புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...

ஹீரோ மோட்டோகார்ப் அதன் பிரபலமான மாடல்களில் ஒன்றான கிளாமர் பைக்கை புதிய அப்டேட்டுகளுடன் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...

எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின் வாகனங்களை களமிறக்குதல், குறைந்த மாசினை வெளிப்படுத்தும் வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை அவை செய்து வருகின்றன.

புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...

இதனடிப்படையில், தற்போது பயன்பாட்டில் உள்ள பிஎஸ்-4 எஞ்ஜின்களுக்கு பதிலாக குறைந்த மாசினை வெளிப்படுத்தும் பிஎஸ்-6 தரத்திற்கு புதிய வாகனங்களை அப்டேட் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் வாகனங்களை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...

இந்நிலையில், நாட்டின் மிக முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப், அதன் அனைத்து தயாரிப்புகளையும் பிஎஸ்-6 தரத்தில் உயர்த்துவதற்கான பணியில் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தப்பட்ட கிளாமர், தற்போது சோதனையோட்டம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை ககன் சவுத்ரி என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...

புகைப்படத்தில் உள்ள கிளாமர் பைக் முழுவதுமாக ஸ்டிக்கர்களால் மறைக்கப்பட்ட தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. இருப்பினும், தற்போது விற்பனையில் இருக்கும் கிளாமரைக் காட்டிலும் இது சற்று வித்தியாசமான தோற்றத்தைப் பெற்றிருப்பதை நம்மால் உணர முடிகின்றது.

புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...

அந்தவகையில், உடல் நிறத்திற்கேற்ற கண்ணாடிகள், பின்னிருக்கை பயணிக்கான ரெயில் மற்றும் சிவப்பு நிற ஸ்பிரிங்குகள் உள்ளிட்டவை சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...

புதிய தோற்றம் பெரியளவில் வித்தியாசத்தைப் பெற்றிருப்பதைப் போன்று தோன்றவில்லை. ஏனென்றால், புதிய மாதிரி கிளாமர் பைக் முழுவதுமாக ஸ்டிக்கர்களால் மறைக்கப்பட்டுள்ளது. இதனை, இந்த பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் மூலம் நீங்கள் கண்டறிய முடியும்.

இருப்பினும், அதன் எஞ்ஜினில் சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக செயல்படுகின்ற வகையிலான மாற்றங்கள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...

அந்தவகையில், புதிய கிளாமர் பைக்கில் பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிஎஸ்-4 எஞ்ஜின் கொண்ட கிளாமரைக் காட்டிலும் மிக குறைவான மாசினை வெளிப்படுத்தும்.

உருவம் மற்றும் எஞ்ஜினில் மட்டுமில்லாமல் விலையிலும் புதிய மாற்றத்தைப் பெற இருக்கின்றது, இந்த 2020ம் ஆண்டிற்கான ஹீரோ கிளாமர். இந்த விலையுயர்விற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...

முக்கியமாக புதிய மாசு உமிழ்வு விதி, பாதுகாப்பு விதி (ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் கட்டாயம்), இன்சூரன்ஸ் விலையுயர்வு உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் பைக்கைக் காட்டிலும் புதிய மாடல்கள் 10 சதவீத விலையுயர்வு விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகின்றது.

மேலும், புதிய அப்டேட்டுகளைப் பெற்றிருக்கும் ஹீரோ கிளாமர் பைக்கை அந்நிறுவனம் வருகின்ற 2020ம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே அறிமுகம் செய்ய இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...

முன்னதாக, 2019ம் ஆண்டிற்கான இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் கலந்துக் கொண்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த புதிய மாடல்குறித்த டீசர் வெளியிட்டிருந்தது. அதில், ஹீரோ கிளாமர் பைக்கில் நடுத்தர டிஜிட்டல் தரம் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மூன்று வழி கொண்ட கேடலிடிக் கன்வெர்டர், ப்யூவர் இன்ஜெக்சன் தொழில்நுட்பம் மற்றும் எஞ்ஜின் கன்ட்ரோல் மோடுல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருப்பதை விளக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...

இந்த புதிய அம்சங்கள் கிளாமர் பைக்கை மேலும் சிறப்பான மாடலாக மாற்ற உதவும். மேலும், குறைந்த எரிபொருளில் அதிக மைலேஜ் கொடுக்கவும் வழிவகைச் செய்யும். இதற்காக, தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைக் காட்டிலும் சற்று குறைவான திறனை வெளிப்படுத்துகின்ற வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கருதப்படுகின்றது.

புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...

தற்போதைய கிளாமர் 124.7 சிசி திறன் கொண்ட ஏர் கூல்ட் ஓஎச்சி எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 9 பிஎச்பி மற்றும் 10.35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்றது. இது, 4 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது.

புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...

நாட்டில் இயங்கும் பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதேபோன்று தங்களின் தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்தில் உயர்த்துவதற்கான பணியை மேற்கொண்டிருக்கின்றன. ஒரு சில நிறுவனங்கள் சற்று மேலே சென்று மின் வாகனங்களாக உற்பத்தி செய்யும் பணியைச் செய்து வருகின்றன.

Most Read Articles
English summary
Hero Glamour BS6 Spied. Read In Tamil.
Story first published: Friday, December 6, 2019, 11:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X