ஹோண்டா சிபிஆர்650ஆர்-ன் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்...

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் அனைத்து சிபிஆர் 650ஆர் மாடல் பைக்குகளும் விற்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கிற்கான முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சிகேடி முறையில் அசெம்பிள் செய்யப்பட்டு பின்னர் ஷோரூம்களில் இந்த சிபிஆர் 650ஆர் பைக் விற்கப்பட்டு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஹோண்டா நிறுவனத்தால் ரூ.7.7 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டு இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹோண்டா சிபிஆர்650ஆர்-ன் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்...

பிஎஸ்4 என்ஜினில் இந்த சிபிஆர் 650ஆர் பைக்குகள் குறைந்த அளவில் தான் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. இப்பைக்கின் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட மாடல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா சிபிஆர்650ஆர்-ன் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்...

மேலும் ஹோண்டா நிறுவனம் 300சிசி-500சிசி பிரிவில் புதிய மாடல்களை அடுத்த 18 மாதங்களில் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறது. இந்த 300 - 500 சிசி ரகத்தில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம்தான் 85 சதவீத சந்தை பங்களிப்புடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த மார்க்கெட்டை உடைக்கும் திட்டத்தை ஹோண்டா கையில் எடுத்துள்ளது.

ஹோண்டா சிபிஆர்650ஆர்-ன் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்...

மீண்டும் சிபிஆர் 650ஆர் பைக் விஷயத்திற்கு வருவோம். சிபிஆர் 650ஆர் பைக்கில் நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட லிக்யூடு கூல்டு என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 11,500 ஆர்பிஎம்மில் 87.1 பிஎச்பி பவரையும் 8,000 ஆர்பிஎம்மில் 60.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. எளிதாக மேல் மற்றும் கீழ்புறத்தில் திருகுவதற்கு ஸ்லிப்புடன் கூடிய க்ளட்ச் உடன் உள்ள ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய கியர்பாக்ஸ், இந்த என்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபிஆர்650ஆர்-ன் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்...

சிபிஆர் 650ஆர் பைக்கின் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்பாக முன்புற சக்கரத்தில் 41 மிமீ தலைக்கீழான ஃபோர்க்ஸ் மற்றும் 310 மிமீ டுயூல் டிஸ்க்கும் பின்புற சக்கரத்தில் விருப்பத்திற்கேற்ப மாற்றக்கூடிய மோனோஷாக்ஸ் மற்றும் 240 மிமீ சிங்கிள் டிஸ்க்கும் இணைக்கப்பட்டுள்ளன.

பைக்கின் முன்புறத்தில் நெருப்பு வடிவிலான இரட்டை ஹெட்லைட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஹெட்லைட்ஸ், பின்புற விளக்குகள் மற்றும் இண்டிகேட்டர்ஸ்களில் முழுக்க முழுக்க எல்இடி லைட்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பைக்கை ஓட்டுபவர்கள் தெளிவாக பைக்கின் நிலையை அறிய 7 இன்ச்சில் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபிஆர்650ஆர்-ன் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்...

சாலையில் வேறொரு பைக்கிற்கு மிக அருகில் சென்றால் திடீர் ப்ரேக் சிஸ்டத்தால் எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் செயல்படுத்தப்பட்டுவிடும். ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் அமைப்பிற்காக ஹோண்டா டார்க் கட்டுபாட்டு தேர்வு (எச்எஸ்டிசி) மற்றும் டுயுல் சேனல் ஏபிஎஸ் போன்றவை பைக்கை ஓட்டுபவருக்கு அதிகளவில் பாதுகாப்பு உணர்வை வரவழைக்கும்.

ஹோண்டா நிறுவனம் தனது முதல் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டது. இந்நிறுவனத்தின் சிபி ஷைன் மாடல் விரைவில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தபட இருக்கிறது. இதுகுறித்த முழு தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

ஹோண்டா சிபிஆர்650ஆர்-ன் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்...

ஹோண்டா நிறுவனம் சிபிஆர் 650ஆரின் முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், இந்த பைக்கின் விற்பனையை ஒருபோதும் நிறுத்தாது. இதன்பின் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் பைக்குகளை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்திவிட்டு அதன் பின் தனது மாடல்களின் விலைகளை உயர்த்துவதே ஹோண்டா நிறுவனத்தின் எதிர்கால நோக்கமாகும்.

Most Read Articles
English summary
Honda CBR 650R Sold Out In India: Bookings For The Motorcycle Put On Hold Temporarily
Story first published: Monday, October 21, 2019, 17:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X