ஹஸ்க்வர்னா ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்...

பஜாஜ் நிறுவனம் நடைபெற்று வருகின்ற இந்தியா பைக் வாரம் கண்காட்சியில் தனது ஹஸ்க்வர்னா பிராண்ட்டை இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது. ஹஸ்க்வர்னா நிறுவனம் தனது இந்திய அறிமுகத்தில் ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 என்கிற இரு பைக்குகளுடன் களமிறங்கியுள்ளது.

ஹஸ்க்வர்னா ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்...

முன்னதாக ஹஸ்க்வர்னா நிறுவனம் தனது இந்திய அறிமுகத்தில் ஸவர்ட்பிளேன் 401 மற்றும் விட்பிளேன் 401 என்கிற இரு பைக்குகளை தான் காட்சிப்படுத்தும் என வாடிக்கையாளர்கள் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு பைக்குகளுக்கும் இது இந்திய அறிமுகம் மட்டும் இல்லை. உலக அறிமுகமும் கூட.

ஹஸ்க்வர்னா ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்...

கோவாவில் நடைபெற்று வரும் இந்த இந்திய பைக் வாரத்தின் ஆறாவது எடிசனிற்கு கேடிஎம் நிறுவனம் தான் அதிகாரப்பூர்வ பார்ட்னர். இதனால் இந்த நிகழ்ச்சியை இந்நிறுவனம் தான் தொகுத்து வழங்கி வருகிறது. பைக்கின் தோற்றத்தை மட்டுமல்லாமல் அவற்றின் செயல்திறனையும் வாடிக்கையாளர்கள் காண தொழில் முறை ரைடர்கள் மூலம் சிறப்பு ஸ்டண்ட்களுக்கும் கேடிஎம் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஹஸ்க்வர்னா ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்...

கேடிஎம் இந்தியாவில் வேகமாக பிரபலமாகி வரும் நிறுவனமாக விளங்குகிறது. இதனால் ஹஸ்க்வர்னா நிறுவனமும் இந்தியாவில் தனக்கு நிகராக வளர்ச்சியடையும் என்கிற நம்பிக்கையில் கேடிஎம் நிறுவனம் உள்ளது. கேடிஎம் 250 ட்யூக் மற்றும் ஆர்சி 250 பைக்குகளுக்கு போட்டியாக அறிமுகமாகியுள்ள ஹஸ்க்வர்னாவின் இந்த ட்வின்ஸ் பைக்குகள் நியோ-ரெட்ரோ டிசைன் அமைப்பை கொண்டுள்ளன.

ஹஸ்க்வர்னா ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்...

இத்துடன் சில தனித்துவமான டிசைன்களை ஹஸ்க்வர்னாவின் ட்வின்ஸ் பைக்குகள் கொண்டுள்ளன. அதாவது, வட்ட வடிவிலான ஹெட்லைட், மிக சிறிய அளவில் டெயில் பகுதி, கம்பேக்ட் எரிபொருள் டேங்க், வட்ட வடிவில் மிரர்ஸ், மேற்புறமாக வளைந்த எக்ஸாஸ்ட் மற்றும் குறைவான உடற்பகுதி போன்றவற்றை இந்த பைக்குகள் கொண்டுள்ளன.

ஹஸ்க்வர்னா ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்...

முன்புறம் மற்றும் பின்புறத்தில் உள்ள எல்இடி யூனிட் பைக்கின் ஸ்டைலை அதிகரிப்பது மட்டுமில்லாமல், சிறந்த முறையில் வெளிச்சத்தையும் தரவல்லது. ஹஸ்க்வர்னாவின் இந்த இரு பைக்குகளில் ஒரே மாதிரியான என்ஜினும் பைக் பாகங்கள் தான் பொருத்தப்பட்டுள்ளன.

ஹஸ்க்வர்னா ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்...

இருப்பினும் இவ்விரு பைக்குகளும் தனக்கென தனித்துவமான சில டிசைன்களை பெற்றுள்ளன. அதாவது, ஸவர்ட்பிளேன் 250 பைக்கானது அகலமான ஹேண்டில்பார்ஸ் மற்றும் ட்யூல்-பர்பஸ் டயர்களை கொண்டுள்ளதால் ஆப்-ரோட்டிற்கு ஏற்ற வகையில் உள்ளது. அதுவே விட்பிளேன் 250 பைக்கில் ஹேண்டில்பார் சிறியதாகவும், அதிகளவில் ரைடிங் ஸ்டான்ஸையும் கொண்டுள்ளதால் ரேசிங்கிற்கு ஏற்றதாக இருக்கும்.

ஹஸ்க்வர்னா ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்...

ஹஸ்க்வர்னா நிறுவனம் இவ்விரு பைக்குகளிலும் கேடிஎம் 250 ட்யூக் மற்றும் 250 ஆர்சி பைக்குகளில் உள்ள 248.8சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜினை தான் பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 31 பிஎச்பி பவரையும் 7,250 ஆர்பிஎம்-ல் 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஹஸ்க்வர்னா ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்...

இந்த என்ஜின் குறைந்த எடையில் தயாரிக்கப்பட்டு இந்த ட்வின்ஸ் பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ளதால், கேடிஎம் 250 ட்வின்ஸ் பைக்குகளை விட ஹஸ்க்வர்னாவின் இந்த ட்வின்ஸ் பைக்குகள் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்குகள் பிஎஸ்6 தரத்தில் தான் வாடிக்கையாளர்களை சென்றடைய உள்ளன.

ஹஸ்க்வர்னா ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்...

ஹஸ்க்வர்னாவின் இவ்விரு பைக்குகளும் ட்ரெல்லிஸ் ஃப்ரேம்களை கொண்டுள்ளன. இந்த ஃப்ரேம் அமைப்பை ஹஸ்க்வர்னா நிறுவனம் அதிக வலிமை கொண்ட மாலிப்டினம் இரும்பால் தயாரித்துள்ளது. இதனால் இந்த ட்யூப்கள் வலிமையாகவும், எடை குறைவாகவும், வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

ஹஸ்க்வர்னா ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்...

43 மிமீ ஃபோர்க்ஸ் முன்புறத்திலும் அப்டேட்டான டாம்பிங் சிஸ்டம் பின்புறத்திலும் சஸ்பென்ஷன் அமைப்பாக இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை முன் சக்கரத்தில் உள்ள 320 மிமீ டிஸ்க்கும் பின் சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க்கும் கவனிக்கின்றன. இத்துடன் ப்ரேக் காலிபரும் அட்வான்ஸான போஸ்ச் ஏபிஎஸ்-ம் கூடுதல் ப்ரேக்கிங் அமைப்புகளாக உள்ளன.

ஹஸ்க்வர்னா ஸவர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்...

இந்திய பைக் வாரத்தில் அறிமுகமாகியுள்ள ஹஸ்க்வர்னா ட்வின்ஸ் பைக்குகள் அடுத்த ஆண்டு முதல் கால்பகுதியில் இருந்து விற்பனையை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு பைக்குகளையும் இந்தியா முழுவதும் கேடிஎம் நிறுவனத்தின் ப்ரோபைக்கிங் மையங்கள் தான் விற்பனை செய்யவுள்ளன. இதுதவிர இந்த ட்வின்ஸ் பைக்குகளின் இந்திய விலை பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

Most Read Articles
English summary
Bajaj has officially launched the Husqvarna brand in India at the India Bike Week in Goa today. Husqvarna makes its India debut with two new motorcycles – Vitpilen 250 and Svartpilen 250.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X