புகழ்பெற்ற க்ரூஸர் மாடலில் இரண்டு புதிய பைக்குகளை தயாரிக்கும் இந்தியன்!

பிரபல இந்தியன் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனம், அதன் புகழ்பெற்ற எஃப்டிஆர் 1200 மாடலில் இரண்டு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களைத் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகழ்பெற்ற க்ரூஸர் மாடலில் இரண்டு புதிய பைக்குகளை களமிறக்கும் இந்தியன்!

அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியன் நிறுவனம், க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம், அதன் எஃப்டிஆர் 1200 லைன் அப்பில் மேலும் இரண்டு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகழ்பெற்ற க்ரூஸர் மாடலில் இரண்டு புதிய பைக்குகளை களமிறக்கும் இந்தியன்!

எஃப்டிஆர் 1200 மாடலின் இரண்டு வேரியண்ட்களான, எஃப்டிஆர் 1200 எஸ் மற்றும் எஃப்டிஆர் 1200 எஸ் ரேஸ் ரெப்லிகா ஆகிய இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களை கடந்த வருடம் டிசம்பர் தான் இந்தியன் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக அறிமுகம் செய்தது. ஆனால், இந்த மோட்டார்சைக்கிள்கள் மேலை நாடுகளில் நீண்ட காலமாக விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற க்ரூஸர் மாடலில் இரண்டு புதிய பைக்குகளை களமிறக்கும் இந்தியன்!

இந்தியன் எஃப்டிஆர் 1200 எஸ் மாடல் ரூ. 14.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், எஃப்டிஆர் 1200 எஸ் ரேஸ் ரெப்லிகா மாடல் ரூ.15.49 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன.

புகழ்பெற்ற க்ரூஸர் மாடலில் இரண்டு புதிய பைக்குகளை களமிறக்கும் இந்தியன்!

இந்த இரண்டு பைக்குகளிலுமே 1,203 சிசி கொண்ட வி-ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இந்த எஞ்ஜினில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.

புகழ்பெற்ற க்ரூஸர் மாடலில் இரண்டு புதிய பைக்குகளை களமிறக்கும் இந்தியன்!

இதைத்தொடர்ந்து, இந்த இரண்டு மாடல்களிலும் 4.3 அங்குல எல்சிடி தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. புளூடூத் மூலமான இணைப்பு மற்றும் யுஎஸ்பி குயிக் சார்ஜர் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளன.

புகழ்பெற்ற க்ரூஸர் மாடலில் இரண்டு புதிய பைக்குகளை களமிறக்கும் இந்தியன்!

இதேபோன்று, நவீன வசதிகளாக வண்டியின் நகர்வு மற்றும் இயக்கத்தை துல்லியமாக கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில் ஐஎம்யூ சாதனம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், பாஷ் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் என பல்வேறு தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற க்ரூஸர் மாடலில் இரண்டு புதிய பைக்குகளை களமிறக்கும் இந்தியன்!

இத்துடன், டிரைவிங் மோடுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரத்யேக மாடலான எஃப்டிஆர் 1200 லைன் அப்பில், ஸ்ட்ரீட்ஃபைட்டர் மற்றும் அட்வென்சர் டூரிங் ஆகிய இரண்டு புதிய மாடல்களை வருகின்ற 2021ம் ஆண்டிற்குள் இந்தியன் நிறுவனம் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த புதிய மாடல்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Most Read Articles
English summary
Indian Motorcycles FTR 1200 Lineup To Get Two New Models — Street & Adventure. Read in Tamil.
Story first published: Tuesday, April 23, 2019, 11:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X