ஐரோப்பாவில் ஹோண்டாவின் மூன்றுசக்கர ஸ்கூட்டருக்கு காப்புரிமை!

ஹோண்டா நிறுவனத்தின் நியோவிங் மூன்றுசக்கர ஸ்கூட்டருக்கு ஐரோப்பிய யூனியனில் காப்புரிமை பெறப்பட்டுவிட்டது. இதன் சிறப்பம்சங்களை காணலாம்.

ஐரோப்பாவில் ஹோண்டாவின் மூன்றுசக்கர ஸ்கூட்டருக்கு காப்புரிமை!

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மற்றும் யமஹா ஆகிய நிறுவனங்கள் மூன்றுசக்கர ஸ்கூட்டர் மாடல்களை வடிவமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கடந்த 2016ம் ஆண்டு ஹோண்டா நிறுவனம் நியோவிங் என்ற மூன்றுசக்கர ஸ்கூட்டர் கான்செப்ட்டை வெளியிட்டது.

ஐரோப்பாவில் ஹோண்டாவின் மூன்றுசக்கர ஸ்கூட்டருக்கு காப்புரிமை!

இப்போது அது தயாரிப்பு நிலை மாடலாக உருப்பெற்றிருக்கிறது. இந்த ஸ்கூட்டரை ஐரோப்பிய ஒன்றியத்தில் ஹோண்டா நிறுவனம் காப்புரிமை கோரி பதிவு செய்திருந்தது. அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. இந்த ஸ்கூட்டர் விரைவில் தயாரிப்பு நிலை மாடலாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பாவில் ஹோண்டாவின் மூன்றுசக்கர ஸ்கூட்டருக்கு காப்புரிமை!

காப்புரிமை படங்களின்படி, புதிய ஹோண்டா நியோவிங் ஸ்கூட்டரில் முன்புறத்தில் இரண்டு சக்கரங்களும், பின்புறத்தில் ஒரு சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் முன்புற சஸ்பென்ஷன் அமைப்பு மிகவும் விசேஷமான தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது.

ஐரோப்பாவில் ஹோண்டாவின் மூன்றுசக்கர ஸ்கூட்டருக்கு காப்புரிமை!

வளைவுகளில் திரும்பும்போது முன்புற சக்கரங்கள் தானியங்கி முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு வண்டியை நிலையாக செலுத்த உதவும். இது நிச்சயம் வாடிக்கையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் தொழில்நுட்ப அம்சமாக இருக்கும்.

ஐரோப்பாவில் ஹோண்டாவின் மூன்றுசக்கர ஸ்கூட்டருக்கு காப்புரிமை!

மேலும், இரண்டு அல்லது ஆறு சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்துவதற்கான வரைபடத்திற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. எனினும், ஹோண்டா நிறுவனம் தனது கோல்டுவிங் பைக்கில் பயன்படுத்தும் அதே எஞ்சினை இந்த ஸ்கூட்டரிலும் பயன்படுத்தும் என தெரிகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கும்.

ஐரோப்பாவில் ஹோண்டாவின் மூன்றுசக்கர ஸ்கூட்டருக்கு காப்புரிமை!

மறுபுறத்தில் யமஹா நிறுவனத்தின் நிகேன் மூன்றுசக்கர ஸ்கூட்டரில் 847சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மூன்று சிலிண்டர்கள் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 111.8 பிஎச்பி பவரையும், 87.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதே எஞ்சின்தான் யமஹா எம்டி-09 பைக்கிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Honda NeoWing Trike Patent Granted in Europe.
Story first published: Saturday, April 13, 2019, 15:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X