இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 விருதை வென்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ்...

இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 என்கிற மதிப்புமிக்க விருதை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் மாடல் பைக் வென்றுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 விருதை வென்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ்...

இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக் மிக விரைவில் ஹீரோ நிறுவனத்தின் சிறந்த விற்பனை பைக் மாடலாக வந்தது மட்டுமில்லாமல், பெனெல்லி இம்பீரியல் 400, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ், ஹோண்டா சிபி300ஆர், ஜாவா, கேடிஎம் 125 ட்யூக், சுசுகி ஜிக்ஸெர் 250, யமஹா எம்டி-15 போன்ற பைக்குகளை விற்பனையில் முந்தி புதிய மைல்கல்லை அடைந்துள்ளது.

இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 விருதை வென்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ்...

எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கான இந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 விருதை ஜேகே டயர்& இண்டஸ்ட்ரீயின் நிர்வாக இயக்குனரும் சேர்மனுமான Dr.ரகுபதி சிங்கானியா வழங்கினார்.

இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 விருதை வென்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ்...

இந்த விருதுக்கான பைக்கை தேர்ந்தெடுக்கும் குழுவில், ப்ரிண்ட் மூலம் வாகனங்களின் குறிப்புகளை வழங்கி வந்தவர்களில் இருந்து தற்சமயம் டிஜிட்டலில் தகவல்களை வெளியிட்டு வருபவர்கள் வரையில் குறிப்பிட்ட சில முக்கிய பத்திரிக்கையாளர்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 விருதை வென்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ்...

ஆட்டோ டுடே பத்திரிக்கையில் இருந்து ராகுல் கோஷ் மற்றும் டிபயன் டுட்டா, ஆட்டோஎக்ஸ்-ல் இருந்து ஜாரேட் சலோமன் மற்றும் அரூப் தாஸ், பைக் இந்தியா-வில் இருந்து அஸ்பி பாதேனா மற்றும் சர்மட் கடிரி, இவோ-ல் இருந்து சிரிஷ் சந்திரன், மோட்டாரிங் வோர்ட்-ல் இருந்து கார்த்திக் வேர் மற்றும் பப்லோ சட்டார்ஜி, ஓவர்ட்ரைவ்-ல் இருந்து அபேய் வெர்மா மற்றும் ரோகித் பராட்கர், பைக்வாலே-ல் இருந்து விக்ராந்த் சிங் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 விருதை வென்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ்...

இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 விருதிற்காக ஒவ்வொரு பைக்கும் இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்றாற்போல் உள்ளதா, பயணத்திற்கு சவுகரியமாக உள்ளதா, செயல்படு திறன் மற்றும் எரிபொருள் பயன்பாடு எப்படி போன்ற பல அளவுருக்களில் சோதனை செய்யப்பட்டன.

இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 விருதை வென்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ்...

இதில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு கச்சிதமான உடலமைப்புடன் இந்திய பைக்குகளின் வடிவமைப்பில் புதிய வரையறையை புகுத்தும் காரணத்தினால் அதிக மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. மேலும் இந்த வருடம் தேர்வுக்குழு, பைக்குகளை புத் இண்டர்நேஷ்னல் பைக் ரேஸ் களத்தில் வைத்து ஆராய்ந்ததும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 விருதை வென்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ்...

ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கானது 2019 மே மாதத்தில் ரூ.98,000 (எக்ஸ்ஷோரூம்) ஆரம்ப விலையுடன் அறிமுகமானது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 199.6சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் 18 பிஎச்பி பவரையும் 17.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் கார்புரேட்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆப் தி இயர் 2020 விருதை வென்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ்...

இந்திய சந்தையில் விற்பனையாகி வரும் சில சிறிய அளவிலான அட்வென்ஜர் ஸ்டைல் பைக்குகளில் ஹீரோ எக்ஸ்பல்ஸும் ஒன்று. இதுவே இந்த பைக் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களிடம் மிக அதிகமான பிரபலமாகுவதற்கு காரணமாக அமைந்தது. இதனால் இந்தியா முழுவதும் தனது டீலர்ஷிப்களில் இந்த பைக்கை விற்பனைக்காக ஹீரோ நிறுவனம் வைத்துள்ளது. இந்த விருது கண்டிப்பாக இந்த பைக்கிற்கு கூடுதல் விளம்பரமே ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஹீரோ #hero motocorp
English summary
ICOTY 2020: Hyundai Venue Wins The Prestigious Indian Car Of The Year Award
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X