வெறும் 8 ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்குகள் மட்டுமே அக்டோபரில் விற்பனை... அதிர்ச்சியில் ஹோண்டா...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தனித்துவமான மாடலாக விளங்கும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் கடந்த அக்டோபர் மாதத்தில் மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

வெறும் 8 ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்குகள் மட்டுமே அக்டோபரில் விற்பனை... அதிர்ச்சியில் ஹோண்டா...

கடந்த 2011 மார்ச் மாதத்தில் ஹோண்டா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் இளைஞர்களின் விருப்பமான மாடல் பைக்குகள் ஒன்றாக தற்போது வரை உள்ளது. ஹோண்டா விஎஃப்ஆர் 1200எஃப் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த பைக் அறிமுகமானதில் இருந்து கடந்த ஆண்டு வரை சுமார் எட்டு வருடங்களாக கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை பெற்றுவந்தது.

வெறும் 8 ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்குகள் மட்டுமே அக்டோபரில் விற்பனை... அதிர்ச்சியில் ஹோண்டா...

ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து பைக்கின் விற்பனை மிகவும் சரிய தொடங்கி கடந்த அக்டோபர் மாதத்தில் வெறும் 8 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு போட்டி மாடல்கள் அதிகளவில் சந்தைக்கு வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் ஹோண்டா நிறுவனம் சிபி300ஆர் பைக் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கும் கடந்த மாதத்தில் பெரியளவில் விற்பனையாகவில்லை. சிபி300ஆரின் கடந்த மாத விற்பனை 75 யூனிட்களாகும். இந்த எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தை விட 21 யூனிட்கள் குறைவு.

வெறும் 8 ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்குகள் மட்டுமே அக்டோபரில் விற்பனை... அதிர்ச்சியில் ஹோண்டா...

ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கின் ஏபிஎஸ் வெர்சன் ரூ.1.77 லட்சத்திற்கும் ஸ்டாண்டார்ட் வெர்சன் ரூ.1.51 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கின் ஏபிஎஸ் வெர்சனின் விலையை ரூ.1.94 லட்சம் வரையிலும் ஸ்டாண்டார்ட் வெர்சனை ரூ.1.65 லட்சம் வரையிலும் அதிகரித்தது.

இந்த விலை அதிகரிப்பு கூட சிபிஆர் 250ஆர்-ன் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும். மேலும் இந்த பைக்கில் நிறம்/கிராஃபிக்ஸ் மற்றும் முழு எல்இடி ஹெட்லைட் யூனிட் என மிகவும் குறைவான அளவிலேயே அப்டேட்கள் செய்யப்பட்டன.

வெறும் 8 ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்குகள் மட்டுமே அக்டோபரில் விற்பனை... அதிர்ச்சியில் ஹோண்டா...

ஹோண்டா சிபி300ஆர் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.2.41 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தினால் பல வெளிநாட்டு சந்தைகளில் இந்த ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் இந்தியாவில் 75 சிபி300ஆர் பைக்குகளே கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளன. இது சிபிஆர் 250ஆரின் விலை அதிகரிப்பால் வாடிக்கையாளர்களுக்கு சிபிஆர் பைக்குகள் மீதான மோகம் குறைந்துவிட்டதை வெளிக்காட்டுகிறது.

வெறும் 8 ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்குகள் மட்டுமே அக்டோபரில் விற்பனை... அதிர்ச்சியில் ஹோண்டா...

ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் 249.6சிசி லிக்யூடு-கூல்டு என்ஜினுடன் விற்பனையாகி வருகிறது. இதன் என்ஜின் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் 26 பிஎச்பி பவரையும் 22.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஹோண்டா சிபி300ஆர், 286சிசி லிக்யூடு-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜினுடன் 31 பிஎச்பி மற்றும் 27.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

வெறும் 8 ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்குகள் மட்டுமே அக்டோபரில் விற்பனை... அதிர்ச்சியில் ஹோண்டா...

சிபிஆர் 250ஆர் பைக்கை விட சிபி300ஆர் எடை குறைவாகவும் அதிக டைனாமிக்கை கொண்டதாகவும் உள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தற்சமயம் தனது பைக்குகளை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக மேம்படுத்தி வருகிறது. சிபிஆர் 250ஆர்-ன் விற்பனை பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது சந்தேகமே.

வெறும் 8 ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்குகள் மட்டுமே அக்டோபரில் விற்பனை... அதிர்ச்சியில் ஹோண்டா...

சிபிஆர் 250ஆர் பைக்கிற்கு, ஹோண்டா நிறுவனத்தின் மற்ற பைக்குகளே சந்தையில் போட்டியாக உள்ளன. இவற்றை எல்லாம் ஹோண்டா நிறுவனம் ஒழுங்குப்படுத்தினால், மீண்டும் இந்திய சந்தையில் சிபிஆர் 250ஆர் பைக் ஒரு ரவுண்ட் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஹோண்டாவின் மற்ற பைக்குகளை தவிர்த்து சிபிஆர் 250ஆர் பைக்கிற்கு இந்திய மார்கெட்டில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310, கேடிஎம் ஆர்சி200, சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250 போன்ற பைக்குகள் இதன் விலை அடிப்படையில் போட்டி மாடல்களாக உள்ளன.

Most Read Articles
English summary
Honda CBR250R sales down to 8 in Oct 2019. Honda CB300R sales increase
Story first published: Monday, November 25, 2019, 18:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X