பைக்கை விட இருமடங்கு சக்தி வாய்ந்த ஹோண்டா ஸ்கூட்டர் அறிமுகம்...?

ஹோண்டா நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் பிடி ஆஸ்த்ரா ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் சக்தி வாய்ந்த எக்ஸ்-ஏடிவி அட்வென்சர் மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஸ்கூட்டர் குறித்த சிறப்பு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

பைக்கை விட இருமடங்கு சக்தி வாய்ந்த ஹோண்டா ஸ்கூட்டர் அறிமுகம்...?

ஹோண்டா நிறுவனம் அதன் எக்ஸ்-ஏடிவி என்ற அதிசக்தி வாய்ந்த அட்வென்சர் மாடல் ஸ்கூட்டரை, இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 2019ம் ஆண்டிற்கான சர்வதேச வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. பிரத்யேகமாக ஐரோப்பிய கண்டங்களில் மட்டும் இந்த ஸ்கூட்டர்கள் ஏற்கனவே விற்பனையில் இருந்து வருகிறது.

பைக்கை விட இருமடங்கு சக்தி வாய்ந்த ஹோண்டா ஸ்கூட்டர் அறிமுகம்...?

மிகவும் கோவக்காரனைப் போன்று தோற்றம் கொண்டிருக்கும் இந்த அட்வென்சர் ரக ஸ்கூட்டரின், கிரவுண்ட் கிளியரன்ஸ் சற்று அதிகமாக உள்ளது. ஆகையால், இந்த ஸ்கூட்டரை ஆஃப் ரோட் பயணத்திற்கும் பயன்படுத்தலாம். அதேசமயம், இந்த ஸ்கூட்டரில் தாராள மயமான இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 21 லிட்டர் அளவுகொண்ட ஸ்டோரேஜ் கெபாசிட்டி சீட்டுக்கு அடியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பைக்கை விட இருமடங்கு சக்தி வாய்ந்த ஹோண்டா ஸ்கூட்டர் அறிமுகம்...?

இத்துடன், ஐந்து வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வகையில் வின்ட் ஸ்கிரீன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஹோண்டா எக்ஸ்-ஏடிவி ஸ்கூட்டரில் அலுமினியம் ஹேண்டில்பார், குவார்ட்ஸ், சிஆர்எஃப் 450 ரேல்லி ஸ்டைல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் சென்டர் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

READ MORE: புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!

பைக்கை விட இருமடங்கு சக்தி வாய்ந்த ஹோண்டா ஸ்கூட்டர் அறிமுகம்...?

இவற்றுடன், பிரத்யமாக இந்த அட்வென்சர் ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் 17 இன்ச் கொண்ட ஸ்போக் வீலும், பின்பக்கத்தில் 15 இன்ச் கொண்ட ஸ்போக் வீலும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு வீல்களிலும் க்னாப்பி டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த ஸ்கூட்டரில் 41எம்எம் கேட்ரிட்ஜ் உடைய யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், பின்பக்கத்தில் ஸ்பிரங் ப்ரீ-லோட் அட்ஜஸ்டபில் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது.

பைக்கை விட இருமடங்கு சக்தி வாய்ந்த ஹோண்டா ஸ்கூட்டர் அறிமுகம்...?

வாகன ஓட்டியின் பாதுகாப்பிற்காக ஏபிஎஸ் வசதியுடன் கூடிய டிஸ்க் பிரேக் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டரில் அதிக சக்தி வாய்ந்த 745 சிசி கொண்ட லிக்யூட் கூல்ட், எஸ்ஓஎச்சி 8 வால்வ் பேரலல் ட்பின் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 54 பிஎச்பி பவரை 6,250 ஆர்பிஎம்-லும், 68 என்எம் டார்க்கை 4,750 ஆர்பிஎம்-லும் வழங்கும் திறன் கொண்டது. இத்துடன், இந்த ஸ்கூட்டரில் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

பைக்கை விட இருமடங்கு சக்தி வாய்ந்த ஹோண்டா ஸ்கூட்டர் அறிமுகம்...?

ஹோண்டாவின் இந்த எக்ஸ்-ஏடிவி ஸ்கூட்டரை ஆஃப் ரோடில் இயக்கும் வகையில் ஜி ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோடினை இயக்கினால் ஸ்கூட்டர் ஆஃப் ரோடில் செல்வதற்கு ஏற்ப தயாராகி விடும். இந்த சக்தி வாய்ந்த ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் பிரத்யேகமான சில நாடுகளில் மட்டுமே விற்பனைச் செய்து வருகிறது. இதன் இந்திய வருகை என்பது தற்போது கேள்விக்குறியாக தான் உள்ளது.

READ MORE: இனி பைக்கர்கள் மழையைக் கண்டு பயப்பட வேண்டாம்: ஹெல்மெட்டிற்கும் வந்துவிட்டது வைப்பர்...!

Most Read Articles

English summary
Honda Unveils X-ADV Adventure Scooter At IIMS — Go Have Fun!. Read In Tamil.
Story first published: Friday, April 26, 2019, 18:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X