புதிய அவதாரம் எடுக்கும் ஹோண்டா ஆக்டிவா... விலை, மைலேஜ், இன்ஜின், அறிமுக தேதி குறித்த முழு விபரம்!

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் புதிய அவதாரம் எடுக்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய அவதாரம் எடுக்கும் ஹோண்டா ஆக்டிவா... விலை, மைலேஜ், இன்ஜின், அறிமுக தேதி குறித்த முழு விபரம்!

இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா 5ஜி (Honda Activa 5G) திகழ்கிறது. இன்னும் சொல்லப்போனால் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம், ஹீரோ ஸ்பிளெண்டர் மோட்டார்சைக்கிளை வீழ்த்தி, அதிகம் விற்பனையாகும் இரு சக்கர வாகனம் என்ற இடத்தை இந்த ஸ்கூட்டர் மீண்டும் பிடித்துள்ளது. மார்க்கெட்டில் எப்போதும் ப்ரெஷ் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரை தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டே இருக்கிறது. தற்போதைய மாடல் கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது ஆகும்.

புதிய அவதாரம் எடுக்கும் ஹோண்டா ஆக்டிவா... விலை, மைலேஜ், இன்ஜின், அறிமுக தேதி குறித்த முழு விபரம்!

இந்த சூழலில் புதிய ஆக்டிவா 6ஜி (Activa 6G) ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரானது, தயாரிப்பு நிலை அவதாரத்தில், சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஸ்பை படங்கள் கூட சமீபத்தில் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அவதாரம் எடுக்கும் ஹோண்டா ஆக்டிவா... விலை, மைலேஜ், இன்ஜின், அறிமுக தேதி குறித்த முழு விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் 2019ம் ஆண்டின் மத்தியில், அதாவது தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்னதாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டைலில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களுடன் புதிய மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. இதுதவிர கூடுதலாக சில வசதிகள் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. தற்போது உள்ள 109 சிசி இன்ஜின்தான் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால் எதிர்வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப இந்த இன்ஜின் அப்டேட் செய்யப்படும்.

புதிய அவதாரம் எடுக்கும் ஹோண்டா ஆக்டிவா... விலை, மைலேஜ், இன்ஜின், அறிமுக தேதி குறித்த முழு விபரம்!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி அறிமுக தேதி:

புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதையும் ஹோண்டா நிறுவனம் தற்போது வரை வெளியிடவில்லை. இருந்தபோதும் நடப்பாண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் ஜூன் அல்லது ஜூலையில்.

புதிய அவதாரம் எடுக்கும் ஹோண்டா ஆக்டிவா... விலை, மைலேஜ், இன்ஜின், அறிமுக தேதி குறித்த முழு விபரம்!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி விலை:

பிஎஸ்-6 இன்ஜின், புதிய பிரீமியம் வசதிகள் ஆகியவற்றின் காரணமாக புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் சற்று விலை உயரவுள்ளது. ரூ.56 ஆயிரம் முதல் ரூ.58 ஆயிரம் வரையிலான விலையில், புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் எதிர்பார்க்கப்படுகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

புதிய அவதாரம் எடுக்கும் ஹோண்டா ஆக்டிவா... விலை, மைலேஜ், இன்ஜின், அறிமுக தேதி குறித்த முழு விபரம்!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி இன்ஜின்:

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் தற்போதுள்ள 109 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் பொருத்தப்படவுள்ளது. என்றாலும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் இந்த இன்ஜின் மாற்றம் செய்யப்படும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 8 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 9 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

புதிய அவதாரம் எடுக்கும் ஹோண்டா ஆக்டிவா... விலை, மைலேஜ், இன்ஜின், அறிமுக தேதி குறித்த முழு விபரம்!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி மைலேஜ்:

ஏற்கனவே குறிப்பிட்டபடி ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் பிஎஸ்-6 இன்ஜின் பயன்படுத்தப்படவுள்ளது. மார்க்கெட்டை விட்டு வெளியேறவுள்ள மாடலை காட்டிலும் இது அதிக எரிபொருள் சிக்கனத்திற்கு உகந்தது. எனவே இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 60-65 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Note: Images used are for representational purpose only

Most Read Articles
English summary
Honda Activa 6G Expected Price, Specifications, Mileage, Launch Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X