சான்ஸே இல்ல... ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் படைத்த பிரம்மாண்ட சாதனை... என்னவென்று தெரிந்தால் அசந்து விடுவீர்கள்...

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்கூட்டர் எதுவென்று கேட்டால், பச்சை குழந்தை கூட ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) என சரியாக சொல்லி விடும். அந்த அளவிற்கு இந்தியர்கள் மத்தியில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்திய இரு சக்கர வாகன சந்தையில், மோட்டார்சைக்கிள்களை விட ஒரு ஸ்கூட்டர் ஆதிக்கம் செலுத்துவது ஆச்சரியமான விஷயம்தான்.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் படைத்த பிரம்மாண்ட சாதனை... என்னவென்று தெரிந்தால் அசந்து விடுவீர்கள்...

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இந்திய மார்க்கெட்டில் கடந்த 2001ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் 2.20 கோடிக்கும் அதிகமான ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இவ்வளவு ஆண்டுகளை கடந்த பிறகும் கூட இன்றும் ஹோண்டா ஆக்டிவா இந்திய மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டேதான் உள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் படைத்த பிரம்மாண்ட சாதனை... என்னவென்று தெரிந்தால் அசந்து விடுவீர்கள்...

இதற்கு தற்போது வெளியாகியுள்ள ஒரு புள்ளி விபரம் ஒரு உதாரணம் மட்டுமே. இந்தியாவில் நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனம் என்ற பெருமையை ஹோண்டா ஆக்டிவா பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் ஏறக்குறைய 14 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் படைத்த பிரம்மாண்ட சாதனை... என்னவென்று தெரிந்தால் அசந்து விடுவீர்கள்...

இந்தியாவில் நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் பாதியில் (கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை), 13,93,256 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனமாக ஹோண்டா ஆக்டிவா உருவெடுத்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் படைத்த பிரம்மாண்ட சாதனை... என்னவென்று தெரிந்தால் அசந்து விடுவீர்கள்...

ஒவ்வொரு நிமிடமும் 5 புதிய வாடிக்கையாளர்கள் ஆக்டிவா ஸ்கூட்டரை வீட்டிற்கு ஓட்டி செல்வதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு டூவீலர் சந்தையில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை மட்டும் தனியாக 14 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் படைத்த பிரம்மாண்ட சாதனை... என்னவென்று தெரிந்தால் அசந்து விடுவீர்கள்...

இதன் மூலம் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் 56 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அசைக்க முடியாத தலைவனாக உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி ஹோண்டா நிறுவனம் தனது தனித்துவமான ஸ்கூட்டரான ஆக்டிவாவை கடந்த 2001ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

MOST READ: இத கேள்விபட்டிருக்க மாட்டீங்க... வானில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன் இருக்கும்... எதற்காக தெரியுமா?

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் படைத்த பிரம்மாண்ட சாதனை... என்னவென்று தெரிந்தால் அசந்து விடுவீர்கள்...

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வழங்கிய சௌகரியம் மற்றும் அதன் ஸ்டைல், மைலேஜ், டெக்னாலஜி ஆகியவை வாடிக்கையாளர்கள் மத்தியில் வெகு வேகமாக பிரபலமடைந்து விட்டன. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் பிரம்மாண்ட வெற்றிக்கு இவை அனைத்தும் மிக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

MOST READ: அதிர்ச்சி... சபரிமலையில் பொன்னாரை தடுத்து நிறுத்தி ஹீரோவான ஐபிஎஸ் அதிகாரி என்ன செய்தார் தெரியுமா?

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் படைத்த பிரம்மாண்ட சாதனை... என்னவென்று தெரிந்தால் அசந்து விடுவீர்கள்...

இதுதவிர ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் நியாயமான விலையும் அதன் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. வாடிக்கையாளர்கள் வழங்கிய அமோக வரவேற்பின் காரணமாக, மோட்டார்சைக்கிள்களை பின்னுக்கு தள்ளி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூவீலர் என்ற பெருமையை கடந்த 2016-17ம் ஆண்டில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முதல் முறையாக பெற்றது.

MOST READ: 66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும்! ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் படைத்த பிரம்மாண்ட சாதனை... என்னவென்று தெரிந்தால் அசந்து விடுவீர்கள்...

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் பயணம் இன்றும் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டுள்ளது. மேலும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டும் வருகிறது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தொடர்பான உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

English summary
Honda Activa Scooter Clocks Almost 14 Lakh Unit Sales In The First Half Of 2019-20. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X