உழைப்பாளர் தினத்தை சிறப்பித்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு: மகிழ்ச்சியில் ஹீரோ...

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

உழைப்பாளர் தினத்தை சிறப்பித்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு: மகிழ்ச்சியில் ஹீரோ...!

இருசக்கர வாகன தயாரிப்பில் கொடிகட்டி பறந்து வரும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், உழைப்பாளர்கள் தினத்தை சிறப்பிக்கும் வகையில், கடந்த மே மாதம் 1ம் தேதி, எக்ஸ்பல்ஸ் ட்வின் பைக்குகளை இந்தியச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இத்துடன், எக்ஸ்ட்ரீம் 200எஸ் என்ற புதிய மாடலையும் கூடுதலாக அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

உழைப்பாளர் தினத்தை சிறப்பித்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு: மகிழ்ச்சியில் ஹீரோ...!

இதில், எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கை அந்த நிறுவனம், எக்ஸ்ட்ரீம்200ஆர் மாடலைத் தழுவி, மிகவும் நேர்த்தியாக உருவாக்கியிருந்தது. அவ்வாறு, பைக்கின் ஒவ்வொரு பாகமும், மிக நுணுக்கமாக அழகான தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கிற்கு ஸ்டைலிஸான ஸ்போர்ட்டி லுக் வழங்கப்பட்டது. அதேசமயம், இதனை மலிவு விலையில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது.

உழைப்பாளர் தினத்தை சிறப்பித்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு: மகிழ்ச்சியில் ஹீரோ...!

இதன், சிறப்பான தோற்றம் மற்றும் மலிவு விலையின் காரணமாக, தற்போது எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல் பைக்கிற்கு, எக்ஸ்பல்ஸ் ட்வின் பைக்குகளைக் காட்டிலும் நல்ல வரவேற்பு நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை பைக்வேல் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

உழைப்பாளர் தினத்தை சிறப்பித்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு: மகிழ்ச்சியில் ஹீரோ...!

இதுகுறித்து, ஹீரோ நிறுவனத்தின் டீலர்கள் கூறியாதவது, "எக்ஸ்ட்ரீம் 200எஸ் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைப் பெற்றிருப்பதன் காரணமாக, இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. அதேசமயம், அதன் விலையும் மலிவாக இருப்பதால், தற்போது கூடுதல் டிமாண்ட் அந்த பைக்கிற்கு ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

உழைப்பாளர் தினத்தை சிறப்பித்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு: மகிழ்ச்சியில் ஹீரோ...!

எக்ஸ்ட்ரீம் 200எஸ் மற்றும் எக்ஸ்பல்ஸ் ட்வின் ஆகிய மூன்று பைக்குகளிலும் ஒரே திறன் கொண்ட எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 199.6 சிசி திறன் கொண்ட, ஏர் கூல்ட், 4 ஸ்ட்ரோக், 2 வால்வ், சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின்தான் இந்த பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ளன.

உழைப்பாளர் தினத்தை சிறப்பித்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு: மகிழ்ச்சியில் ஹீரோ...!

இது, 18.4 பிஎஸ் பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 17.1என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மாடலின் கார்ப் வெர்ஷனின் விலை, ரூ. 97 ஆயிரமாகவும், எஃப்ஐ வெர்ஷன் ரூ. 1.05 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

உழைப்பாளர் தினத்தை சிறப்பித்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு: மகிழ்ச்சியில் ஹீரோ...!

அதேபோன்று, எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ரூ. 94 ஆயிரம் என்ற டில்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்து வருகின்றது. இவை இரண்டைக் காட்டிலும் கணிசமான விலையுயர்வாக ரூ. 98,500 என்ற விலையில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உழைப்பாளர் தினத்தை சிறப்பித்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு: மகிழ்ச்சியில் ஹீரோ...!

இதில், எக்ஸ்பல்ஸ் ட்வின் பைக்குகள் கணிசமான அளவில் நல்ல விற்பனை வளர்ச்சியைச் சந்தித்து வருகின்றன. ஆனால், இவற்றைக் காட்டிலும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல் பைக்கின் விற்பனை கூடுதல் வரவேற்பைப் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்த பைக் பெற்றிருக்கும் ஸ்போர்ட்டி லுக்கிலான ரம்மியமான தோற்றமே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகின்றது.

உழைப்பாளர் தினத்தை சிறப்பித்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு: மகிழ்ச்சியில் ஹீரோ...!

எக்ஸ்பல்ஸ் ட்வின் குடும்பத்தில் வெளிவந்திருக்கும் பைக்குகளில் ஒன்று அட்வென்சர் ரகத்திலும், மற்றொன்று டூரிங் ரகத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கைக் காட்டிலும் இவை குறைவான விற்பனையைப் பெற்றிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. அதேசமயம், இந்த ரகத்தில் தற்போது இந்தியச் சந்தையில் விற்பனையாகும் பைக்குகளிலேயே இவைதான் மலிவான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

உழைப்பாளர் தினத்தை சிறப்பித்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு: மகிழ்ச்சியில் ஹீரோ...!

இந்த பைக்குகளுக்கான புக்கிங் அண்மைக் காலங்களாக நடைபெற்று வரும்நிலையில், இன்னும் டெலிவரி தொடங்கப்படவில்லை. இதனை, இம்மாதத்தின் மத்தியில் ஹீரோ நிறுவனம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் வரவும் அப்போதே தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Hero Xtreme 200S Demand More Than XPulse Range. Read In Tamil.
Story first published: Friday, June 7, 2019, 10:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X