இந்தியன் எஃப்டிஆர் 1200 அட்வென்ஜெர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

அமெரிக்க இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் அடுத்த ஆண்டில் தனது முதல் அட்வென்ஜர் வகை பைக்காக பான் அமெரிக்கா 1250 மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

தற்போது மற்றொரு அமெரிக்க பைக் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிள் தனது பிரபல மாடல் பைக்கான எஃப்டிஆர் 1200-ஐ அட்வென்ஜர் வெர்சனுக்கு மாற்றி அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியன் எஃப்டிஆர் 1200 அட்வென்ஜெர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

இதுகுறித்து சமீபத்தில் வெளியாகியுள்ள செய்திகள் இந்த புதிய பைக்கின் அறிமுகத்தை உறுதிச்செய்துள்ளன. இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக்கானது 1203சிசி லிக்யூடு கூல்டு, டிஒஎச்சி, வி-ட்வின் என்ஜின் அமைப்புடன் 123 பிஎச்பி பவரையும் 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் போட்டி மாடலான ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக்கானது 145 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் எஃப்டிஆர் 1200 அட்வென்ஜெர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

அட்வென்ஜர் வெர்சனுக்கு இந்த பைக் மாற்றப்பட்டுள்ளதால், இதன் சேசிஸ் அமைப்பில் சில மாற்றங்கள் கொண்டவரப்பட்டுள்ளன. அதேபோல் சஸ்பென்ஷனும் தற்போதைய எஃப்டிஆர் 1200 பைக்கில் இருப்பதை விட நீண்டதாக கொடுக்கப்படும்.

இந்தியன் எஃப்டிஆர் 1200 அட்வென்ஜெர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

அட்வென்ஜர் டூரிங்கிற்கு ஏற்றவிதத்தில் முன் சக்கரம் அளவில் பெரியதாக 19 இன்ச்சில் கொடுக்கப்பட்டுள்ளது. ட்யூப்லெஸ்-டயருக்கு இணக்கமான க்ராஸ்-ஸ்போக் டிசைனும் இந்த அட்வென்ஜர் அப்டேட்டில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியன் எஃப்டிஆர் 1200 அட்வென்ஜெர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

மற்றப்படி மற்ற அட்வென்ஜர் பைக்குகளில் காணப்படும் பெரிய அளவிலான கண்ணாடியை எஃப்டிஆர் 1200 மாடலின் அட்வென்ஜர் வெர்சனும் பெறவுள்ளது. உயரத்தில் பொருத்தப்பட்ட ஹேண்டில்பார் மற்றும் தற்போதைய மாடலை விட சிறிது உயரமாக அமைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் போன்றவற்றையும் இந்த புதிய அட்வென்ஜர் பைக்கில் எதிர்பார்க்கலாம்.

இந்தியன் எஃப்டிஆர் 1200 அட்வென்ஜெர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

மேலும் தனது பிரிவில் உள்ள மற்ற விலையுயர்ந்த பைக்குகளுடன் போட்டியிடுவதற்காக, கார்னரிங் லைட்ஸ் செயல்பாட்டை கொண்ட எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், கலர் டிஎஃப்டி திரைமற்றும் ப்ளூடூத் மூலமாக ஸ்மார்ட்போனை இணைக்கும் வசதி போன்றவற்றை இந்த பைக் கொண்டுள்ளது.

இந்தியன் எஃப்டிஆர் 1200 அட்வென்ஜெர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

இதுதவிர்த்து அட்வென்ஜர் பைக்கிற்கான எலக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ்களும் இந்த புதிய அட்வென்ஜர் பைக்கிற்கு கொடுக்கப்படவுள்ளது. இதனுடன் ஸ்விட்சபிள் ஏபிஎஸ், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் அமைப்பு மற்றும் லீன்-சென்சிட்டிவ் (ஏபிஎஸ் மற்றும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல்) உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இந்த 2020 பைக்கில் கொடுக்கப்படவுள்ளன.

இந்தியன் எஃப்டிஆர் 1200 அட்வென்ஜெர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

இந்தியாவில் அடுத்த ஆண்டு மத்தியில் இருந்து இறுதிக்கு உள்ளாக எந்த நேரத்திலும் அறிமுகமாகும் என கூறப்படும் இந்த பைக் ஹார்லி டேவிட்சனின் பான் அமெரிக்கா 1250 மாடலுடன் போட்டியிடுவதற்காக கிட்டத்தட்ட அதன் விலையில் தான் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் எஃப்டிஆர் 1200 அட்வென்ஜெர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...

மற்றப்படி இதே பிரிவில் உள்ள மற்ற பைக்குகளான பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ், டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 எண்டுரோ மற்றும் கேடிஎம் 1290 சூப்பர் அட்வென்ஜர் போன்ற பைக்குகளை பற்றியெல்லாம் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

Most Read Articles
English summary
Indian Motorcycles could reveal an FTR 1200-based adventure in 2020
Story first published: Friday, December 13, 2019, 13:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X