செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்!

பிரபல ஹஸ்க்வர்னா நிறுவனம், சிறுவர்கள் ஓட்டுகின்ற வகையிலான மின்சார பைக்கை தயார் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மினி எலக்ட்ரிக் பைக் கூடிய விரைவில் உலகம் முழுவதிலும் அறிமுகம் செய்யப்படவும் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்!

சுவீடன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஹஸ்க்வர்னா நிறுவனம், கேடிஎம் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் அதிக திறன்கொண்ட பைக்குகளைத் தயாரிப்பதில் புகழ்வாய்ந்த நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்நிறுவனம் பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் இயக்குகின்ற வகையிலான சிறிய ரக மோட்டார்சைக்கிளை உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்!

அந்தவகையில், ஹஸ்க்வர்னா இஇ5 என்ற மினி எலக்ட்ரிக் பைக்கைத்தான் அந்த நிறுவனம் தயார் செய்துள்ளது. இந்த மினி எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை 55சிசி திறன் ப்யூவல் வாகனங்களுக்கு போட்டியாக அந்த நிறுவனம் தயார் செய்துள்ளது. அதேசமயம், இந்த நிறுவனத்தின் மூலம் வெளிவரும் முதல் எலக்ட்ரிக் ரக வாகனமாக இதுவே இருக்கின்றது. ஆனால், இது சிறியவர்கள் இயக்கக்கூடிய பைக்காகும்.

செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்!

இந்த பைக்கை குறும்பு தனம் நிறைந்த சிறியவர்களின் விளையாட்டிற்காகவும், பொழுதுபோக்கும் வகையிலும் இந்த மினி எலக்ட்ரிக் பைக் தயார்செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று சிறுவர்களின் வளர்ச்சிக்கேற்ப, உயரத்தை அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வசதியும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகள் சற்று வளர்ந்துவிட்டால், மினி எலக்ட்ரிக் பைக் வீணாகிவிடும் என்ற கவலையே வேண்டாம்.

செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்!

இந்த மினி எலக்ட்ரிக் பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் வரை இயக்கிக்கொண்டே இருக்கலாம். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 70 நிமிடங்களே போதுமானது என கூறப்படுகிறது. இதற்கேற்ப, 907 லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.

செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்!

இஇ5 மினி எலக்ட்ரிக் பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக, பெரிய பைக்குகளுக்கு வழங்குவதைப்போன்று, 35மிமீ அளவுகொண்ட டபிள்யூபி எக்ஸ்ஏசிடி ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. அது, சிறுவர்களின் பயண அனுபவத்தை சொகுசானதாக உருவாக்கும். அதேபோன்று, உயரத்தை அட்ஜெஸ்ட் செய்வதற்கு ஏதுவான அமைப்பையும் பெற்றிருக்கின்றது.

செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்!

தொடர்ந்து, ஹஸ்க்வர்னா இஇ5 மினி எலக்ட்ரிக் பைக்கின் பாடி குறித்து பார்ப்போமேயானால், அதிக உறுதி தன்மைக்காக குரோமோலி ஃப்ரேம் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்துடன், பாதுகாப்பு வசதியாக ஹைட்ராலிகல்லி இயக்கக்கூடிய பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேசமயம், சிறுவர்கள் எளிதில் கையாளக்கூடிய வகையில், மிகவும் இலகுவான எடைக்கொண்ட வீல் மற்றும் டேப்பர்ட் நெக்கன் ஹேண்டில்பார்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

MOST READ: இந்திய விமானப்படை எடுத்த அதிரடி முடிவு இதுதான்... 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததால் நடவடிக்கை...

செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்!

இத்துடன், சிறுவர்களுக்கான இந்த சிறிய எலக்ட்ரிக் பைக்கில், எளிதில் கையாளக்கூடிய ஆறு விதமான ரைடிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் ஹஸ்க்வர்னா நிறுவனம், இஇ5 எலக்ட்ரிக் பைக்கிற்கான பலவிதமான அக்ஸசெரீஸ்களை வழங்க இருக்கின்றது.

ஹஸ்க்வர்னாவின் இந்தி பிரத்யேக எலக்ட்ரிக் பைக் வருகின்ற ஜூலை மாதத்திலிருந்து உலகம் முழுவதிலும் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

MOST READ: பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா? விடை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்!

இஇ5 எலக்ட்ரிக் பைக் சிறுவர்களுக்கான பைக்காக இருந்தாலும், இது பார்ப்பதற்கு ஸ்போர்ட்ஸ் ரக பைக்கைப் போன்று காட்சியளிக்கின்றது. அதற்கேற்ப வகையில், பாடி தோற்றம் மற்றும் கிராஃபிக்குகள், டயர் உள்ளிட்டவை சிறப்பான வடிவமைப்பைப் பெற்றுள்ளன. இதன், டிசைன் சிறுவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

MOST READ: சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் வாகன கான்செப்ட் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!

செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்!

ஹஸ்குவர்னா நிறுவனத்தின் பைக்குகள் கூடிய விரைவில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் களமிறக்கப்பட இருப்பதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்த நிறுவனம் கேடிஎம் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருவதால், இதன் பைக்குகளும் பஜாஜ் நிறுவனத்தின்கீழ் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

செல்ல குட்டீஸ்களுக்கான சிறிய ரக மின்சார பைக்கை களமிறக்கும் ஹஸ்க்வர்னா... அறிமுகம்குறித்த தகவல்!

அதேபோன்று, கூடிய விரைவில் உலக வெளியீட்டைப் பெற இருக்கும் இஇ5 மினி எலக்ட்ரிக் பைக், இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்த மினி எலக்ட்ரிக் பைக், நாட்டுக்கு நாடு மாறுபாட்டைக் கொண்டு களமிறக்கப்பட இருப்பதாக ஹஸ்க்வர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Husqvarna EE 5 Electric Mini-Bike For Kids. Read In Tamil.
Story first published: Wednesday, June 26, 2019, 18:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X