ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஹோண்டா சிபி ஷைன் 125 பைக்கின் பிஎஸ்-6 மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வாகனங்களை விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட இருக்கிறது. இதற்கு தக்கவாறு வாகன நிறுவனங்கள் பிஎஸ்-6 மாடல்களை களமிறக்குவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

அந்த வகையில், நாட்டின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹோண்டா தனது முதல் பிஎஸ்-6 மாடலாக ஆக்டிவா 125 ஸ்கூட்டரை களமிறக்கியது. இந்த ஸ்கூட்டருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இதைத்தொடர்ந்து, இன்று பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு நிகரான எஞ்சினுடன் ஷைன் 125 சிசி பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 19 புதிய தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா ஷைன் 125 பைக்கில் ஹோண்டா ஈக்கோ தொழில்நுட்பத்துடன் கூடிய எஞ்சின்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆக்டிவா 125 பிஎஸ் மாடலைப் போன்றே, இந்த பைக்கிலும் சப்தம் இல்லாமல் இயங்கும் ஸ்டார்ட்டர் மோட்டார் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

எஞ்சினில் உராய்வை தவிர்க்கும் விதத்தில் பல புதிய தொழில்நுட்ப மாறுதல்களும், விசேஷ உதிரிபாகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அதிக மைலேஜ் மற்றும் குறைவான மாசு உமிழ்வை இநத் பைக் வழங்கும்.

ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஷைன் 125 பிஎஸ்-6 மாடலில் எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகளும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. நிகழ்நேர எரிபொருள் செலவு, கியர் பொசிஷன் இண்டிகேட்டர், ஈக்கோ இண்டிகேட்டர், சர்வீஸ் ரிமைன்டர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உரிமையாளர் பெற முடியும்.

ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கிற்கு எச்இடி ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், அலாய் வீல்கள், க்ரோம் மஃப்ளர் கவர் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. 5 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட பின்புற சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இதுவரை விற்பனையில் இருந்த மாடலைவிட இந்த புதிய மாடல் நீளத்தில் 13 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. வீல்பேஸ் கூட 19 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், பல்வேறு மாற்றங்கள் இந்த பைக்கில் செய்யப்பட்டுள்ளன.

ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபி ஷைன் 125 எஸ்பி பிஎஸ்-6 மாடலானது இம்பீரியல் ரெட் மெட்டாலிக், பியர்ல் சைரன் புளூ, ஸ்ட்ரைக்கிங் க்ரீன், மேட் ஆக்சிஸ் க்ரே மெட்டாலிக் உள்ளிட்ட வண்ணத் தேர்வுகளில் வர இருக்கின்றது.

ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஹோண்டா சிபி ஷைன் 125 எஸ்பி பிஎஸ்-6 மாடலுக்கு ரூ.72,900 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய மாடலைவிட ரூ.9,000 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
Honda has launched CB Shine 125 with BS6 complaint engine in In India.
Story first published: Thursday, November 14, 2019, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X