மே தினத்தில் அறிமுகமான ஹீரோவின் மலிவு விலை பைக்குகள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

ஹீரோ கடந்த 1ம் தேதியான உழைப்பாளர்கள் தினத்தில் மலிவு விலையில் இரண்டு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இதில், மிகவும் மலிவான விலையில் களமிறங்கியிருக்கும் எக்ஸ்பல்ஸ் 200டி மாடலைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

உழைப்பாளர்கள் தினத்தில் அறிமுகமான ஹீரோவின் மலிவு விலை பைக்குகள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

நீண்ட கால இழுத்தடிப்பிற்கு பின்னர் ஹீரோ நிறுவனம், அதன் ட்வின் பைக்குகளான எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களையும் கடந்த 1ம் தேதியான உழைப்பாளர்கள் தினத்தன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மேலும், அன்றைய தினத்திலேயே சர்ப்ரைஸாக எக்ஸ்ட்ரீம் 200எஸ் மோட்டார்சைக்கிளையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது.

உழைப்பாளர்கள் தினத்தில் அறிமுகமான ஹீரோவின் மலிவு விலை பைக்குகள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

இதில், எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிள் ஆஃப்ரோடு பயணத்திற்கு ஏற்பவும், எக்ஸ்பல்ஸ் 200டி டூரிங் ரகத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேசமயம், எக்ஸ்ட்ரீம் 200எஸ் மிகவும் அழகுப்படுத்தப்பட்ட ஸ்போர்ட் ரக மாடலாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள்களில் எக்ஸ்பல்ஸ் 200டி மாடல் மிகவும் கட்டுப்படியான மாடலாக பார்க்கப்படுகின்றது. அதற்கான 5 காரணங்களை இந்த பதிவில் கீழே காணலாம்.

உழைப்பாளர்கள் தினத்தில் அறிமுகமான ஹீரோவின் மலிவு விலை பைக்குகள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

எக்ஸ்ட்ரீம் 200ஆர் எஞ்ஜின்:

மலிவான விலையில் களமிறங்கி இருக்கும் எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிள்களில் 199.6 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே எஞ்ஜினை ஹீரோ நிறுவனம் அதன் நான்கு மாடல் மோட்டார்சைக்கிள் பயன்படுத்தி வருகின்றது. அந்தவகையில், அதிக விலையில் விற்பனையாகும் எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கிலும் இதே எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

உழைப்பாளர்கள் தினத்தில் அறிமுகமான ஹீரோவின் மலிவு விலை பைக்குகள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

இத்துடன், தற்போது வெளிவந்திருக்கும் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய பைக்குகளிலும் இந்த எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 18.4 பிஎஸ் பவரையும், 17.1 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டு. மேலும், இதில் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

உழைப்பாளர்கள் தினத்தில் அறிமுகமான ஹீரோவின் மலிவு விலை பைக்குகள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

வித்தியாசமான ஸ்டைல்:

புதிதாக களமிறகி இருக்கும் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிள் ட்வின் பைக்குகளாக வந்திருந்தாலும், இவை இரண்டும் மிகப்பெரிய அளவில் வித்தியாசங்களைப் பெற்றுள்ளன. அந்தவகையில், சஷ்பென்சன் உள்ளிட்ட அமைப்புகள் சற்று வித்தியாசமாக காணப்படுகின்றது.

உழைப்பாளர்கள் தினத்தில் அறிமுகமான ஹீரோவின் மலிவு விலை பைக்குகள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிள் ரோட்-பயாஸ்ட் வேரியண்டாக இருக்கின்றது. அதற்கேற்ப இதன் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 7 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் மோனோசாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், எம்ஆர்எஃப் ட்யூப்லெஸ் டயருடன் கூடிய 17 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த மோட்டார்சைக்கிள், எக்ஸ்பல்ஸ் 200ஐ காட்டிலும் சிறிய மற்றும் எடை குறைவான மாடலாக இருக்கின்றது.

உழைப்பாளர்கள் தினத்தில் அறிமுகமான ஹீரோவின் மலிவு விலை பைக்குகள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

3. தொழில்நுட்ப வசதிகள்:

ஹீரோ நிறுவனத்தின் இந்த எக்ஸ்பல்ஸ் ட்வின் மாடல்கள் மலிவான விலையில் களமிறக்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டிருப்பதில் எந்தவொரு குறைவுமின்றி இருக்கின்றது. அந்தவகையில், இந்த மோட்டார்சைக்கிளில், அனைவருக்கும் ஈர்க்கும் வகையில், ப்ளூடூத் இணைப்பு வசதியுடன், முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது.

உழைப்பாளர்கள் தினத்தில் அறிமுகமான ஹீரோவின் மலிவு விலை பைக்குகள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

இது, வாகனத்தின் வேகம் , பெட்ரோல் அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நமக்கு வழங்கும். மேலும், இந்த மோட்டார்சைக்கிளில், எல்இடி மின் விளக்கு மற்றும் பாதுகாப்பு வசதியாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

உழைப்பாளர்கள் தினத்தில் அறிமுகமான ஹீரோவின் மலிவு விலை பைக்குகள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 ஆகியவற்றிற்கு இடையிலான வடிவமைப்பு சார்ந்த மாற்றங்கள்:

டூரிங் மாடலை குறிக்கோளாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதால், எக்ஸ்பல்ஸ் 200டி மாடலில் சற்று விரிந்த ஹேண்டில் பார்கள் மற்றும் ரிப்ட் இருக்கை பொருத்தப்பட்டுள்ளன. இது, ஆஃப்ரோடு மற்றும் ஆன்ரோடு பயணத்தில் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். இத்துடன் வழக்கமான எக்சாஸ்ட் சிஸ்டத்தைக் காட்டிலும், ஆப்ரோடு பயணத்ததிற்கு வழங்கப்படுவதைப்போன்று சற்று உயர்த்தப்பட்ட சைலென்சர் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

உழைப்பாளர்கள் தினத்தில் அறிமுகமான ஹீரோவின் மலிவு விலை பைக்குகள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

5. போட்டி பைக்குகளுக்கு வில்லன்:

நீண்ட தூர பயணத்தை விரும்புபவர்களுக்கு இந்த மோட்டார்சைக்கிள் பெரும் பயனுள்ள வகையில் அமையும். அதேசமயம், இதன் விலை மற்ற டூரிங் பைக்குளைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, எக்ஸ்பல்ஸ் 200டி மாடலுக்கு போட்டியாக இருக்கும் பஜாஜ் அவென்ஜர் 220 ஸ்ட்ரீட் பைக்கை காட்டிலும் ரூ 9,891 குறைவாகவும், சுஸுகி இன்ட்ரூடர் (எஃப்ஐ) வேரியண்டைக் காட்டிலும் ரூ. 7,362 குறைவான விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்த வகையில், இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ. 97 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உழைப்பாளர்கள் தினத்தில் அறிமுகமான ஹீரோவின் மலிவு விலை பைக்குகள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

மேற்கூரிய, இந்த 5 காரணங்கள் ஹீரோ நிறுவனத்தால் விற்பனைக்கு களமிக்கப்பட்டிருக்கும், புதிய டூரிங் ரக எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிளை வாங்க முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
New Hero Xpulse 200T — Here's Everything You Need To Know About India's Most Affordable ADV. Read In Tamil.
Story first published: Saturday, May 4, 2019, 16:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X