ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதோட சிறப்பு என்னனு தெரியுமா...?

ஹூண்டாய் நான்கு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம், எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, ஸ்கேட்டர் ரக ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதுல சிறப்பு என்னனு தெரியுமா...?

நான்கு சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹூண்டாய், புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அண்மையில், இந்நிறுவனம் அதன் முதல் மாடல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதுல சிறப்பு என்னனு தெரியுமா...?

கோனா என்று பெயிரிடப்பட்டுள்ள அந்த காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்நிலையில், புதிதாக நகர வாசிகள் பயன்படுகின்ற வகையிலான, ஸ்கேட்டர் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அது அறிமுகம் செய்துள்ளது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதுல சிறப்பு என்னனு தெரியுமா...?

இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை எதிர்கால ஹூண்டாய் மற்றும் அதன் ஓர் அங்கமாக செயல்படும் கியா நிறுவனங்களின் கார்களில் பொருத்தப்பட முடியும். இதற்கான பிரத்யேக இடத்தை இவ்விரு நிறுவனங்களும் ஒதுக்க வரும் கால தயாரிப்புகளில் ஒதுக்க இருக்கின்றன.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதுல சிறப்பு என்னனு தெரியுமா...?

அதேசமயம், இந்த இடத்தில் ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தும்போது, அந்த இடத்திலேயே அதனை சார்ஜ் செய்துகொள்ள ஏதுவான இடம் (சார்ஜர் போர்ட்) நிறுவப்பட உள்ளது. மேலும், கார் சாலையில் இயங்கும்போது, அதிலிருந்து கிடைக்கும் திறனை வைத்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அதைக் கொண்டு சார்ஜ் செய்யும் வசதி இதற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதுல சிறப்பு என்னனு தெரியுமா...?

ஆகையால், இந்த இ-ஸ்கூட்டரை வாங்குபவர்கள் இதற்கென தனியாக செலவு செய்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சிஇஎஸ் 2017 என்ற பெயரில் ஹூண்டாய் நிறுவனம் முன்னதாக உலகளாவிய அளவில் அறிமுகம் செய்திருந்தது. இதனை, தற்போது விற்பனைக்கு தயாராக்கியுள்ளது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதுல சிறப்பு என்னனு தெரியுமா...?

இந்த ஸ்கூட்டரில் மிக சிறந்த அம்சமாக சஸ்பென்ஷன் காணப்படுகின்றது. இது முன்பக்க வீலுடன் பொருத்தப்பட்டுள்ளது. பள்ளம் மேடுகள் நிறைந்த சாலையில் பயணிக்கும்போது அசௌகரியத்தை உணராத வண்ணம், இது பயண அனுபவத்தை நமக்கு வழங்கும்.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதுல சிறப்பு என்னனு தெரியுமா...?

முன்னதாக கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், முன்பக்க வீல் இயங்கும் திறன் கொண்டதாக இருந்தது. ஆனால், தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலில், பின்பக்க வீல் இயங்கும் திறனைக் கொண்டுள்ளது. வாகனத்தின் ஸ்திரத் தன்மை மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை அது மேற்கொண்டுள்ளது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதுல சிறப்பு என்னனு தெரியுமா...?

ஹூண்டாய் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 10.5Ah லித்தியம் பேட்டரியை பயன்படுத்தியுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 20 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். அதேசமயம், இதன் டாப் ஸ்பீட் மணிக்கு 20 கிமீ ஆகும். இந்த புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நகர பயன்பாட்டிற்காக அந்நிறுவனம் தயாரித்திருந்தாலும், அனைத்து இடங்களையும் இனைக்கின்ற வகையிலான சிறப்பம்சங்களை இது பெற்றிருக்கின்றது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதுல சிறப்பு என்னனு தெரியுமா...?

ஆனால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய வருகை மிகப் பெரிய கேள்விக்குறியதாக இருக்கின்றது. முக்கியமாக, இந்தியாவில் பல முக்கிய நகரங்களின் சாலைகள் கவலைக்கிடமாக இருக்கின்றது. ஆகையால், அதுபோன்ற சாலைகளில் இதனைப் பயன்படுத்துவது மிகவும் கடினமாகும். இருப்பினும் வரும் காலத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதுல சிறப்பு என்னனு தெரியுமா...?

ஏனென்றால், இந்திய வாகனச் சந்தையின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக மின் வாகனங்கள் மாறியுள்ளன.

இதன்காரணமாக, ஹூண்டாய் நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் காரான கோனாவை அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த காருக்கு தற்போது நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய திறனை வழங்குகின்ற வகையிலான 39.2 kWh திறன் கொண்ட பேட்டரி இந்த காரில் இடம் பெற்றுள்ளது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதுல சிறப்பு என்னனு தெரியுமா...?

மேலும், 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை 9.7 செகண்டுகளிலேயே தொடுகின்ற வகையிலான 100kW திறன் கொண்ட மின் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது, 136 பிஎஸ் பவரையும், 395 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இந்த எஸ்யூவி ரக கார் முன்பக்க வீல் டிரைவ் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன், சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... இதுல சிறப்பு என்னனு தெரியுமா...?

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் தயாரிப்பு கூடத்தில் நடைபெற்று வருகின்றது. இது இந்திய மதிப்பில் ரூ. 25.30 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

Most Read Articles
English summary
Hyundai Unveils Electric Scooter. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X