இந்தியர்கள் மனதை வென்ற டியோ-வுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்: ஆச்சரியம் அளிக்கும் தகவல்...!

ஹோண்ட நிறுவனத்தின் மிகவும் பிரபலமான டியோ ஸ்கூட்டர் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியர்கள் மனதை வென்ற டியோ-வுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்: ஆச்சரியம் அளிக்கும் தகவல்...!

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், அதன் டியோ ஸ்கூட்டர் 30 லட்சம் யூனிட்களுக்கும் மேலாக விற்பனையாகி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த டிரெண்டியான லுக்கைப் பெற்றிருக்கும் இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் அதிக பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்கின்றது. அதிலும், இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டராக இருந்து வருகின்றது.

இந்தியர்கள் மனதை வென்ற டியோ-வுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்: ஆச்சரியம் அளிக்கும் தகவல்...!

அந்த வகையில், இந்த ஸ்கூட்டர் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

30 லட்சம் யூனிட்களைக் கடந்து விற்பனாகிக் கொண்டிருக்கும் டியோ, முதல் 15 லட்சம் யூனிட்களை விற்க 14 வருடங்கள் எடுத்துக்கொண்டது. ஆனால், மீதியுள்ள 15 லட்சம் யூனிட்களை விற்க மூன்றே வருடங்கள் மட்டும்தான் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விற்பனையானது அந்த நிறுவனத்திற்கு ஓர் புதிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

இந்தியர்கள் மனதை வென்ற டியோ-வுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்: ஆச்சரியம் அளிக்கும் தகவல்...!

அதேசமயம் இந்த விற்பனை அதிகரிப்பானது, 5 மடங்கு அதிக வேகத்தில் நடைபெற்றிருப்பதை உறுதி செய்கின்றது. அதிகம் விற்பனையாகும் ஹோண்டாவின் தயாரிப்புகளில் டியோவும் ஒரு முக்கியமான பங்குதாரர் என்பதை இந்த விற்பனையின்மூலம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது டியோ.

இந்தியர்கள் மனதை வென்ற டியோ-வுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்: ஆச்சரியம் அளிக்கும் தகவல்...!

ஹோண்டாவின் இந்த டியோவானது, இந்தியா மட்டுமின்றி சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், அங்கும் அதற்கு நல்லபடியான வரவேற்பு நிலவி வருகிறது. அந்தவகையில், ஏற்றுமதியாகும் 44 சதவிகித ஸ்கூட்டர்கள் செக்மெண்டில் பெரும் பங்கினை டியோ பெற்று வருகிறது.

இந்தியர்கள் மனதை வென்ற டியோ-வுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்: ஆச்சரியம் அளிக்கும் தகவல்...!

அவ்வாறு, இந்த ஸ்கூட்டர் 11க்கும் மேற்பட்ட தெற்கு ஆசிய கண்டங்களுக்கு ஏற்றமுதி செய்யப்படுகிறது. இத்துடன், லத்தின் அமெரிக்கன் நாடுகள், நேபால், ஸ்ரீலங்கா, மெக்ஸிோ, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகளுக்கு இந்த ஸ்கூட்டர் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்தியர்கள் மனதை வென்ற டியோ-வுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்: ஆச்சரியம் அளிக்கும் தகவல்...!

இந்த புகழ்வாய்ந்த டியோ ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் 2019ம் ஆண்டிற்கு ஏற்ப அப்கிரேட் செய்து அண்மையில் விற்பனை அறிமுகம் செய்தது. அவ்வாறு, அப்கிரேட் செய்யப்பட்ட இந்த புதிய மாடல் டியோவில், முழுக்க முழுக்க எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட டோக்கோமீட்டரும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மனதை வென்ற டியோ-வுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்: ஆச்சரியம் அளிக்கும் தகவல்...!

மேலும், அனைவரையும் கவரும் வகையில் இந்த ஸ்கூட்டரை 9 விதமான வண்ண தேர்வில் ஹோண்டா நிறுவனம் தயார் செய்துள்ளது. இத்துடன் இந்த ஸ்கூட்டர் ஸ்டாணடர்டு மற்றும் டீலக்ஸ் ஆகிய இரு ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. இதில், ஸ்டாண்டர்டு டியோ வைப்ராண்ட் ஆரஞ்சு, ஸ்போர்ட்ஸ் மஞ்சள், ஸ்போர்ட்ஸ் சிவப்புஸ கேண்டி, ஜாஸி ப்ளூ, மேட் ஆக்ஸிஸ், கிரே மெட்டாலிக் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கின்றது.

இதேபோன்று, டீலக்ஸ் வேரியண்ட் டேஸ்ஸில் மஞ்சள் மெட்டாலிக், மேட் மார்ஷல் க்ரீன் மெட்டாலிக், பியர்ல் இக்னீயூஸ் பிளாக், மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக் உள்ளிட்ட வண்ண தேர்வில் கிடைக்கின்றது.

இந்தியர்கள் மனதை வென்ற டியோ-வுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்: ஆச்சரியம் அளிக்கும் தகவல்...!

இவற்றுடன் இந்த ஸ்கூட்டரில் சிறந்த பெர்பார்மென்ஸுக்காக 110சிசி திறனுடைய 4 ஸ்ட்ரோக் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8 குதிரைகளின் ஓடும் திறனை 7, ஆர்பிஎம்மிலும், 8.91 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 83 வேகத்தில் செல்லக்கூடியது. இதன் விலை எக்ஸ்-ஷோரூமில் ரூ. 52.938ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Honda Dio Crosses The 30 Lakh Sales. Read In Tamil.
Story first published: Wednesday, May 8, 2019, 16:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X