கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

கேடிஎம் ட்யூக் வரிசையில் மிக சக்திவாய்ந்த மாடலாக 790 ட்யூக் பைக் நாளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த பைக்கின் தொழில்நுட்பக் குறிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

கேடிஎம் ட்யூக் வரிசையில் உள்ள பைக்குகள் சிங்கிள் சிலிண்டர் எஞ்சினுடன் விற்பனையாகி வரும் நிலையில், முதல்முறையாக இந்த பைக் இரட்டை சிலிண்டர் எஞ்சினுடன் வருகிறது. இந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 799 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

இந்த சக்திவாய்ந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 83 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

இந்த பைக்கில் எல்இடி பகல்நேர விளக்குகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டிஸ்க் பிரேக்குகள், பாஷ் கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஓட்டுபவர் விருப்பத்திற்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்யும் ஹேண்டில்பார் அமைப்பு உள்ளிட்டவற்றுடன் வருகிறது.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

இந்த பைக்கில் ஸ்போர்ட், ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் டிராக் மோடு என நான்குவிதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் இடம்பெற்றிருப்பதால், மிக விரைவாக கியர் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

இந்த பைக்கில் ஃப்ளை பை வயர் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருப்பதால் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற வழி வகுக்கும். முன்புறத்தில் WP அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. மோட்டோ2 பந்தய பைக்குகளுக்கு பிரேக்குகளை சப்ளை செய்யும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜே ஜுவான் நிறுவனத்திடம் இருந்து பிரேக்குகள் சப்ளை பெறப்படுகின்றன.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

இந்த ஆண்டு 100 யூனிட்டுகளை விற்பனை செய்யும் இலக்குடன் இந்த பைக்கை இறக்குமதி செய்ய உள்ளது கேடிஎம் நிறுவனம். டிமான்ட் அதிகம் இருந்தால், எதிர்காலத்தில் புனே அருகில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் ஆலையில் இந்த பைக்கையும் உற்பத்தி செய்ய கேடிஎம் திட்டமிட்டுள்ளது.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கிற்கு ரூ.30,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. ரூ.8 லட்சத்தையொட்டிய எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800, டுகாட்டி மான்ஸ்ட்டர் 797, ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் எஸ், கவாஸாகி இசட் 900 மற்றும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 ஆகிய நேக்கட் ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Much awaited powerful KTM 790 Duke will be launched in India tomorrow. Ahead of its launch,brochure of the India-spec KTM Duke 790 is leaked online.
Story first published: Wednesday, September 4, 2019, 12:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X