புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் வேரியண்ட் விபரம்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்களை வேரியண்ட் வாரியாக காணலாம்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் வேரியண்ட் விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரானது ஸ்டான்டர்டு, அலாய் வீல்கள் மற்றும் டீலக்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில், அடிப்படை அம்சங்கள் கொண்ட விலை குறைவான மாடலாக ஸ்டான்டர்டு மற்றும் அதிக சிறப்பம்சங்கள் பொருந்திய மாடலாக டீலக்ஸ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் வேரியண்ட் விபரம்!

ஸ்டான்டர்டு வேரியண்ட்

விலை: ரூ.67,490

ஆரம்ப விலை கொண்ட இந்த ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் முன்சக்கரத்தில் 12 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 10 அங்குல ஸ்டீல் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன. இதில், அனலாக் மானியுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. டிஜிட்டல் டிஸ்ப்ளே இல்லை. சைடு ஸ்டான்டு போட்டிருந்தால், எஞ்சினை ஸ்டார்ட் செய்ய விடாமல் தவிர்க்கும் தொழில்நுட்மும் இல்லை. ஹாலஜன் பல்புடன் கூடிய ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் வேரியண்ட் விபரம்!

அலாய் வேரியண்ட்

விலை: ரூ.70,990

பேஸ் வேரியண்ட்டில் ஸ்டீல் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த வேரியண்ட்டில் கூடுதலாக அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. இதில், ஸ்டார்ட்- ஸ்டாப் மற்றும் முன்சக்கரத்திற்கான டிஸ்க் பிரேக் தேர்வு இல்லை. எல்இடி ஹெட்லைட், அனலாக் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளேவுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சைடு ஸ்டான்டு போட்டிருந்தால் எஞ்சின் ஸ்டாரட் ஆவதை தவிர்க்கும் வசதிகள் உள்ளன.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் வேரியண்ட் விபரம்!

டீலக்ஸ் வேரியண்ட்

விலை: ரூ.74,490

அனைத்து சிறப்பு வசதிகளும் பொருந்திய இந்த வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் - அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை உள்ளன. இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக நிகழ்நேர எரிபொருள் செலவு, இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும். இந்த வேரியண்ட்டில் கூடுதலாக ஐட்லிங் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம் மற்றும் முன்சக்கரத்திற்கான 190 மிமீ டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அலாய் வீல்களும் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் வேரியண்ட் விபரம்!

எஞ்சின்

புதிய ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் எஞ்சின் கார்புரேட்டருக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தின் துணையுடன் இயங்குகிறது. இந்த மாடலானது அதிகபட்சமாக 8.1 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய மாடலைவிட செயல்திறன் குறைவுதான். ஆனால், குறைவான மாசு உமிழ்வையும், 13 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும் சாத்தியப்படுத்துகிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் வேரியண்ட் விபரம்!

செல்ஃப் ஸ்டார்ட் மோட்டார்

இந்த புதிய ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரில் புதிய செல்ஃப் ஸ்டார்ட் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. பழைய மோட்டார் போன்று அல்லாமல் சப்தமே இல்லாமல் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கான வாய்ப்பை இந்த புதிய செல்ஃப் ஸ்டார்ட் சிஸ்டம் வழங்கும்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் வேரியண்ட் விபரம்!

முன்பதிவு & டெலிவிரி

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஏற்கப்படுகிறது. வரும் 29ந் தேதி முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன. சுஸுகி அக்செஸ் 125, டிவிஎஸ் என்டார்க், வெஸ்பா 125 ஸ்கூட்டர்களுடன் போட்டி போடுகிறது.

Most Read Articles
English summary
The new Honda Activa 125 BS-6 scooter is availale in three variants. Let’s take a look at each variant features in detail.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X