கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்!

ஹோண்டா நிறுவனத்தின் புதிய அட்வென்சர் ரக ஸ்கூட்டர், காய்கிந்தோ இந்தோனேசியா சர்வதேச வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்!

ஹோண்டா நிறுவனம், அதன் சக்தி வாய்ந்த எக்ஸ்-ஏடிவி 150 ஸ்கூட்டரை காய்கிந்தோ இந்தோனேசியா சர்வதேச வாகன கண்காட்சியில் (GIIAS) அறிமுகம் செய்துள்ளது. இது, அந்நிறுவனத்தின் எக்ஸ்-ஏடிவி 750 மாடலின் மினி மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் திறன், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பல பைக்குகளுக்கு போட்டியளிக்கும் வகையில் இருக்கின்றது.

கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்!

அந்தவகையில், அந்த ஸ்கூட்டரின் ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்கள் அனைத்தும் பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அவ்வாறு, புதிய எக்ஸ்-ஏடிவி 150 ஸ்கூட்டரின் ஸ்டைல் முரட்டுத்தனமான (rugged) தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்!

மேலும், அதனை அதிகரிக்கும் வகையில், அந்த ஸ்கூட்டருக்கு பெரிய அளவிலான வீல்கள், ட்யூவல் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த ஸ்கூட்டரின் முன்பகுதி எக்ஸ்-ஏடிவி 750 மாடலைப் போன்றே காட்சியளிக்கின்றது. அவ்வாறு, முன்பக்க தோற்றம் பார்ப்பதற்கு மிகப் பெரிய அளவில் இருக்கின்றது.

கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்!

அதேபோன்று, ஹோண்ட நிறுவனம், இந்த மினி ஸ்கூட்டருக்கு எக்ஸ்-ஏடிவி நேம் பிளேட்டினையே வழங்க இருப்பதாக கூறப்படுகின்றது. அவ்வாறு, நாம் முன்பே குறிப்பிட்டதைப் போன்று, இந்த ஸ்கூட்டரின் முன்பக்க அப்ரானில்தான், எக்ஸ்-ஏடிவி 150 ஸ்கூட்டரின் ட்யூவல் எல்இடி ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த டெயில் லைட், ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதுபோன்ற அம்சத்தால், புதிய எக்ஸ்-ஏடிவி ஸ்கூட்டர் மிகவும் கோவக்காரனைப் போன்று காட்சியளிக்கின்றது. அதற்கேற்ப வகையில், கிரவுண்ட் கிளியரன்ஸ் சற்று கூடுதலாக இருக்கின்றது. ஆகையால், இந்த ஸ்கூட்டரை ஆஃப் ரோட் பயணத்திற்கும் பயன்படுத்தலாம். இத்துடன், இந்த ஸ்கூட்டரில் தாராளமான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் ஸ்டோரேஜ் அளவு மற்ற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றது. அவ்வாறு, எக்ஸ்-ஏடிவி ஸ்கூட்டரின் ஸ்டோரேஜ் 21 லிட்டர் அளவுகொண்டதாக இருக்கின்றது.

கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்!

இத்துடன், ஐந்து வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வகையிலான வின்ட் ஸ்கிரீன் இந்த ஸ்கூட்டரில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹோண்டா எக்ஸ்-ஏடிவி ஸ்கூட்டரில் அலுமினியம் ஹேண்டில்பார், குவார்ட்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்!

இவற்றுடன், பிரத்யமாக இந்த அட்வென்சர் ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் 17 இன்ச் கொண்ட ஸ்போக் வீலும், பின்பக்கத்தில் 15 இன்ச் கொண்ட ஸ்போக் வீலும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு வீல்களிலும் க்னாப்பி டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்!

மேலும், இந்த ஸ்கூட்டரில் 41மிமீ அளவுகொண்ட கேட்ரிட்ஜ் யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், பின்பக்கத்தில் ஸ்பிரிங் ப்ரீ-லோட் அட்ஜஸ்டபில் ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டுள்ளது. இது, ஆஃப் ரோடு மற்றும் பள்ளம் மேடு நிறைந்த சாலைகளில் சொகுசாக செல்ல உதவும்.

இத்துடன், வாகன ஓட்டியின் பாதுகாப்பான பயணத்திற்காக ஆன்டி லாக் பிரேக்கிங் வசதியுடன் கூடிய டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்!

ஹோண்டாவின் இந்த எக்ஸ்-ஏடிவி ஸ்கூட்டரில், 149.3 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், வாட்டர் கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 14 எச்பி பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 13.2 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகின்றது. இத்துடன், இந்த ஸ்கூட்டரில் சிவிடி டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்!

ஹோண்டாவின் இந்த எக்ஸ்-ஏடிவி ஸ்கூட்டரை ஆஃப் ரோடில் இயக்கும் வகையில் ஜி ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோடினை இயக்கினால், ஆஃப் ரோடில் ஸ்கூட்டரை இக்குவதற்கு ஏற்ப அது தயாராகிவிடும்.

கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்!

இந்த சக்தி வாய்ந்த ஸ்கூட்டரை, ஹோண்டா நிறுவனம் பிரத்யேகமான சில நாடுகளில் மட்டுமே விற்பனைச் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. இதன், இந்திய வருகை என்பது தற்போது கேள்விக்குறியாக தான் உள்ளது. அதேசமயம், இதன் வருகைகுறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Honda Unveils X-ADV Scooter At GIIAS. Read In Tamil.
Story first published: Thursday, July 18, 2019, 20:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X