Just In
- 4 hrs ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 6 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 8 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 9 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்!
பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் இரண்டு புதிய ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு மாடல்களில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இதில், ஆப்டிமா E-5 மற்றும் Nyx E5 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களின் அதிக தூரம் பயணிக்கும் மாடல்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை ஆப்டிமா ER மற்றும் Nyx ER என்ற பெயர்களில் வந்துள்ளன.

இந்த ஸ்கூட்டர்களில் கூடுதல் பயண தூரத்தை வழங்க வல்ல திறன் வாய்ந்த பேட்டரியுடன் வந்துள்ளது. அதாவது, இரு மடங்கு கூடுதல் பயணத்தை தூரத்தை வழங்கும் மின் தேக்க திறனை இந்த புதிய மாடல்களில் இடம்பெற்றுள்ள பேட்டரிகள் வழங்கும்.

ஆனால், பழைய மாடல்களில் இருக்கும் அதே மின் மோட்டார்கள் தக்க வைக்கப்பட்டுள்ளன. ஹீரோ ஆப்டிமா ER எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 600W BLDC எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில், 48V திறன் வாய்ந்த பேட்டரி இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 40 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4.5 மணிநேரம் பிடிக்கும்.

அடுத்து, ஹீரோ Nyx ER ஸ்கூட்டரிலும் 48V பேட்டரியும், 600W BLDC மின் மோட்டாரும்தான் பன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அதிகபட்ச வேகம், பயண தூரம் ஆகியவையும் ஒன்றுதான். ஆனால், டிசைனில் மட்டுமே வேறுபடுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் பேசி ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சோஹிந்தர் கில்," எங்களது ஆப்டிமா மற்றும் என்ஒய்எக்ஸ் ஸ்கூட்டர்களின் பயண தூரம் குறித்து வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அதன் அடிப்படையில், கூடுதல் தூரம் பயணிக்கும் விதத்தில், இந்த ஸ்கூட்டர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அதிக செயல்திறன், கூடுதல் பயண தூரம் என்ற சிறப்பம்சங்களுடன் ஃபேம்-2 திட்டத்தின் கீழ் மானியம் பெறும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால், சரியான விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது," என்று கூறினார்.

புதிய ஹீரோ ஆப்டிமா ER ஸ்கூட்டர் ரூ.68,721 எக்ஸ்ஷோரூம் விலையிலும், Nyx ER மாடலானது ரூ.69,754 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். அவான் ட்ரென்ட் இ, ஒகினவா பிரெய்ஸ் மற்றும் ஏத்தர் 450 ஸ்கூட்டர் மாடல்களுடன் இந்த புதிய ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டி போடும்.

இந்த புதிய ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுக நிகழ்ச்சியில், பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய கார்ப்பரேட் அலுவலக திறப்பு விழா குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய கார்ப்பரேட் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.