புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்தியன் மோட்டார்சைக்கிள் மாடல்கள் என்றாலே பிரம்மாண்டமான க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிள்கள்தான் நினைவுக்கு வரும். இந்த வழக்கமான பிம்பத்தை மாற்றும் வகையில், ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்தியன் FTR 1200 என்ற இந்த ஸ்க்ராம்ப்ளர் வகை மாடலானது மிகச் சிறப்பான டிசைன் அம்சங்களுடன் கவர்கிறது. இந்த புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக் மாடலானது எஃப்டிஆர் 1200 எஸ் மற்றும் எஃப்டிஆர் 1200 ரேஸ் ரெப்லிக்கா ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. இந்தியன் எஃப்டிஆர் 1200 எஸ் பைக் ரூ.15.99 லட்சத்திலும், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட எஃப்டிஆர் 1200 ரேஸ் ரெப்லிக்கா வேரியண்ட் ரூ.17.99 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்த இரண்டு பைக்குகளுமே இந்தியன் எஃப்டிஆர் 750 ஃப்ளாட் டிராக் ரேஸ் பைக்குகளின் அடிப்படையிலான டிசைன் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. ரேஸ் பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த பைக் மாடல்கள் வந்துள்ளன.

புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

வழக்கமான இந்தியன் மோட்டார்சைக்கிள் மாடல்களிலிருந்து வேறுபட்ட டிசைனில், இந்த இரண்டு பைக்குகளிலும் திறந்த மேனி அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பைக்குகளில் எல்இடி ஹெட்லைட்டுகள், 4.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மேல்நோக்கிய சைலென்சர்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக் மாடல்களில் 1,203 சிசி லிக்யூடு கூல்டு வி-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 112.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக்குகளில் முன்புறத்தில் 43 மிமீ இன்வெர்டெட் ஃபோர்க்குகளும, பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய பிக்கிபேக் ஐஎஃப்பி சஸ்பென்ஷன் அைமப்பு பின்புறத்திலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 320 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 265 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

இரண்டு பைக்குகளிலுமே ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், இனர்ஷியல் மெஸர்மென்ட் யூனிட், பாஷ் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் மல்டிபிள் டிரைவிங் மோடுகள் உள்ளன.

புதிய இந்தியன் எஃப்டிஆர் 1200 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த இரண்டு பைக்குகளும் இந்தியாவில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டதுடன், விலை விபரம் வெளியிடப்பட்டது. ஆனால், முறைப்படியான விற்பனை இன்றுதான் துவங்கியிருக்கிறது. ரூ.2 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம். டெலிவிரி கொடுக்கும் பணிகள் மிக விரைவில் துவங்கப்பட இருக்கிறது.

Most Read Articles
English summary
Indian Motorcycles have launched the FTR 1200 in the Indian market. The new Indian FTR 1200 is available in two variants: FTR 1200 S and FTR 1200 Race Replica. The two motorcycles are offered with a price tag of Rs 15.99 lakh and Rs 17.99 lakh, respectively. Both prices are ex-showroom (India).
Story first published: Monday, August 19, 2019, 15:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X