5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: ஐஐடி மாணவர்கள் உருவாக்கும் அசத்தலான மின் வாகனம்!

வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணத்தை மேற்கொள்ளும் வகையிலான மின் வாகனங்களை ஹைதராபாத் ஐஐடி மாணவர்கள் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: சர்வதேச நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் இந்திய மாணவர்களின் கண்டுபிடிப்பு!

ஐஐடி ஹைதராபாத் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ப்யூர் எனர்ஜி நிறுவனம் 'ப்யூர் இவி' என்ற பெயரில் மின் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த ப்யூர் இவி நீடித்து உழைக்கும் மற்றும் அதீத திறனை வெளிப்படுத்தும் இரண்டு சக்கர மின் வாகனங்களை இந்தியச் சாலைகளுக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: சர்வதேச நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் இந்திய மாணவர்களின் கண்டுபிடிப்பு!

இதுகுறித்து, தி இந்து நாளிதழ் நிறுவனம், ப்யூர் எனர்ஜி நிறுவனம் நான்கு புதிய மின் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், எக்னைட், தி எட்ரன்ஸ், தி எப்லுடோ மற்றும் தி எட்ரோன் ஆகிய நான்கு மாடல்களைத்தான் அந்த நிறுவனம் முதலில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. முன்னதாக 10 ஆயிரம் யூனிட்களை 2019 மற்றும் 20ம் ஆண்டுகளுக்குள் தயாரித்து வெளியிடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: சர்வதேச நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் இந்திய மாணவர்களின் கண்டுபிடிப்பு!

இதற்காக, நாடு முழுவதும் சேனல் பார்ட்னர்கள் மற்றும் நெட்வொர்க் கோர்களை நியமிக்கும் பணியில் ப்யூர் இவி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் இந்த மின் மோட்டார்சைக்கிள்களை வணிக ரீதியாக அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: சர்வதேச நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் இந்திய மாணவர்களின் கண்டுபிடிப்பு!

இந்த மின் வாகனங்களை தயார் செய்வதற்காக 18 ஆயிரம் 18,000 சதுர அடி பரப்பளவில், ஹைதராபாத் ஐஐடி வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மிக அதிகளவில் மின் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் வகையில், இந்த பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு வைத்துதான் மோட்டார்சைக்கிள்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளும் உருவாக்கப்பட உள்ளன.

வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: சர்வதேச நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் இந்திய மாணவர்களின் கண்டுபிடிப்பு!

மின் வாகனங்களின் உற்பத்திக்கா, இந்த நிறுவனம் கணிசமான அளவில் தொகையை முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைக்கொண்டு, ஸ்கூட்டர் மற்றும் பைக் மாடல் மின்வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன. மேலும், இந்த நிறுவனம் தயாரிக்கும் வாகனத்தின் மூலம் பயணித்தால் ஒரு கிமீ வெறும் 5 பைசா மட்டும் தான் செலவாகும் என ப்யூர் இவி நிறுவனத்தின் சிஇஓ தகவல் தெரிவித்துள்ளார்.

வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: சர்வதேச நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் இந்திய மாணவர்களின் கண்டுபிடிப்பு!

இதுகுறித்து, ப்யூர் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குனரான நிஷாந்த் டோங்கரி கூறியதாவது, "மின்வாகனங்களுக்கான லித்தியம் அயன் பேட்டரி பேக்கினை மிகவும் சக்தி வாய்ந்ததாக தயாரித்துள்ளோம். அதேபோன்று மின் மோட்டார்சைக்கிள், பேட்டரியின் ஆற்றலை வீண் விரயம் செய்யாமல் இருக்கும் வகையிலும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறோம். தற்போது, ஐஐடி வளாகத்தில், ஆக்டிவ் தெர்மால் மேனேஜ்மெண்ட் சிஸ்டம், வாகனத்தின் சீரான இயக்கத்திற்கான ஏரோடைணமிக்ஸ் மற்றும் இலகுவான எடைக்கொண்ட வேகமாக சார்ஜ் பெறுவதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: சர்வதேச நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் இந்திய மாணவர்களின் கண்டுபிடிப்பு!

மேலும் அவர், "இத்துடன் நாங்கள் மற்ற ஸ்டார்ட்ப் அப் நிறுவனங்களுடனும் இணைந்து பணிபுரிந்து வருகிறோம். அந்த வகையில், அதிக வோல்டேஜ் மற்றும் அதிக சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரிகளை மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கி வருகிறோம்" என தெரிவித்தார்.

Most Read Articles
English summary
IIT Hyderabad Based Start up PuREnergy Launches Two Wheelers — Going Commercial In May. Read In Tamil.
Story first published: Tuesday, April 30, 2019, 13:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X