அதிசவாலான சாகச பயணத்தை துவங்கிய இந்திய ராணுவ வீரர் குழு!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் காரகோரம் மலைத்தொடருக்கு, அதிசவாலான சாகச பயணத்தை ராணுவ வீரர்கள் குழு மேற்கொண்டுள்ளது.

அதிசவாலான சாகச பயணத்தை துவங்கிய இந்திய ராணுவ வீரர் குழு!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கார்கில் போரில் வெற்றி இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. இதனை ஆண்டுதோறும் ஜூலை 26ந் தேதி கார்கில் வெற்றி தினமாக இந்திய ராணுவம் கொண்டாடி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 20ம் ஆண்டு கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட உள்ளது.

அதிசவாலான சாகச பயணத்தை துவங்கிய இந்திய ராணுவ வீரர் குழு!

இந்திய வீரர்களின் நெஞ்சுரத்தை பரைசாற்றும் விதத்தில், இந்த ஆண்டு கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடும் விதமாக, சிறப்பு சாகச பயணத்தை இந்திய ராணுவ வீரர்கள் குழு மேற்கொண்டுள்ளது. மிக மிக சவால்கள் நிறைந்த காரகோரம் மலைத்தொடருக்கு இந்த சாகச பயணத்தை ராணுவ வீரர்கள் குழு துவங்கி இருக்கிறது.

அதிசவாலான சாகச பயணத்தை துவங்கிய இந்திய ராணுவ வீரர் குழு!

லடாக் மாவட்டம் லே அருகிலுள்ள கரு ராணுவ முகாமிலிருந்து இந்த சாகச பயணத்தை இந்திய ராணுவ அதிகாரி மேஜர் சஞ்சீவ் ராய் துவங்கி வைத்தார். மொத்தம் 11 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் வீரர்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அதிசவாலான சாகச பயணத்தை துவங்கிய இந்திய ராணுவ வீரர் குழு!

இந்த பயணத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் ஹிமாலயன் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அமைப்பும் இணைந்து நடத்துகின்றன. இதில், இந்திய ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, ராயல் என்ஃபீல்டு மற்றும் ஹிமாலயன் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அமைப்பை சேர்ந்தவர்களும் உடன் செல்கின்றனர்.

அதிசவாலான சாகச பயணத்தை துவங்கிய இந்திய ராணுவ வீரர் குழு!

இந்த குழுவினர் பயணிக்கும் பாதையானது காரகோரம் மலைத்தொடர் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு வர்த்தக பயன்பாட்டு பாதையாக இருந்தது. தற்போது இந்த சவால் நிறைந்த பாதையில் 1,000 கிமீ தூரத்திற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அதிசவாலான சாகச பயணத்தை துவங்கிய இந்திய ராணுவ வீரர் குழு!

இந்த மோசமான மலைப்பாதையில் சில இடங்களில் மைனஸ் 40 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை இருக்குமாம். அதேபோன்று, பார்வை திறனுக்கான போதிய வெளிச்சம் இல்லாத நிலையும் ஏற்படும். அபாயகரமான மலைப்பாதை, மோசமான சீதோஷ்ண நிலை ஆகியவற்றை கடந்து ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களும், வீரர்களும் இந்த பயணத்தை நிறைவு செய்யும் சவாலோடு சென்றுள்ளனர்.

அதிசவாலான சாகச பயணத்தை துவங்கிய இந்திய ராணுவ வீரர் குழு!

இந்த பாதையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முதல் சாகசப் பயணமாகவும் இது குறிப்பிடப்படுகிறது. மொத்தம் 14 நாட்களில் சாகசப் பயணத்தை நிறைவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த பயணம் வெற்றிகரமாக அமைந்தால், அது சாதனை புத்தக்கத்திலும் இடம்பெறும். மேலும், எதிர்காலத்தில் சாகசப் பயணங்கள் மேற்கொள்ள விரும்புவோருக்கான புதிய பாதையாகவும் இது அமையும்.

Most Read Articles
English summary
Indian Army takes part in first motorcycle expedition to Karakoram.
Story first published: Monday, April 8, 2019, 15:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X