டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?

பிரபல ஹோண்டா இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த மாடல்களான ஆக்டிவா மற்றும் சிபி ஷைன் ஆகிய இரு டூ வீலர்களுக்கும் சில சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?

செப்டம்பர் மாதம் தொடங்கிய முதல் ஒரு சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அதன் குறிப்பிட்ட மாடல்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்து வருகின்றது.

இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக், விலையில் தள்ளுபடி மற்றும் ஆச்சரிய பரிசு உள்ளிட்ட பல நன்மைகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?

இந்நிலையில், பிரபல ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, அதன் இரு புகழ்பெற்ற மாடல்களுக்கும் சிறப்பு சலுகையை அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?

வாகன உற்பத்தி நிறுவனங்களின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அடுத்த வருடம் அமலுக்கு வரவிருக்கும் புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6தான் முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

சுற்றுப்புறச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் விதமாக மத்திய அரசு இதனை வருகின்ற 2020 ஆண்டு ஏப்ரல் மாத்தில் இருந்து கட்டாயமாக்கியுள்ளது. இதன்பின்னர், பிஎஸ்-6 தரத்திற்கு குறைவான வாகனங்களை விற்பனைச் செய்வது குற்றமாகும்.

டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?

ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களிடம் நிலுவையில் உள்ள பிஎஸ்-6 தரத்திற்கும் குறைவான வாகனங்களை சலுகை விலையில் விற்பனைச் செய்ய முடிவெடுத்துள்ளன.

இதனடிப்படையிலேயே வாகன உற்பத்தி நிறுவனங்கள் அண்மைக் காலங்களாக சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.

டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?

இதே நடவடிக்கையில்தான் ஹோண்டா நிறுவனமும் தற்போது களமிறங்கியுள்ளது. அந்த வகையில், அதன் பிரபல ஸ்கூட்டர்களில் ஒன்றான ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசன் மாடலிற்கும், பைக்குகளில் ஷைன் மாடலுக்கும் சிறப்பு சலுகையை வழங்க இருக்கின்றது.

இந்த இரு மாடல்களும் ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களாகும்.

டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?

இவற்றிற்கு சிறப்பு சலுகையாக குறைந்த அளவிலான முன் பணம், அதாவது வெறும் 1,100 மட்டுமே செலுத்தி ஹோண்டாவின் ஆக்டிவா அல்லது சிபி ஷைன் டூ வீலரை எடுத்துக் கொண்டு செல்லும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, நோ காஸ்ட் இஎம்ஐ எனப்படும் மாதாந்திர கட்டணத்திற்கு பெறப்படும் கட்டணம் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பெறப்படும் கட்டணம் உள்ளிட்டவற்றில் சலுகை வழங்கப்பட உள்ளது. இது வாகனத்தின் விலையை சற்றே குறைத்துவிடும்.

டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?

மேலும், வாடிக்கையாளர் கட்டணத்தை பேடிஎம் மூலமாக செலுத்தினால் ரூ. 7,000 ஆயிரத்திற்கான பணம் மீண்டும் அவர்களுக்கு பேடிஎம் வழியாகவே வழங்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு சலுகை மேற்கூறிய இரு மாடல்களுக்கு மட்டுமின்றி கூடுதல் சில மாடல்களுக்கும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், ஹோண்டாவின் இருசக்கர வாகன தயாரிப்பை புதிதாக வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகை திட்டம் குறித்த தகவலை டீலர்களிடம் முழுமையாக கேட்டறிந்து பெற்றுக்கொள்ளலாம்.

டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?

ஹோண்டா நிறுவனம், அதன் பிஎஸ்-6 தரத்திலான ஆக்டிவா ஸ்கூட்டரை கடந்த 11ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த தரத்தில் அறிமுகமான முதல் ஸ்கூட்டர் இதுவே ஆகும். இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்துவைத்தார்.

டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?

பிஎஸ்-6 தரத்திலான இந்த ஸ்கூட்டர் ப்யூவல் இன்ஜெக்சன் என்ற சிறப்பு தொழில்நுட்பத்தில் இயங்கும் 125 சிசி திறன் கொண்ட எஞ்ஜினைப் பெற்றிருக்கின்றது. இந்த தொழில்நுட்பம் அதிக மைலேஜ் மற்றும் குறைவான எரிபொருள் பயன்பாடு உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு இயங்கும்.

டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?

ஆகையால், ஆக்டிவாவின் பழைய கார்புரேட்டர் எஞ்ஜின் வழங்கும் அதிகபட்ச எஞ்ஜின் திறன் 8.52 பிஎச்பி பவரைவிட புதிய ப்யூவல் இன்ஜெக்சன் திறன்கொண்ட எஞ்ஜின் 8.1 பிஎச்பி பவரை மட்டுமே வழங்குகின்றது. இது சற்றே குறைவாக இருந்தாலும் பழைய மாடலைக் காட்டிலும் 13 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் திறனை இது பெற்றுள்ளது. இதனால், புதிய மாடல் ஆக்டிவா அதிக மைலேஜை வழங்கும் மாடலாக மாறியுள்ளது.

டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?

இதுமட்டுமின்றி, ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 தர மாடலில் கூடுதல் சில சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இது மூன்று வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில், ஸ்டான்டர்டு வேரியண்ட்டிற்கு ரூ. 67,490ம், அலாய் வீல் வேரியண்ட் 70,990 ரூபாயும், டீலக்ஸ் வேரியண்ட் ரூ. 74,490 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை, எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

டூ வீலர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்த ஹோண்டா... என்னென்ன சலுகையை அறிவிச்சிருக்கு தெரியுமா...?

இந்த புத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 தர ஸ்கூட்டர் வருகின்ற செப்டம்பர் 29ம் தேதி முதல் டெலிவரி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் நவராத்திரி பண்டிகை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதையடுத்து நாடுமுழுவதும் பல கட்டங்களாக டெலிவிரி செய்யும் பணிகளை ஹோண்டா நிறுவனம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Honda Discount Offers For Sep 2019. Read In Tamil.
Story first published: Monday, September 16, 2019, 8:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X