அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்...

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக், அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவிலும் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்... எப்போது தெரியுமா...?

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதன் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

அந்தவகையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம், துடிப்பான மற்றும் பாரம்பரியமிக்க ஸ்டைல் கொண்ட பைக்குகளை இந்திய இருசக்கர வாகன சந்தையில் களமிறக்கி வருகின்றது.

அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்... எப்போது தெரியுமா...?

இந்நிறுவனம், அண்மையில் அதன் முதல் மாடல் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்து, உலகில் உள்ள அனைத்து வாகன பிரியர்களையும் வியக்கச் செய்தது. அந்தவகையில், அந்த பைக்கின் அம்சமும், ஸ்டைலும் இருந்தது.

இந்த பைக்கை அறிமுகம் செய்த ஆரம்பகட்டத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.

அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்... எப்போது தெரியுமா...?

இந்நிலையில், அந்நிறுவனம் அதன் முதல் மாடல் மின் மோட்டார்சைக்கிளை, இந்தியாவிலும் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை பைக்வேல் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

மேலும், லைவ் ஒயர் என பெயரிடப்பட்டுள்ள அந்த பைக்கை இந்தியாவிற்கு கொண்டு வரும்விதமாக, அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் புதிய எலக்ட்ரிக் பைக் குறித்த தகவலையும் வெளியிட்டிருப்பதாக பைக் வேல் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்... எப்போது தெரியுமா...?

ஹார்லி டேவிட்சனின் இந்த லைவ்ஒயர் எலக்ட்ரிக்பைக்கில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வசதிகள், ஸ்போர்ட்ஸ் ரகத்தில் காட்சியளிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில், அதிநவீன தொழில்நுட்பத்திலும் சரி, திறனிலும் சரி எந்தவித குறையுமின்றி இந்த லைவ்ஒயர் எலக்ட்ரிக் பைக் உருவாகியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்... எப்போது தெரியுமா...?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்த லைவ்ஒயர் மாடலின் ஸ்பெக் மடாலை கடந்த 2014ம் ஆண்டு, இத்தாலியில் நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில்தான் முதல்முறையாக அறிமுகம் செய்திருந்தது. பின்னர், சுமார் நான்கு வருடங்கள் கழித்து, தற்போதே ஸ்பெக் மாடலின் உற்பத்தி வெர்ஷனை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்... எப்போது தெரியுமா...?

ஹார்லி டேவிட்சனின் இந்த மின் மோட்டார்சைக்கிளில் நவீன தொழில்நுட்ப வசதியாக மாடர்ன் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டருடன் கூடிய ஸ்மார்ட்போன் கன்னெக்டிவிட்டி அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கன்னெக்டிவிட்டியானது, ஜிபிஎஸ், கிளவுட் சேவை மற்றும் சர்வீஸ் ரிமைண்டர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளிக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்... எப்போது தெரியுமா...?

பைக்கின் ஹெட்லேம்ப்பிற்கு ஸ்போர்ட்டி லுக்கினை வழங்கும் வகையில், கவுல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, ப்யூவல் டேங்க் அமைப்பில், சார்ஜிங் போர்ட் அடங்கிய டேங்க் போன்ற அமைப்பு முன்பக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது. அவை, அலுமினியம் ஃப்ரேமால் உறுவாக்கப்பட்டவையாகும்.

அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்... எப்போது தெரியுமா...?

இந்த பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 177 கிமீ தூரம் வரைச் செல்ல முடியும் என கூறப்படுகின்றது. அதற்கேற்ப வகையில், 15.5kWh திறன் கொண்ட பேட்டரி இந்த பைக்கில் இணைக்கப்பட்டுள்ளது. இது, டிசி ஃபாஸ்ட் முறையில் சார்ஜ் செய்யும்போது, ஒரு மணி நேரத்திற்குள் 0-த்தில் இருந்து 100 சதவீதம் சார்ஜையும், 40 நிமிடங்களில் 0-த்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜையும் எட்டிவிடும். இதனால், சார்ஜ் செய்ய அதிக நேரம் செலவு செய்வது தவிர்க்கப்பட உள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்... எப்போது தெரியுமா...?

இது நகர்ப்புற சாலையில் பயணிக்கும்போது 225 கிமீ தூரத்தையும், நகர்ப்புறம் அல்லாத சாலைகளில் பயணிக்கும்போது 113 கிமீ ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகின்றது. அதேசமயம், இரு சாலைகளிலும் பயன்படுத்தும்போது 142 கிமீ ரேஞ்சையும் அது வழங்கும். இது அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 177 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றுள்ளது. அதற்கேற்ப வகையில், 103.5 பிஎச்பி பவரையும், 116 என்எம் டார்க்கை திறனையும் வெளிப்படுத்துகின்ற வகையிலான மின் மோட்டார் இந்த எலக்ட்ரிக் பைக்கில் பொருத்தப்பட உள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்... எப்போது தெரியுமா...?

இதைத்தொடர்ந்து, சாதரண லிட்டர்-மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தும், அதே மாடர்ன் எலக்ட்ரானிக் தொழில்நுட்பங்கள்தான், இந்த லிவ் வையர் எலக்ட்ரிக் பைக்கிலும் பயன்படுத்தப்பட உள்ளன. இத்துடன், டி.எஸ்.சி.எஸ்., எனப்படும் டிராக்-டார்க் ஸ்லிப் கன்ட்ரோல் சிஸ்டம், ஐஎம்யூ தரத்திலான ஈசிசி சிஸ்டம், ஆன்டிலாக் பிரேக்கிங் வசதி மற்றும் டிராக்சன் கன்ட்ரோல் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு வசதிகள் இந்த எலக்ட்ரிக் பைக்கில் இணைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்... எப்போது தெரியுமா...?

மேலும், முழுமையாக அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வகையிலான, முன் மற்றும் பின் சஸ்பென்ஷன்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்பக்கத்தில் இரு 300மிமீ அளவுகொண்ட டிஸ்க்குகள், பிரெம்போ மோனோபிளாக்ஸும் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பின் பக்கத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்... எப்போது தெரியுமா...?

இந்த மோட்டார் சைக்கிளுக்கான ப்ரீ புக்கிங் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்தியாவில் 2020ம் ஆண்டிற்கு பின்னர்தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கின் இந்திய வருகை உறுதியானநிலையில், அதன் அறிமுகம் குறித்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

அமெரிக்கா, ஐரோப்பாவை அடுத்து இந்தியாவில் களமிறங்கும் ஹார்லி டேவிட்சனின் முதல் எலக்ட்ரிக் பைக்... எப்போது தெரியுமா...?

அதேசமயம், முன்னதாக விற்பனைக்கு களமிறங்கிய நாடுகளில், இந்த வருடத்தின் இறுதிக்குள் லைவ் ஒயர் எலக்ட்ரிக் பைக்கின் டெலிவரி தொடங்கவிடும் என ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது 29,799 என்ற அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்பனையில் இருக்கின்றது. இது இந்திய மதிப்பில் ரூ. 21 லட்சம் ஆகும்.

Most Read Articles
English summary
Harley-Davidson Livewire In India? — Listed On Official Indian Website. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X