ஆறு எக்சாஸ்ட் சிஸ்டம் கொண்ட பவர்ஃபுல் ரெட்ரோ மாடல் பைக்... ரகசிய வேலையை பார்க்கும் ஹோண்டா...

ஹோண்டா நிறுவனம், ரகசியமாக புதிய மாடல் பைக் ஒன்றின் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பைக் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹோண்டா பைக்

ஹோண்டா நிறுவனம், தற்போது இன்லைன் சிக்ஸ்-சிலிண்டர் மோட்டார் திறன்கொண்ட நியோ-ரெட்ரோ கஃபே ரேசர் மாடல் பைக்கை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், அந்த பைக்கின் தயாரிப்பில் அந்நிறுவனம் ரகசியமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்த புத்தம் பவர்ஃபுல்லான பைக் குறித்த பேடன்ட் இமேஜை, ஹோண்டா நிறுவனம் அண்மையில் தயாரிப்பிற்காக பதிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இந்த பைக் குறித்த சிறப்பு தகவலும், அந்த பைக்கின் பேடன்ட் இமேஜும் தற்போது வெளியே கசிந்துள்ளன. அவ்வாறு, தகவல் மற்றும் புகைப்படத்தை காடிவாடி என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

தற்போது, ஹோண்டா நிறுவனம் மிக ரகசியாக உருவாக்கி வரும் இந்த பைக் பல்வேறு சுவாரஷ்ய தகவலை அடங்கியதாக இருக்கின்றது. அந்தவகையில், பல்வேறு தகவல்களை தற்போது கசிந்திருக்கும் பேடன்ட் புகைப்படமே வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த புத்தம் புதிய மோட்டார்சைக்கிளுக்கு ஹோண்டா நிறுவனம் சிபிஎக்ஸ்1200 என பெயரிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெயரானது, முன்னதாக விற்பனையில் இருந்த சிபிஎக்ஸ்100 மாடலை தழுவி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. சிபிஎக்ஸ் 1000 மாடலை ஹோண்டா நிறுவனம், கடந்த 1978 முதல் 1982ம் ஆண்டு வரை விற்பனைச் செய்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.

ஹோண்டா பைக்

இந்த பைக்கின் பல சிறப்பம்சங்களைக் கொண்ட மாடலாக தான் தற்போது உருவாகி வரும் சிபிஎக்ஸ்1200 மாடல் உருவாக இருக்கின்றது. அந்தவகையில், பெரிய அளவிலான ஆறு சிலிண்டர் கொண்ட லிக்யூட் கூல்ட் எஞ்ஜின் இந்த பைக்கில் பொருத்தப்பட உள்ளது. ஆனால், சிபிஎக்ஸ்1000 மாடலில் இது ஏர்கூல்ட் எஞ்ஜினாக இருந்தது.

இதனால், இந்த புதிய மாடல் சிபிஎக்ஸ்1200 மாடல், அதன் முந்தை மாடலைக் காட்டிலும் அதிகம் பவர்ஃபுல்லான மாடலாக இருக்கின்றது. அவ்வாறு, புதிய மாடலாக உருவாகி வரும் இந்த எஞ்ஜின் 1,200 சிசி திறனை வெளிப்படுத்தும் வகையிலான இன்-லைன் சிக்ஸ்-சிலிண்டர் எஞ்ஜினாக உருவாக்கப்பட உள்ளது.

அதேசமயம், இந்த பைக் நியோ-ரெட்ரோ கஃபே ரேசர் மாடலுக்கு ஏற்பவாறு பல்வேறு அம்சங்களைப் பெற இருக்கின்றது. அந்தவகையில் அதன் பாடி அமைப்பு மற்றும் லுக் உள்ளிட்டவை வடிவமைப்பைப் பெற்றுள்ளன. இத்துடன், இந்த பைக்கின் இரு புறத்திலும் மூன்று துளைக் கொண்ட பிரத்யேகமாக எக்சாஸ்ட் சிஸ்டம் நிறுவப்பட உள்ளது. இதனை, தற்போது வெளியாகியிருக்கும் பேடன்ட் புகைப்படங்கள் உறுதி செய்கின்றன.

ஹோண்டா நிறுவனம், இந்த பைக்கின் உற்பத்தியை மிக ரகசியமாக மேற்கொண்டு வருவதால், இந்த கஃபே ரேசர் மாடல் பைக் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், இந்த பைக்கில் நவீன சிறப்பம்சங்களாக அனலாக் மற்றும் டிஜிட்டல் மயத்திலான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எல்இடி தரத்திலான மின் விளக்குகள், ஸ்பிளிட் இருக்கைகள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோண்டா பைக்

இத்துடன், இந்த மோட்டார்சைக்கிள் பாதுகாப்பு வசதியாக ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் உள்ளிட்ட மற்ற மாடர்ன் பாகங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆகையால், ஹோண்டா நிறுவனம், கூடிய விரைவில் தற்போது வெளியாகியிருக்கும் பேடன்ட் இமேஜ் உள்ளவாறு, ஓர் கான்செப்ட் மாடல் பைக்கை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த பைக் குறித்த அனைத்தையும் அந்த நிறுவனம் மிக ரகசியமாக மேற்கொண்டு வருவதால் முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆகையால் இதுகுறித்த தகவலை இந்த வருடத்திற்கு பின் ஹோண்டா நிறுவனம் வெளியிடலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda Patents Reveal CBX Concept. Read In Tamil.
Story first published: Saturday, June 22, 2019, 9:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X