இந்திய இளைஞர்களின் கனவு பைக்கிற்கு நிகழ்ந்த சோகம்.. மூடு விழாவிற்கு தயாராகின்றதா கரிஷ்மா உற்பத்தி..?

ஹீரோ நிறுவனத்தின் பிரபல கரிஷ்மா பைக் கடந்த ஆறு மாதங்களில் ஒரு யூனிட்கூட விற்பனைச் செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்கிற்கு நிகழ்ந்த சோகம்... மூடு விழாவிற்கு தயாராகின்றதா கரிஷ்மா உற்பத்தி...?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றாக கரிஷ்மா இருக்கின்றது. இந்த பைக் அறிமுகமான புதிதில் பல இந்திய இளைஞர்களின் கனவு வாகனமாக இருந்தது.

ஆனால், அண்மைக் காலங்களாக சந்தையில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக இந்த பைக் கடும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்கிற்கு நிகழ்ந்த சோகம்... மூடு விழாவிற்கு தயாராகின்றதா கரிஷ்மா உற்பத்தி...?

அந்தவகையில், கடந்த ஆறு மாதங்களில் ஒரு யூனிட் கரிஷ்மா பைக்கூட விற்பனையாகவில்லை என ஹோண்டா நிறுவனம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

கரிஷ்மா பைக் இந்தியாவில் முதல் முறையாக கடந்த 2003ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, இந்த பைக் ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்கிற்கு நிகழ்ந்த சோகம்... மூடு விழாவிற்கு தயாராகின்றதா கரிஷ்மா உற்பத்தி...?

பிரத்யேக டிசைனில் சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமான இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, இந்த பைக்கிற்கு போட்டியாக யமஹா நிறுவனம், அதன் ஆர்15 மாடல் பைக்குகளை 2009ஆம் ஆண்டு களமிறக்கியது.

இந்த பைக்கின் அறிமுகத்தை அடுத்து கரிஷ்மா பைக்கின் விற்பனை சற்றே சரிவைக் காண ஆரம்பித்தது. இதற்கு, கரிஷ்மாவைக் காட்டிலும் குறைவான விலையில் யமஹா ஆர்15 களமிறங்கியதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்கிற்கு நிகழ்ந்த சோகம்... மூடு விழாவிற்கு தயாராகின்றதா கரிஷ்மா உற்பத்தி...?

தொடர்ந்து, கூடுதல் போட்டியாக 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் கேடிஎம் 200 மடால்கள், பஜாஜ் என்எஸ் 200 மற்றும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் உள்ளிட்ட மாடல்கள் களமிறங்கின.

இவையனைத்தும் ஹீரோ கரிஷ்மா பைக்கின் விற்பனையை ஒட்டுமொத்தமாக நிலைகுலைய வைத்துவிட்டது.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்கிற்கு நிகழ்ந்த சோகம்... மூடு விழாவிற்கு தயாராகின்றதா கரிஷ்மா உற்பத்தி...?

இருப்பினும், கடந்த ஆண்டு வரை கணிசமான விற்பனை விகிதத்தை அது பெற்று வந்தது. ஆனால், அதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

கரிஷ்மாவின் இந்த அவலநிலைகுறித்த தகவலை சியாம் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்கிற்கு நிகழ்ந்த சோகம்... மூடு விழாவிற்கு தயாராகின்றதா கரிஷ்மா உற்பத்தி...?

அதில், கடந்த ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கரிஷ்மாவின் ஒரு யூனிட்டைக் கூட, ஹீரோ நிறுவனம் உற்பத்தி செய்யவில்லை என தெரிவித்துள்ளது. இதற்கு அண்மைக் காலங்களாக ஏற்பட்டு வரும் விற்பனை வீழ்ச்சியே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்கிற்கு நிகழ்ந்த சோகம்... மூடு விழாவிற்கு தயாராகின்றதா கரிஷ்மா உற்பத்தி...?

இதனால், இந்த பைக் விரைவில் சந்தையை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என கூறப்படுகின்றது. ஆனால், வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்கிற்கு நிகழ்ந்த சோகம்... மூடு விழாவிற்கு தயாராகின்றதா கரிஷ்மா உற்பத்தி...?

இந்த பைக் இந்திய சந்தையை விட்டு வெளியேற்றப்படுவதற்கு தகுந்த காரணம் இருக்கின்றது. ஏனென்றால், இந்த விற்பனை வீழ்ச்சியானது நடப்பாண்டு மட்டுமின்றி கடந்தாண்டில் இருந்தே நிலவி வருகின்றது. அதன்படி பார்த்தால், கடந்த 2018ம் ஆண்டு வெறும் 314 யூனிட் கரிஷ்மா பைக்குகளை மட்டுமே அந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்கிற்கு நிகழ்ந்த சோகம்... மூடு விழாவிற்கு தயாராகின்றதா கரிஷ்மா உற்பத்தி...?

அதேபோன்று நடப்பாண்டில் பார்த்தோமேயானால் மிக அதிகளவில் குறைந்து 138 யூனிட்டுகளை மட்டுமே அது தயார் செய்துள்ளது.

ஆனால், கடந்த ஆறு மாதங்களாக அதையும் தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது ஹீரோ. இருப்பினும், இந்த பைக்கின் சந்தை வெளியேற்றம்குறித்த தகவலை அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்கிற்கு நிகழ்ந்த சோகம்... மூடு விழாவிற்கு தயாராகின்றதா கரிஷ்மா உற்பத்தி...?

அதேசமயம், கரிஷ்மா பைக்கின் சகோதர மாடலாக களமிறக்கப்பட்டுள்ள ஹீரோ எக்ஸ்டிரீம் 200எஸ் மாடலின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையில் களமிறங்க இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

அத்துடன், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 ஆகிய ட்வின் மாடல் பைக்குகளின் விற்பனையிலும் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்திய இளைஞர்களின் கனவு பைக்கிற்கு நிகழ்ந்த சோகம்... மூடு விழாவிற்கு தயாராகின்றதா கரிஷ்மா உற்பத்தி...?

தொடர்ந்து, புதிய தயாரிப்புகளுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கும் எண்ணம் இல்லவே இல்லை என அது திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக அதன் தற்போதைய தயாரிப்புகளை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தும் பணியை மேற்கொள்ள இருக்கின்றது.

இதன்கரணமாக, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழவிருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவைக்கூட அது புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hero Karizma Sales Register 0 Units In Six Months: Will It Be Discontinued? Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X