ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி மீண்டும் துவங்கியது!

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி மீண்டும் துவங்கியது!

அமெரிக்காவை சேர்ந்த பழம் பெருமை வாய்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஹார்லி டேவிட்சன். இந்த நிறுவனத்தின் க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிள்கள் உலக அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக நன்மதிப்பை பெற்றுள்ளன. பிரம்மாண்ட தோற்றம், அலாதியான சைலென்சர் சப்தத்தை வைத்து வாடிக்கையாளர்களை கட்டிப்போட்டுள்ளன.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி மீண்டும் துவங்கியது!

இந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் லைவ்வயர் கடந்த மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதல்கட்டமாக தனது தாயகமான அமெரிக்காவில் இந்த புதிய பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்தது. அதிசெயல்திறன் மிக்க இந்த எலெக்ட்ரிக் பைக் வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி மீண்டும் துவங்கியது!

விற்பனை துவங்கி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இந்த பைக்கில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதாக பரபரப்பு செய்தி வெளியானது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையில், ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் பைக்கில் சார்ஜ் ஏற்றும்போது தொழில்நுட்பப் பிரச்னை ஏற்பட்டதாகவும், இதனையடுத்து உற்பத்தியும், வினியோகமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி மீண்டும் துவங்கியது!

இதனால், ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் வாங்கிய உரிமையாளர்கள் மற்றும் வாங்க காத்திருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியும், ஏமாற்றமும் ஏற்பட்டது. இந்த நிலையில், தி வெர்ஜ் பத்திரிக்கைக்கு ஹார்லி டேவிட்சன் அளித்துள்ள விளக்கத்தில், லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி மீண்டும் துவங்கியது!

ஒரே ஒரு பைக்கில் மட்டும் சார்ஜ் ஏற்றும்போது பிரச்னை எழுந்ததாகவும், அதற்கான காரணம் கண்டறியப்பட்டு, தீர்வும் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி துவங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மிகவும் பாதுகாப்பானதாகவும் ஹார்லி டேவிட்சன் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை செய்தி கொடுத்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி மீண்டும் துவங்கியது!

இந்த பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட், 4.3 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளூடூத் மூலமாக ஸ்மார்ட்ஃபோனை இணைக்கும் வசதி, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி, டிராக்ஷன் கன்ட்ரோல், ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி மீண்டும் துவங்கியது!

இந்த பைக்கில் 15.5 kWh திறன் வாய்ந்த பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் மின் மோட்டார் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த பைக் மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மணிக்கு 150 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 235 கிமீ தூரம் பயணிக்கும் என்று ஹார்லி தெரிவிக்கிறது.

Source: The Verge

Most Read Articles

English summary
Harley-Davidson has resumed production of Livewire electric bike in US.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X