அரிய வாய்ப்பை அளிக்கும் ஹார்லி டேவிட்சன்: கோடை விடுமுறையை பயனுள்ளதாக செலவிட புது முயற்சி...!

கிளாசிக் ரக மோட்டார்சைக்கிள்களை விற்பனைச் செய்துவரும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதித்து 10 ஆண்டுகளைக் கடந்திருப்பதால் அதனை சிறப்பிக்கும் விதமாக கோடை இன்டர்ன்ஷிப் நிகழ்ச்சியை இந்தியாவில் தொடங்கி வைத்துள்ளது.

அறிய வாய்ப்பை அளிக்கும் ஹார்லி டேவிட்சன்: கோடை விடுமுறையை பயனுள்ளதாக செலவிட புது முயற்சி...!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம், கிளாசிக் ரக மோட்டார்சைக்கிளை தயாரிப்பதில் முதன்மை வகித்து வருகின்றது. இந்த நிறுவனம் வில்லியம் எஸ் ஹார்லி மற்றும் ஆர்தர் டேவிட்சன் ஆகிய இரு நண்பர்களால் கடந்த 1904ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அறிய வாய்ப்பை அளிக்கும் ஹார்லி டேவிட்சன்: கோடை விடுமுறையை பயனுள்ளதாக செலவிட புது முயற்சி...!

சுமார் 115 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்த நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் மீது பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. அதன்படி, ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களுக்கென உலகம் முழுவதிலும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது.

அறிய வாய்ப்பை அளிக்கும் ஹார்லி டேவிட்சன்: கோடை விடுமுறையை பயனுள்ளதாக செலவிட புது முயற்சி...!

இதேப்போன்று, இந்த நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து இந்த வருடத்துடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனைச் சிறப்பிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அண்மைக் காலங்களாக அறிவித்து வருகின்றது. அவ்வாறு, ஹார்லி டேவிட்சனின் இரண்டு புதிய மாடல்களான 1250 அட்வென்சர் டூரிங் மற்றும் 975சிசி கொண்ட ஸ்ட்ரீட் பைட்டர் ஆகிய இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களையும் 2020ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அறிய வாய்ப்பை அளிக்கும் ஹார்லி டேவிட்சன்: கோடை விடுமுறையை பயனுள்ளதாக செலவிட புது முயற்சி...!

இதைத்தொடர்ந்து, இந்தியாவில் அதன் 31 டீலர்கள் மூலம், ஹார்லி டேவிட்சனின் எந்தவொரு மோட்டார்சைக்கிளையும் இலவசமாக இயக்கலாம் என்ற அறிவிப்பையும் அந்த நிறுவனம் வெளியிட்டது. இந்த சலுகையானது, பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கி பத்து நாட்களுக்கு நடைபெற்றது.

அறிய வாய்ப்பை அளிக்கும் ஹார்லி டேவிட்சன்: கோடை விடுமுறையை பயனுள்ளதாக செலவிட புது முயற்சி...!

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் முறையில் பணி புரியும் வாய்ப்பினை அந்த அறிமுகம் செய்துள்ளது. இந்த வாய்ப்பின்மூலம், விண்ணப்பதாரர்கள் அவர்களின் திறமையை உலகறியச் செய்யும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பு கடந்த மார்ச் 31ம் தேதி முதல் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிய வாய்ப்பை அளிக்கும் ஹார்லி டேவிட்சன்: கோடை விடுமுறையை பயனுள்ளதாக செலவிட புது முயற்சி...!

இந்த கோடை இன்டர்ன்ஷிப் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு ஃபீல்ட் ஒர்க் வழங்கப்பட இருப்பதாக ஹார்லிடேவிட்சனின் மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக குழுக்கள் தகவல் தெரிவித்துள்ளது. இந்த கோடை இன்டர்ன்ஷிப்பில் இணைவதற்கு விண்ணப்பதாரர்கள் சில தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என ஹார்லி டேவிட்சன் எதிர்பார்க்கிறது.

அறிய வாய்ப்பை அளிக்கும் ஹார்லி டேவிட்சன்: கோடை விடுமுறையை பயனுள்ளதாக செலவிட புது முயற்சி...!

அதன்படி, விண்ணப்பதாரர்கள் சமூகம் சார்ந்த சிந்தனையாளராக இருக்க வேண்டும். மேலும், வீடியோ எடுத்தல், கட்டுரை எழுதுதல், புகைப்பட கொலேஜ் செய்வது உள்ளிட்ட பல்வேறு திறமைகளைக் கொண்டவராக இருத்தல் வேண்டும். மேலும், அவர்கள் சில டாஸ்க்கை உடனடியாக முடிக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும் என ஹார்லிடேவிட்சன் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இந்த கோடை இன்டர்ன்ஷிப் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஜீவ் ராகசேகரன் கூறியதாவது,

"இந்தியாவில் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த இன்டர்ன்ஷிப் நிகழ்ச்சி எதிர்கால ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்க இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் வரை இந்த தேர்வு செய்யும் பணி அடுத்த சில மாதங்கள் வரை நீடிக்கும். இதன் மூலம், மூன்று நபர்கள் எங்களுடன் ஒரு மாத காலம் வரை முழுவதுமாக பயணிக்க இருக்கின்றனர்" என்றார்.

அறிய வாய்ப்பை அளிக்கும் ஹார்லி டேவிட்சன்: கோடை விடுமுறையை பயனுள்ளதாக செலவிட புது முயற்சி...!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இதுவரை 18க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு, இதன் தொடக்க மாடலான ஸ்ட்ரீட் 750 மாடல் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மிகவும் பிரபலமானது, மேலும் அதிகம் விற்பனையானதும் கூட. இது எக்ஸே-ஷோரூமில் ரூ.5.43 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

Most Read Articles
English summary
Harley-Davidson Opens Summer Internship Program In India — The Dream Job?. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X