புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

புதிய தலைமுறை ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி கணிப்புத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டின் அரசனாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விளங்குகிறது. குற

புதிய தலைமுறை ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி கணிப்புத் தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டின் அரசனாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விளங்குகிறது. குறிப்பாக, ஆக்டிவா 110 சிசி மாடல் விற்பனையில் கொடி கட்டி பறந்து வருகிறது. இந்த நிலையில், புதிய தலைமுறை அம்சங்கள் மற்றும் மேம்பட்ட எஞ்சினுடன் புதிய ஆக்டிவா 110 ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

வரும் 21ந் தேதி பத்திரிக்கையாளர் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம் அனுப்பி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது ஹோண்டா ஆக்டிவா 6ஜி (ஆறாம் தலைமுறை மாடல்) ஸ்கூட்டர் அறிமுக நிகழ்ச்சியாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் ஏராளமான புதிய அம்சங்களுடன் வர இருக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், புதிய இருக்கை அமைப்பு, டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருக்கும். இதனால், புதுப்பொலிவுடன் இந்த மாடல் வர இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

இந்த புதிய மாடலில் 12 அங்குல அலாய் வீல்கள், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் வசதி, வெளிப்புறத்தில் அமையப் பெற்ற பெட்ரோல் டேங்க் மூடி ஆகியவை முக்கிய அம்சங்களாக எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

புதிய ஆக்டிவா 110 6ஜி ஸ்கூட்டரில் முக்கிய மாற்றமாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். தற்போதைய எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆனால், புதிய மாடலில் சக்தியை வெளிப்படுத்தும் திறனில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். இந்த புதிய மாடல் எஞ்சினில் கார்புரேட்டருக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

புதிய ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் முன்புறத்தில் புதிதாக டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. பின்புறத்தில், அட்ஜெஸ்ட் வசதியுடன் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் இ"ம்பெர்றிருக்கும். சேஸீயிலும் முக்கிய மாற்றத்துடன் கையாளுமை மேம்படுத்தப்பட்டு இருப்பதாக ஹோண்டா வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

ஏற்கனவே ஹோண்டா ஆக்டிவா 125 சிசி ஸ்கூட்டரிலும், ஹோண்டா ஷைன் எஸ்பி பைக்கிலும் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது மாடலாக ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர் பிஎஸ்-6 எஞ்சினுடன் வர இருக்கிறது. தற்போதைய மாடலைவிட ரூ.5,000 முதல் ரூ.10,000 வரையில் கூடுதல் விலையில் எதிர்பார்க்கலாம்.

குறிப்பு: மாதிரிக்காக ஹோண்டா ஆக்டிவா 5ஜி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Via- Gaadiwaadi

Most Read Articles
English summary
According to report, Honda Motorcycles and Scooters India limited is Likely to launch new generation Activa 110 scooter with BS-6 compliant in India On 21st December.
Story first published: Saturday, December 14, 2019, 11:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X