Just In
- 24 min ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 38 min ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 54 min ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 3 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- Sports
ஹர்திக் பாண்டியா தந்தை மாரடைப்பால் மரணம்.. எதிர்பாராத சோகம்!
- Movies
'வில்லனோ, ஹீரோவோ..நீங்க வேற லெவல்ஜி' விஜய் சேதுபதி பிறந்தநாள்.. கொண்டாடும் ரசிகர்கள்!
- News
கோவாக்சின், கோவிஷீல்டு இந்தியாவுக்கு வந்தது எப்படி? .. தடுப்பு மருந்துகளின் தொழில்நுட்பம் என்ன?
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியர்களை கவர விரைவில் அறிமுகமாகிறது பிரத்யேக ஹோண்டா ஆக்டிவா 5ஜி, சிபி ஷைன்...? சிறப்பு தகவல்!
விற்பனை வீழ்ச்சியை சீர் செய்ய ஹோண்டா நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த மாடல்களான ஆக்டிவா 5ஜி மற்றும் சிபி ஷைன் ஆகிய இருசக்கர வாகனங்களின் லிமிடெட் எடிசன் மாடலை பிரத்யேகமாக வடிவமைத்து அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், இந்தியாவில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் எப்போதும் சிறப்பான விற்பனையைச் சந்தித்து வரும்நிலையில், அண்மைக் காலங்களாக கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக அந்த நிறுவனம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் 50 சதவீத விற்பனையை வீழ்ச்சியை அந்த நிறுவனம் சந்தித்தது. தொடர்ந்து, ஏப்ரல் மாதத்திலும் 30 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதிலும், இந்த நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த மாடலாக இருக்கும், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும், சிபி ஷைன் பைக்கும் கடுமையான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்தது. இது, அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக, இந்த இரு மாடல்களின் விற்பனையையும் அதிகரிக்கும் விதமாக ஆக்டிவா மற்றும் சிபி ஷைன் ஆகிய மாடல்களில் சிறப்பு எடிசன் மாடலை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஆங்கில இணையதளமான ரஷ்லேன் வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட அளவில் தயாராகி வரும், ஹோண்டா ஆக்டிவா 5ஜி மற்றும் சிபி ஷைன் 125 மாடல்கள் குறிப்பிட்ட அளவில் காஸ்மெடிக் மாற்றத்தைப் பெற்றுள்ளன. அந்தவகையில், இந்த இரு வாகனங்களும் இரு வண்ணங்களின் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களைக் காட்டிலும் வித்தியசமான தோற்றத்தில் இந்த இருசக்கர வாகனங்களைக் காட்சிப்படுத்தும்.

அதில், ஆக்டிவா ஸ்கூட்டரை அழகுப்படுத்தும் விதமாக, ஸ்கூட்டரின் பாடி, ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட் உள்ளிட்ட பகுதிகளை மிகவும் அழகான முறையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த லிமிடெட் எடிசன் ஸ்கூட்டரின் முன்பக்க பென்டர், அப்ரான் மற்றும் எஞ்ஜின் கவர் உள்ளிட்டவை சிறப்பான வண்ணம் மற்றும் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், ஸ்கூட்டரின் வீல் மற்றும் வெளிப்படையாக காட்சியளிக்கும் பாகங்களுக்கு கருப்பு நிறத்திலான ட்ரீட்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, இந்த ஸ்கூட்டரில் வேறெந்த மாற்றமும் பெரிதாக வழங்கப்படவில்லை. மேலும், இது இருவிதமான வண்ணக் கலவை தேர்வில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது.

அந்தவகையில், மேட் செலன்ஸ் சில்வர் நிறத்திலான பியர்ல் பிரீசியஸ் ஒயிட் கலந்த வண்ணத்திலும், மற்றொன்று ஸ்டிரோன்டியம் சில்வருடன் கூடிய கருப்பு நிறத்திலான மாடலும் களமிறங்க இருக்கின்றன.
தொடர்ந்து, தற்போது விற்பனையில் இருக்கும் ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் இருக்கும் அதே எஞ்ஜின்தான் இதிலும், பொருத்தப்பட உள்ளது. அந்தவகையில், 110சிசி திறன்கொண்ட ஏர்-கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது 8எச்பி பவரையும், 9என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

ஹோண்டா சிபி ஷைன் 125 லிமிடெட் எடிசன் ஸ்கூட்டரிலும் இதேபோன்று கணிசமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்தவகையில், இந்த பைக்கும் இரு வண்ணக் கலவையில் விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளது. அவ்வாறு, சிவப்பு-கருப்பு மற்றும் சில்வர்-கருப்பு ஆகிய நிறங்களில் இந்த பைக் கிடைக்கும். இத்துடன், புதிய விதத்திலான கிராஃபிக்குகளால் இந்த பைக்கினை அலங்கரிக்க இருக்கின்றது.

இதேபோன்று, பாடி ஸ்டைலிலும் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேசமயம், இந்த பைக்கின் முந்தைய மாடலில் உள்ள அதே எஞ்ஜின் தற்போதைய லிமிடெட் எடிசனிலும் பொருத்தப்பட உள்ளது. அந்தவகையில், இந்த பைக்கில் 124.7 சிசி ஏர்-கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது, 4 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

லிமிடெட் எடிசன்களாக களமிறங்கும் இந்த இருசக்கர வாகனங்கள் விலை குறித்த மற்ற தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இவை கூடிய விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Images Are For Representational Purpose Only