அடுத்து பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் ஹோண்டாவின் புதிய டூ வீலர் மாடல்!

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய பைக் மாடலை ஹோண்டா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

அடுத்து பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் ஹோண்டாவின் புதிய டூ வீலர் மாடல்!

நாட்டின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹோண்டா நிறுவனம், பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. கடந்த செப்டம்பரில் பிஎஸ்-6 எஞ்சினுடன் முதல் மாடலாக ஆக்டிவா 125 ஸ்கூட்டரை களமிறக்கியது.

அடுத்து பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் ஹோண்டாவின் புதிய டூ வீலர் மாடல்!

இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது மாடலையும் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது. வரும் 14ந் தேதி புதிய இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இந்த புதிய மாடல் குறித்த விபரம் எதையும் ஹோண்டா பகிர்ந்து கொள்ளவில்லை.

அடுத்து பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் ஹோண்டாவின் புதிய டூ வீலர் மாடல்!

எனினும், சமீபத்தில் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபி ஷைன் 125 எஸ்பி பைக் குறித்த தகவல்கள் வெளியானது. எனவே, வரும் 14ந் தேதி புதிய ஷைன் மாடல்தான் விற்பனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக நம்பப்படுகிறது.

அடுத்து பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் ஹோண்டாவின் புதிய டூ வீலர் மாடல்!

பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பைக்கின் குறிப்புகள் அடங்கிய ஆவணம் ஒன்று இணையதளங்களில் வெளியானது. அதில், தற்போது சிபி ஷைன் எஸ்பி பைக்கில் பயன்படுத்தப்படும் பிஎஸ்-4 எஞ்சினைவிட இனி பயன்படுத்தப்பட இருக்கும் பிஎஸ்-6 எஞ்சின் சற்றே கூடுதல் செயல்திறனை பெற இருக்கிறது.

அடுத்து பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் ஹோண்டாவின் புதிய டூ வீலர் மாடல்!

அதாவது, 10.88 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறனை ஹோண்டா சிபி ஷைன் 125 எஸ்பி பைக் பெற இருக்கிறது. இந்த பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்ட 125 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக குறைவான மாசு உமிழ்வு இந்த எஞ்சின் சாத்தியப்படுத்தும்.

அடுத்து பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் ஹோண்டாவின் புதிய டூ வீலர் மாடல்!

புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி 125 பைக் மாடலானது மூன்று விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், ஒரு வேரியண்ட்டில் மட்டும் முன்புற டிஸ்க் பிரேக் ஆப்ஷன் கொடுக்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

அடுத்து பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் ஹோண்டாவின் புதிய டூ வீலர் மாடல்!

அத்துடன், பிஎஸ்-6 எஞ்சினுடன் வர இருக்கும் புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி 125 பைக்கின் ஃப்ரேம் மற்றும் ஸ்விங் ஆர்ம் ஆகியற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வர இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோன்று, வீல்பேஸ் அளவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Source: Zigwheels

Most Read Articles
English summary
According to report, Honda is all set to launch the BS6-compliant version of the CB Shine 125 SP in India very soon.
Story first published: Saturday, November 2, 2019, 17:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X