வழிமீது விழி வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பெனெல்லி.. என்ன தெரியுமா?

இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோன்சினோ 500 மாடல் பைக்கின் அறிமுகம் குறித்த தகவலை பெனெல்லி நிறவனம், வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

வழி மீது விழி வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பெனெல்லி... என்ன தெரியுமா...?

இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பெனெல்லி நிறுவனத்தின் லியோன்சினோ 500 மாடல் பைக், இந்திய இருசக்கர வாகன சந்தையில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ஆட்டோகார் இந்தியா ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

வழி மீது விழி வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பெனெல்லி... என்ன தெரியுமா...?

அந்தவகையில், ரெட்ரோ ஸ்டைலில் தோற்றத்தைப் பெற்றிருக்கும் லியோன்சினோ 500-வின் மூன்று வேரியண்ட்களில், ஒன்று மட்டும்தான் இந்தியச் சந்தையில் தற்போது களமிறக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. லியோன்சினோ 500 மாடலில் ஸ்டாண்டர்டு, ட்ரெய்ல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று வேரியண்ட்கள் சர்வதேச சந்தையில் விற்பனைச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

வழி மீது விழி வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பெனெல்லி... என்ன தெரியுமா...?

இதில், ஸ்டாண்டர்டு வேரியண்ட்தான் இந்திய இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக களமிறக்கப்பட உள்ளது. இந்த ஸ்டண்டர்டு வேரியண்டின் டிமாண்டைப் பொருத்தே, அடுத்த வேரியண்டான ட்ரெய்ல் இந்தியச் சந்தையில் களமிறக்கப்படும் என பெனெல்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டாண்டர்டு வேரியண்டின் இந்திய வருகை குறித்த தகவலை, அந்நிறுவனத்தின் இந்திய இயக்குனர், விகாஸ் ஜபாக் உறுதி செய்துள்ளார்.

வழி மீது விழி வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பெனெல்லி... என்ன தெரியுமா...?

சாலை பயணத்தை மட்டும் கருத்தில் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள ஸ்ட்ரீட் வேரியண்ட் பைக்கில், 17 இன்சிலான அலாய் வீல், ட்யூப்லெஸ் டயருடன் பைக்கின் இரு முனைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், ட்ரெய்ல் வேரியண்டில் ஒயர் ஸ்போக் வீல் காணப்படுகின்றது. அதில் முன்பக்க வீல் 19 இன்சிலும், பின்பக்க வீல் 17 இன்சிலானதாகவும் இருக்கின்றது. இத்துடன் சிறப்பான சஸ்பென்ஷனிற்காக பைக்கின் முன்பக்கத்திற்கு அப்சைட் டவுனம் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோசாக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

வழி மீது விழி வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பெனெல்லி... என்ன தெரியுமா...?

உருவத்தில் மட்டும் மாறுபட்டு காணப்படும் லியோன்சினோ 500 மாடல் பைக்கில், எஞ்ஜின் தரத்தில் அனைத்து ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. அந்தவகையில், லியோன்சினோவின் அனைத்து வேரியண்டிலும் 499.6 சிசி திறன் கொண்ட ட்வின்-சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ப்யூவல் இஞ்ஜெக்சன் சிஸ்டத்தைப் பெற்றுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 46.6 பிஎஸ் பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 45 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

வழி மீது விழி வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பெனெல்லி... என்ன தெரியுமா...?

மேலும், இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷனில் இயங்கும். இத்துடன், இதில் பாதுகாப்பு வசதியாக ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் டஸ்க் பிரேக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில், முன்பக்க சக்கரத்திற்கு நான்கு பிஸ்டனுடன் காலிபருடன் கூடிய 320மிமீ அளவுடைய ட்வின் டிஸ்கும், பின்பக்க வீலிற்கு சிங்கிள் பிஸ்டன் காலிபருடன் கூடிய 260 மிமீ அளவு கொண்ட சிங்கிள் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளன.

வழி மீது விழி வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பெனெல்லி... என்ன தெரியுமா...?

இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்க இருக்கும் ஸ்டாண்டர்டு வேரியண்ட் பெனெல்லி லியோன்சினோ 500 மாடல், டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ. 4ல் இருந்து 5 லட்சம் என்ற விலையைப் பெற இருக்கின்றது. இது அதன் போட்டியாளர்களான ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் ஐஎன்டி 650 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகின்றது.

வழி மீது விழி வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட பெனெல்லி... என்ன தெரியுமா...?

அதேபோன்று, அதன் ட்ரெய்ல் வேரியண்ட், புதிதாக களமிறங்க இருக்கும் கேடிஎம் 390 அட்வென்சர் மாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், லியோன்சினோ 500 மாடல் பைக்கின் குறிப்பிட்ட வருகை நாள்குறித்த தகவலை அந்த நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், அது வருகின்ற பண்டிகை அல்லது ஏதேனும் ஓர் நாளில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
India Will Get Only One Variant In Benelli Leoncino. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X