ஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...

ஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களின் டெலிவரி தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...

இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மே மாதம் பல்வேறு புதிய இரு சக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் மிகவும் பிஸியாக இருந்தது. கடந்த மே மாதம் ஹீரோ மோட்டோகார்ப் மொத்தம் 5 புதிய தயாரிப்புகளை களத்தில் இறக்கியது.

ஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...

இதில், மூன்று புதிய மோட்டார்சைக்கிள்கள் மற்றும் இரண்டு ஸ்கூட்டர்கள் அடக்கம். இதன்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் கடந்த மே 1ம் தேதியன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

ஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...

ஆச்சரியம் அளிக்கும் விதமாக எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் மாடலையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அன்றைய தினம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது நேக்கட் ரக எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஃபுல்-ஃபேர்டு மாடல் ஆகும்.

ஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...

இதில், எக்ஸ்பல்ஸ் 200 மாடலின் விலை 97 ஆயிரம் ரூபாய். இது எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் கார்புரேட்டர் வேரியண்ட் விலை ஆகும். அதே சமயம் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் ப்யூயல் இன்ஜெக்ஸன் வேரியண்ட்டின் விலை 1.05 லட்ச ரூபாய்.

ஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...

அதே நேரத்தில் எக்ஸ்பல்ஸ் 200டி மாடலின் விலை 94 ஆயிரம் ரூபாயாகவும், எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலின் விலை 98,500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...

இந்த சூழலில் உள்நாட்டு மார்க்கெட்டில் எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய மாடல்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...

இதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக மேஸ்ட்ரோ 125 மற்றும் அப்டேட் செய்யப்பட்ட ப்ளஷர் ப்ளஸ் ஆகிய இரண்டு ஸ்கூட்டர் மாடல்களையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதில், மேஸ்ட்ரோ 125தான் இந்தியாவின் முதல் ப்யூயல் இன்ஜெக்ஸன் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 6,52,028 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து எடுத்து கொண்டால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஒரே மாதத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்தது இதுவே முதல் முறை.

ஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...

அத்துடன் கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 13 சதவீத வளர்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5 இரு சக்கர வாகனங்கள் வரும் மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு கணிசமான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hero Xpulse 200, 200T, Xtreme 200S Delivery Begins. Read in Tamil
Story first published: Saturday, June 15, 2019, 19:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X