டூ வீலர்களுக்கு தெறிக்கவிடும் சிறப்பு சலுகைகளை அறிவித்த ஹோண்டா... திணறி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

ஹோண்ட நிறுவனம் அதன் இருசக்கர வாகனங்களின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய சலுகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டூ வீலர்களுக்கு தெறிக்கவிடும் சிறப்பு சலுகைகளை அறிவித்த ஹோண்டா... திணறி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக புதிய சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, புதிதாக ஹோண்டாவின் ஏதேனும் ஒரு தயாரிப்பினை வாங்கும் வாடிக்கையாளர்களைக் கவுரவிக்கும் விதமாக லாயல்டி கிளப்பிற்கான உறுப்பினர் திட்டத்தை வழங்க இருக்கின்றது. இத்திட்டத்திற்கு "ஹோண்டா ஜாய் கிளப்" என்ற பெயரை அது வைத்துள்ளது.

டூ வீலர்களுக்கு தெறிக்கவிடும் சிறப்பு சலுகைகளை அறிவித்த ஹோண்டா... திணறி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

ஹோண்டா நிறுவனம், பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கும் இந்த கிளப் திட்டத்தினை கடந்த 2018ம் ஆண்டே தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இத்திட்டத்திற்கு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில், இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், அதில் உறுப்பினராக இணைந்து பயனடைந்திருப்பதாக ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கின்றது.

டூ வீலர்களுக்கு தெறிக்கவிடும் சிறப்பு சலுகைகளை அறிவித்த ஹோண்டா... திணறி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

குறிப்பாக இத்திட்டத்தின்கீழ், சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் சர்வீஸ் மேற்கொள்ளுதல், உதிரி பாகங்களை மாற்றிக் கொடுத்தல், அக்ஸசெரீஸ்களை வழங்குதல் மற்றும் வேலையாட்களுக்கான கூலியைப் பெறுதல் போன்றவற்றை அது மேற்கொண்டு வருகின்றது.

இத்துடன், கூடுதலாக வாகனத்தை சிறப்பான முறையில் கழுவி தருதல் மற்றும் பிக், டிராப் உள்ளிட்ட சேவைகளையும் ஹோண்டா நிறுவனம் செய்து வருகின்றது.

டூ வீலர்களுக்கு தெறிக்கவிடும் சிறப்பு சலுகைகளை அறிவித்த ஹோண்டா... திணறி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

அந்தவகையில், புதிய உறுப்பினர் திட்டத்தின்கீழ் ரூ. 2,100 மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதில், ரூ. 349 என்ற தொகையை ஹோண்டா பணமாக (புக் செய்யப்பட்ட 72 மணி நேரம் அல்லது பதிவு மேற்கொள்ளப்பட்ட அடுத்த விநாடி) வழங்குகின்றது.

டூ வீலர்களுக்கு தெறிக்கவிடும் சிறப்பு சலுகைகளை அறிவித்த ஹோண்டா... திணறி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

இத்துடன், கேஷ்பேக்காக 200 ரூபாயை ஏர்டெல் பேமெண்ட் பேங்க் கணக்கில் கொடுக்கின்றது. மேலும், ரூ. 500 வாலட் தொகையை உள்ளூர் விமானத்திற்கான டிக்கெட்டை புக் செய்ய அது வழங்குகின்றது.

டூ வீலர்களுக்கு தெறிக்கவிடும் சிறப்பு சலுகைகளை அறிவித்த ஹோண்டா... திணறி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

கூடுதலாக, மருத்துவம் மற்றும் மாத்திரைகள் போன்றவற்றிற்கும் காப்பீடு திட்டத்தின்கீழ் சலுகைகளை வழங்கி வருகின்றது ஹோண்டா. அத்துடன், விபத்தில் இறக்க நேர்ந்தாலோ அல்லது காயமுற்றாலோ ரூ. 1 லட்சம் வரை காப்பீட்டு தொகை வழங்குகின்றது.

MOST READ: இந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்!

டூ வீலர்களுக்கு தெறிக்கவிடும் சிறப்பு சலுகைகளை அறிவித்த ஹோண்டா... திணறி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

அதேபோன்று, ஏர்டெல் எச்டி மற்றும் எஸ்டி செட்-டாப் பாக்ஸிற்கான ரூ. 500 சலுகை தொகைக்கான கூப்பன் வழங்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி, மேலும் பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கான சலுகை கூப்பனும் இத்திட்டத்தின்மூலம் ஹோண்டா வழங்க இருக்கின்றது.

MOST READ: "புதிய வாகனங்கள் அறிமுகம் கிடையாது" 2020 வாகன கண்காட்சியை புறக்கணிக்க தயாராகும் பிரபல நிறுவனங்கள்...

டூ வீலர்களுக்கு தெறிக்கவிடும் சிறப்பு சலுகைகளை அறிவித்த ஹோண்டா... திணறி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

அந்தவகையில், புக் மை ஷோ, சென்ட்ரல், லைஃப் ஸ்டைல், சுவிக்கி, ஃபிளிப்கார்ட், லெவிஸ், ஃபாஸ்ட்ராக், டைட்டன், பாட்டா, ஓயோ மற்றும் வெஸ்ட் சைட் உள்ளிட்டவற்றிற்கான 15 சதவீத சலுகை கூப்பன் வழங்கப்பட உள்ளது.

MOST READ: விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

டூ வீலர்களுக்கு தெறிக்கவிடும் சிறப்பு சலுகைகளை அறிவித்த ஹோண்டா... திணறி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

மேற்கூறிய அனைத்து சலுகைகளையும், ஹோண்டாவின் ஏதேனும் புதிய இருசக்கர வாகனங்களை வாங்கவிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் வழங்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அது வெளியிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Honda Two-Wheelers Offers Free Joy Club Membership To New Customers: All Details & Benefits. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X