ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் மாடல்கள் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளன. எனவே அவை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருப்பது ஹோண்டா ஆக்டிவா 5ஜி (Honda Activa 5G). இந்த சூழலில் ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் லிமிடெட் எடிசன் வெர்ஷன்களை களமிறக்க ஹோண்டா நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் மாடல்கள் இரண்டு கலர் ஸ்கீம்களில் விற்பனை செய்யப்படும். அத்துடன் எஸ்டிடி (STD) மற்றும் டிஎல்எக்ஸ் (DLX) என இரண்டு வேரியண்ட்களிலும் லிமிடெட் எடிசன் மாடல்கள் கிடைக்கும்.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்

இதில், STD வேரியண்ட்டின் லிமிடெட் எடிசன் மாடல் விலை 55,032 ரூபாயாகவும், DLX வேரியண்ட்டின் லிமிடெட் எடிசன் மாடல் விலை 56,897 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் இந்திய எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்

இதனிடையே ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் மாடல்கள் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கி விட்டன. எனவே வெகு விரைவில் அவை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அத்துடன் பெரும்பாலான ஹோண்டா டீலர்ஷிப்களில் முன்பதிவை ஏற்க தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்

இதுதவிர டெலிவரியும் விரைவிலேயே தொடங்கப்படவுள்ளது. லிமிடெட் எடிசன் மாடல்கள் ஸ்பெஷல் ட்யூயல்-டோன் பெயிண்ட் ஸ்கீம் உடன் வரவுள்ளன. சில்வர்/ப்ளாக் மற்றும் பேர்ல் ஒயிட்/கோல்டு என மொத்தம் 2 ட்யூயல்-டோன் பெயிண்ட் ஸ்கீம்கள் வழங்கப்படவுள்ளன.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்

இருந்தபோதும் அதே 109சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் ஆப்ஷன்தான் ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் மாடல்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவர் மற்றும் 9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இதில், சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்

இதனிடையே ஹோண்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் வெகு விரைவில், ஆக்டிவா ஸ்கூட்டரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஹோண்டா ஆக்டிவா (அல்லது ஆக்டிவா 6ஜி) பல்வேறு புதிய வசதிகள், உபகரணங்கள் ஆகியவற்றுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்

ஹோண்டா நிறுவனம் பெரிய அளவில் அப்டேட் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் விரைவில் அமலுக்கு வரவுள்ள மிக கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையில், இந்த ஸ்கூட்டர் இருக்கும்.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்

ஏற்கனவே குறிப்பிட்டபடி ஹோண்டா ஆக்டிவா இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் முதன்மையானதாக உள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பல்வேறு அப்டேட்களை பெற்றுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்

இதனிடையே லிமிடெட் எடிசன் வேரியண்ட்களை அறிமுகம் செய்வதன் மூலம், புதிய தலைமுறை மாடல் களமிறங்கும் வரை, இந்த ஸ்கூட்டர்களின் விற்பனையை கணிசமாக அதிகரிக்க முடியும் என ஹோண்டா நிறுவனம் நம்புகிறது. இந்திய மார்க்கெட்டில் டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஆகிய ஸ்கூட்டர்களுடன் ஹோண்டா ஆக்டிவா 5ஜி போட்டியிட்டு வருகிறது.

Image Courstesy: Facebook 1, Facebook 2

Most Read Articles
English summary
Honda Activa 5G Limited Edition Arrives At Dealerships — Launch Expected Soon
Story first published: Saturday, May 25, 2019, 16:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X