பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது ஹீரோ ஸ்பிளென்டர் பைக்!

பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் இந்தியாவின் முதல் பைக் என்ற பெருமையை ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பெற இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது ஹீரோ ஸ்பிளென்டர் பைக்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்காக, வாகனங்களின் எஞ்சின்களை தரம் உயர்த்தும் பணிகளில் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களை மேம்படுத்தி வருகிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது ஹீரோ ஸ்பிளென்டர் பைக்!

அதில், முதலாவதாக ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக் மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பைக்கில் ஐ3எஸ் என்ற ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும். இதனால், எரிபொருள் விரயம் தவிர்க்கப்படுவதுடன், மாசு உமிழ்வும் குறையும்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது ஹீரோ ஸ்பிளென்டர் பைக்!

இந்த பைக்கில் தற்போது 109.15 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.98 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது ஹீரோ ஸ்பிளென்டர் பைக்!

இந்த பைக்கில் கார்புரேட்டர் சிஸ்டத்துடனே வருமா அல்லது ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொடுக்கப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. பிஎஸ்-6 எஞ்சின் தவிர்த்து, வேறு எந்த மாற்றமும் இந்த பைக்கில் இருக்காது என்றே தெரிகிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது ஹீரோ ஸ்பிளென்டர் பைக்!

ஆனால், பிஎஸ்-6 என்பதை குறிக்கும் விதத்தில், பாடி டீக்கெல்கள் அல்லது ஸ்டிக்கர்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக்கிற்கு அண்மையில் ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் பைக்கிற்கு ஐசிஏடி அமைப்பால் பிஎஸ்-6 சான்று வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது ஹீரோ ஸ்பிளென்டர் பைக்!

இந்த சான்று கிடைத்ததும் உற்பத்திக்கு கொண்டு செல்ல முடியும். எனவே, கூடிய விரைவில் இந்த பைக் விற்பனைக்காக டீலர்களுக்கு வந்துவிடும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த பைக் மாடலை தொடர்ந்து பிற இருசக்கர வாகனங்களையும் பிஎஸ்-6 எஞ்சினுடன் அறிமுகம் செய்வதற்கு ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
India's first BS-VI compliant two-wheeler is here. The Hero Splendor i-Smart has now become the first two-wheeler in India to earn BS-VI compatibility. Hero has undercut the deadline set by the government for bs-VI implementation by nearly nine months.
Story first published: Tuesday, June 11, 2019, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X