Just In
- 1 hr ago
தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!
- 5 hrs ago
இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
- 16 hrs ago
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
- 16 hrs ago
ஊழியர்களே இல்லாத பெட்ரோல் பங்க்... மோசடிகளை தடுக்க புதிய அதிரடி... எப்படி செயல்படும் தெரியுமா?
Don't Miss!
- Movies
நிக்கர் தெரிய தொடையை காட்டிய பிரபல விஜய பட நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்!
- News
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றி.. தமிழக அரசு உத்தரவு!
- Technology
ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.!
- Finance
நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது டிவிஎஸ் எக்ஸ்எல் கிடையாது... ஹோண்டாவின் புதிய சிடி 125 மொபட்... அறிமுக விபரம்!
டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மொபட்டுகளைப் போன்று ஹோண்டா நிறுவனம், சிடி 125 மொபட்டை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நம்ம ஊரு கடைக்கார அண்ணாச்சிகளிடம் மிகவும் அதிகமாக புழக்கத்தில் இருந்த வாகனங்களில் பஜாஜ் எம்80 பைக் முக்கிய இடத்தில் இருக்கின்றது. இதன் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே இதன் புழக்கத்தை நம்மால் காண முடிகின்றது.
இதற்கு அடுத்தபடியாக டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல், சேம்ப் உள்ளிட்ட மொபட்டுகள் காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், மேற்கூறிய மாடல்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஹோண்டா நிறுவனம் புதிய மொபட் ரகத்திலான இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மொபட்டிற்கு சிடி 125 என்ற பெயரை அது வைத்திருக்கின்றது. இதனை கான்செப்ட் மாடலாகவே ஹோண்டா நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் தற்போது 2019ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இங்கு பல்வேறு புதிய ரகத்திலான வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ஹோண்டா நிறுவனமும் கமர்சியலுக்கு பயன்படுத்தப்படும் சிடி 125 கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மொபட் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர் கப் 125 மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஹோண்டா சிடி 125 கான்செப்ட் மாடலில் சிறப்பம்சமாக அதன் சைலென்சர் காட்சியளிக்கின்றது. இது மொபட்டிற்கு ஸ்கிராம்ப்ளர் பைக்கைப் போன்ற காட்சியை வழங்குகின்றது. ஆகையால், ஹோண்டா சிடி 125 கமர்சியல் வாகனங்களைப் போன்று அல்லாமல், ஸ்போர்ட்ஸ் வாகனங்களைப் போன்று காட்சியளிக்கின்றது.
இதற்காகவே, இந்த மொபட்டில் ஸ்கிராம்ப்ளர் பைக்குகளில் பயன்படுத்தப்படும் சைலென்சர் பொருத்தப்பட்டுள்ளது. இது, மொபட்டிற்கு மிகவும் ரம்மியமான தோற்றத்தை கொடுக்கின்றது.

இதுமட்டுமின்றி, ஹோண்டா சிடி 125 மொபட்டில் பல்வேறு சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், சிங்கிள் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பிரேஸ்ட் ஹேண்டில்பார் மற்றும் ஹேண்டில் மவுண்டட் இன்டிகேட்டர் மின் விளக்கு உள்ளிட்டவை காணப்படுகின்றது.
தொடர்ந்து, பின் இருக்கைக்குப் பதிலாக சரக்கு ஏற்றிச் செல்லுகின்ற வகையிலான இரும்பு கேரியர் அமைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கரடுமுரடான சாலையில் பயணிப்பதற்கு ஏற்ப சில வசதிகளையும் இந்த மொபட் பெறவருகின்றது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், கான்செப்ட் மாடல் சிடி 125 மொபட்டில் ஸ்போக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஆஃப் மற்றும் ஆன் ரோடுகளில் பயன்படுத்தக்கூடிய டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, இதன் சஸ்பென்ஷனும் இருவித பயன்பாட்டிற்கு உதவுகின்ற வகையிலான சிறப்பம்சத்தைப் பெற்றிருக்கின்றது.

அந்தவகையில், மொபட்டில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், இன்கார்பரேட் ஃபோர்க கெயிட்டர்ஸும் காணப்படுகின்றது. தொடர்ந்து பாதுகாப்பு வசதிக்காக இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மொபட்டில் 124 சிசி திறனை வெளிப்படுத்தும் பெட்ரோல் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 9.38 பிஎச்பி பவரையும், 10.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இந்த புதிய மொபட்டை எந்தெந்த சந்தையில், எப்போது களமிறக்கப்படும் என்ற தகவலை ஹோண்டா இன்னும் வெளிப்படுத்தவில்லை. மேலும், இதன் உற்பத்தி மிக விரைவில் தொடங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னரே இந்தியா போன்ற நாடுகளில் களமிறக்குவது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.