவும் வர இருக்கிறது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் அறிமுக விபரம்!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களிலிருந்து மாறுபட்டு இது மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் பைக் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் அறிமுக விபரம்!

இந்த எலெக்ட்ரிக் பைக்கிில் 15.5kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 12 மணிநேரம் பிடிக்குமாம். இந்த பைக்கில் இருக்கும் மின் மோட்டார் 103.5 பிஎச்பி பவரையும், 116 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் அறிமுக விபரம்!

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக்குடன் லெவல் 1 சார்ஜர் வழங்கப்படும். லெவல் 3 என்ற ஃபாஸ்ட் சார்ஜரானது விருப்பத்தின் பேரில் வாங்கிக் கொள்ள முடியும். இந்த ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக ஒரு மணிநேரத்தில் பேட்டரியை சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் அறிமுக விபரம்!

லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் நகர்ப்புறத்தில் 225 கிமீ தூரம் வரையிலும், நெடுஞ்சாலையில் 113 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும். தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் பைக் மாடலாகவும் இருக்கும்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் அறிமுக விபரம்!

புதிய ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக்கில் 4.3 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. புளூடூத் மூலமாக இதனை ஸ்மார்ட்போனுடன் இணைத்துக்கொண்டு பல்வேறு தகவல்களையும், நேவிகேஷன் வசதியையும் பெற முடியும். பைக் குறிப்பிட்ட பகுதியை தாண்டாதவாறு, ஜியோ ஃபென்சிங் முறையில் கட்டுப்படுத்தவும் முடியும்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் அறிமுக விபரம்!

புதிய ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக்கில் 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெசர்மென்ட் யூனிட், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், டிராக்- டார்க் ஸ்லிப் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் அறிமுக விபரம்!

புதிய ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் லைம் க்ரீன், ஆரஞ்ச் மற்றும் கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வர இறுக்கிறது. இதே வண்ணத் தேர்வுகள் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் அறிமுக விபரம்!

முதலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் மாடலானது ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
American motorcycle manufacturer Harley-Davidson will most likely launch their all electric motorcycle, the LiveWire in India on 27 August. The company dropped a teaser featuring an 'electrified' bar and shield logo along with the launch date.
Story first published: Tuesday, August 13, 2019, 13:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X