ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக் பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கை இளைஞர் ஒருவர், ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றியமைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

சுற்றுப்புறச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக, மின் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இதன்காரணமாக, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் பணிகள் அண்மைக் காலங்களாக தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் சுற்றுப்புறச் சூழல் மாசடைவதுடன், அதனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் நாட்டிற்கு பொருளாதார ரீதியாக பல்வேறு இழப்பு ஏற்படுகின்றது. ஆகையால், எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டிற்கு முற்று புள்ளி வைத்துவிட்டு, மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

அந்தவகையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில்கூட, மின் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 12 சதவீத ஜிஎஸ்டி வரியை, மத்திய அரசு 5 சதவீதமாக குறைத்து அறிவித்தது. இதேபோன்று, அந்தந்த மாநில அரசுகளும் சில சலுகைகளை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்க இருக்கின்றது.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

அதேசமயம், மத்திய அரசின் இந்த துரிதமான நடவடிக்கையால், மின் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகளை மின்வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விரைவில் வெளியிட இருக்கின்றன.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

இவ்வாறு, மின் வாகனங்களுக்கான பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்நிலையில், ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கை இளைஞர் ஒருவர் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றியமைத்துள்ளார்.

அதுவும், வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான செலவில் அந்த பைக்கை, எலெக்ட்ரிக் பைக்காக அவர் தயார் செய்துள்ளார்.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

ஹரியானா மாநிலம், ஹிசார் என்ற பகுதியில்தான் இத்தகைய சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் பைக் மெக்கானிக் ஷாப் ஒன்று, ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் பெட்ரோல் எஞ்ஜினை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் எஞ்ஜினைப் பொருத்தியுள்ளார்.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

இந்த நடவடிக்கையால், இந்த பைக் ஜூகாத் எனப்படும் கலப்பின பைக்காக மாறியுள்ளது. இத்தகைய வாகனங்களின் பயன்பாட்டிற்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி தடைவிதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மெக்கானிக், ஹீரோ ஸ்பிளெண்டர் மட்டுமின்றி, பஜாஜ் டிஸ்கவர் உள்ளிட்ட பல்வேறு பைக்குகளை இவ்வாறு பேட்டரி பைக்காக மாடிஃபை செய்துள்ளார்.

இதுகுறித்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்...

இந்த மாற்றத்திற்காக வேக கட்டுப்பாட்டு கருவியுடன் கூடிய பிஎல்டிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கு சக்தியை வழங்கும் வகையில், டீப் டிஸ்சார்ஜ் பேட்டரியை பொருத்தியுள்ளார். இது வெடிப்பு மற்றும் தீ விபத்து குறைவான ஒன்றாக இருக்கின்றது. ஆனால், பேட்டரியின் சார்ஜ் திறன் மற்றும் கெப்பாசிட்டி உள்ளிட்ட தகவல் முழுமையாக வெளியாவில்லை.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

மேலும், பைக்கை மின்வாகனமாக மாற்றியதற்கான, மற்ற பிரத்யேக வேலைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், பேட்டரியை தாங்கும் வகையிலான ரேக் மட்டும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறெந்த மாற்றும் மேற்கொள்ளப்படவில்லை.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

இந்த பைக் நீர் நிறைந்த பகுதியில் செல்லும்போது பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ளும்வகையில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், அதனை பாதுகாக்கின்ற வகையிலான அம்சம் எதுவும்கூட பைக்கில் இடம்பெறவில்லை.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

அதேபோன்று, பேட்டரியில் இருந்து நேரடியான இணைப்பை இந்த மின் மோட்டார் பெற்றுள்ளது. இதனை கட்டுப்பாட்டுடன் இயக்க கியர்பாகஸ் கொடுக்கப்படவில்லை. மேலும், பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை மீண்டும் சார்ஜ் செய்வதற்கான வசதியும் இருப்பதைப்போன்ற காட்சி எதுவும் நம் கண்களுக்கு புலப்படவில்லை.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

ஆகையால், இந்த பேட்டரியை தனியாக கழட்டி, சார்ஜிங் நிலையத்தில் கொடுத்துதான் சார்ஜ் செய்ய முடியும் என கருதப்படுகின்றது. எனவே, இந்த ஹீரோ ஸ்பிளெண்டர் மின்சார பைக்கை பயன்படுத்துவது சற்று சிக்கலாக இருக்கலாம். இந்த மாற்றியமைக்கப்பட்ட, மோட்டார் சைக்கிள் பார்ப்பதற்கு சுவாரஸ்யமானதாக இருந்தாலும், அதன் பயன்பாடு குறித்த நடைமுறை கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றது.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

பைக்கில் செய்யப்பட்ட மாற்றமாக, முன்னதாக நாங்கள் கூறியதைப்போன்றே, பெட்ரோல் எஞ்ஜின்கள் நீக்கப்பட்டு, மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு திறன் வழங்கும் வகையில் ட்ரக்குகளில் பொருத்தப்படும் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதனைத் தாங்கி பிடிக்கின்ற வகையில் ஓர் சட்டம் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளது. இந்த சேஸின் வலிமை எந்த அளவிற்கு உறுதி வாய்ந்தது என்ற தகவல் தெரியவில்லை. இந்த மாற்றத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ. 7,000 செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

இந்த பைக்கில் காணப்படும் பிஎல்டிசி எஞ்ஜின் வேக கட்டுப்பாட்டுடன் காணப்பட்டாலும், முறையான கியர்பாக்ஸ் இணைக்கப்படாத காரணத்தால், சீரற்ற வேகத்தை வெளிப்படுத்தலாம். ஆகையால், இந்த பைக்கை இயக்கும்போது சற்று சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இடம், வாகன ஓட்டிக்கு இடையூறை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகையால், சாலையில் பயணிக்கும்போது, பெரும் பின்விளைவினை இது ஏற்படுத்தலாம்.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

அதேசமயம், சீரற்ற நிலையில் இயங்கும் எஞ்ஜினால், பேட்டரி சூடேற்றப்பட்டு வெடிக்கும் அபாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகையால், இது எந்த அளவிற்கு அதன் உரிமையாளுருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற தகவல் நாம் அறிய முடியாத ஒன்றாக இருக்கின்றது.

ரூ. 10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக பைக்காக மாறிய ஹீரோ ஸ்பிளெண்டர்... சிறப்பு தகவல்!

அதேசமயம், கூடிய விரைவில் இதுபோன்றி மின்வாகன கிட்டுகள், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் எரிபொருள் வாகனங்களில் பொருத்திக் கொள்ளுகின்ற வகையில் எதிர்காலங்களில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு, அரசு விரைவில் ஓர் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கை இளைஞர் ஒருவர், ரூ.10 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றியமைத்துள்ள சூழலில், மற்றொரு இளைஞர் ஒருவர் அதே ஸ்பிளெண்டர் பைக்கை ஹைப்ரிட் பைக்காக மாற்றியுள்ளார்.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இந்த பைக்கின் மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பொதுமக்களிடம் அதிகம் கொண்டு சென்று சேர்க்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம், சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லை என்பது போன்ற ஒரு சில நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இருந்தபோதும் அவற்றை களைய மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது அதற்கு ஓர் உதாரணம். இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறைய தொடங்கியுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

அத்துடன் நாடு முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் கட்டமைக்க தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு படிப்படியாக எடுத்து கொண்டுள்ளது. மத்திய அரசின் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளால் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கவனமும் தற்போது மின்சார வாகனங்களின் மீது திரும்பி வருகிறது. மத்திய அரசு வழங்கி வரும் ஊக்கமே இதற்கு காரணம். இதுதவிர வாகன மாடிபிகேஷன்களில் ஆர்வம் கொண்டுள்ள தனி நபர்கள் சிலரும் கூட, பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றம் செய்து வருகின்றனர்.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இந்த வரிசையில் பெட்ரோலில் இயங்க கூடிய ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ரோ (Hero Splendor Pro) பைக் ஒன்று ஹைப்ரிட் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாடிபிகேஷன் செய்யப்பட்ட இந்த பைக் பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் இயங்கும். இது தொடர்பான வீடியோ யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

க்ரியேடிவ் சயின்ஸ் என்ற யூ-டியூப் சேனல்தான் இந்த வீடியோவை அப்லோட் செய்துள்ளது. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ரோ பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்ற பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது. அத்துடன் பார்வையாளர்களுக்கு அதன் படிநிலைகளும் தெளிவாக விளக்கி கூறப்பட்டுள்ளன.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இதன்படி பெரும்பாலான மாடிபிகேஷன்கள் பைக்கின் பின் பகுதி மற்றும் இருக்கைக்கு அடியில்தான் செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு பின் பக்க வீல் மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிய 17 இன்ச் ஆஃப்டர் மார்க்கெட் வீல் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டாக் யூனிட்டை காட்டிலும் இந்த வீல் அகலமாக காணப்படுகிறது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

அதேபோல் ரியர் ஃபோர்க்கும் மாற்றப்பட்டு, அகலமான ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இது ஹோண்டா ஷைன் பைக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைசேஷன் ப்ராஜெக்டில், பேட்டரியை இன்ஸ்டால் செய்வதுதான் மிகவும் சிக்கலான காரியமாக இருந்திருக்கலாம். எனினும் ஸ்டாக் சீட் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு, ஃப்ரேமுக்கு அடியில் சில மாடிபிகேஷன்களை செய்து பேட்டரியை தஞ்சமடைய செய்துள்ளனர்.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

அதே சமயம் ஸ்டாக் ரியர் சஸ்பென்ஸன் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக நீளமான யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி கனகச்சிதமாக பொருந்த இது கூடுதல் இட வசதியை வழங்கியுள்ளது. இதில், 72v, 30 amp லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால், 90-100 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

பாதுகாப்பை முன்னிட்டு, ஸ்டீல் பாக்ஸில் பேட்டரி உறையிடப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்டாக் ஏர் ஃபில்டர் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் எலெக்ட்ரிக் இன்ஜினிற்கான கண்ட்ரோலர் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பைக் ஆஃப்டர் மார்க்கெட் எச்பி ஏர் ஃபில்டரையும் பெற்றுள்ளது. அதே சமயம் வலது ஹேண்டில்பாரில், எலெக்ட்ரிக் மோட்டாருக்கு என தனியே ஆன்/ஆஃப் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இந்த பைக்கில் மற்றொரு முக்கியமான சிறப்பம்சமும் அடங்கியுள்ளது. அதாவது பெட்ரோல் இன்ஜின் ரன்னிங்கில் இருக்கும்போது, இதன் லித்தியம் அயான் பேட்டரி ஆட்டோமெட்டிக்காக ரீசார்ஜ் செய்து கொள்ளும். இது மிகவும் பயனுள்ள வசதியாக இருக்கும். இது தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதுபோன்ற நபர்களை கண்டறிந்து அரசு ஊக்குவித்தால், இருக்கும் ஒரு சில குறைகளையும் களைந்து, அவர்களால் சிறப்பான ஒரு தயாரிப்பை வெளிக்கொணர முடியும். ஆனால் அரசின் பார்வை படாததால் இதுபோன்ற நபர்கள் பலர் காணாமல் போய் விடுகின்றனர் என்பதே உண்மை.

Source: Creative Science/YouTube

Most Read Articles

English summary
Hero Splendor Modified With EV Kit. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X