வாங்கிய வேகத்திலேயே விற்பனைக்கு அறிவித்த இளைஞர்: ராயல் என்பீல்டு ட்வின் பைக்கிற்கு ஏற்பட்ட அவல நிலை!

இளைஞர் ஒருவர், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்வின் பைக்குகளில் ஒன்றான இன்டர்செப்டார் 650 மாடலை கடந்த ஜனவரி மாதம் வாங்கியுள்ளார். ஆனால், இந்த மோட்டார்சைக்கிளை சில காரணங்களால் செகண்ட் ஹேண்டாக விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த பைக்கிற்கான டிமாண்ட் சந்தையில் அதிகரித்தும் வரும் நிலையில் அவர் இவ்வாறு அறிவித்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வாங்கிய வேகத்திலேயே விற்பனைக்கு அறிவித்த இளைஞர்: ராயல் என்பீல்டு ட்வின் பைக்கிற்கு ஏற்பட்ட அவல நிலை!

ராயல் என்பீல்டு நிறுவனம், தனது ட்வின் மாடல்களான கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்காக அறிமுகம் செய்தது.

வாங்கிய வேகத்திலேயே விற்பனைக்கு அறிவித்த இளைஞர்: ராயல் என்பீல்டு ட்வின் பைக்கிற்கு ஏற்பட்ட அவல நிலை!

கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளை கஃபே ரேஸர் ஸ்டைலிலும், இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளை பழைய க்ரூஸர் ஸ்டைலிலும் இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதில், இன்டர்செப்டார் 650 ரூ. 2.35 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், கான்டினென்டல் ஜிடி 650 ரூ. 2.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

வாங்கிய வேகத்திலேயே விற்பனைக்கு அறிவித்த இளைஞர்: ராயல் என்பீல்டு ட்வின் பைக்கிற்கு ஏற்பட்ட அவல நிலை!

விலை சற்று அதிகமாக காணப்பட்டாலும், ட்வின் சிலிண்டர்கள் ஆப்ஷனில், இந்தியாவிலேயே மலிவான விலையில் கிடைக்கும் முதல் மாடல்களாக, இந்த 650 ட்வின் மோட்டார்சைக்கிள்கள் இருக்கின்றன. இதனால், இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு நிலவி வருகிறது.

வாங்கிய வேகத்திலேயே விற்பனைக்கு அறிவித்த இளைஞர்: ராயல் என்பீல்டு ட்வின் பைக்கிற்கு ஏற்பட்ட அவல நிலை!

மேலும், தற்போது வரை இந்த ட்வின் மோட்டார்சைக்கிள்களுக்கான புக்கிங், மவுசு குறையாமல் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் தற்போது வரை, சுமார் 5 மாதங்களுக்குள்ளாக 5,168 யூனிட் ட்வின் மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகி உள்ளன.

வாங்கிய வேகத்திலேயே விற்பனைக்கு அறிவித்த இளைஞர்: ராயல் என்பீல்டு ட்வின் பைக்கிற்கு ஏற்பட்ட அவல நிலை!

ஆகையால், இந்த மோட்டார்சைக்கிள்களின் மீதான டிமாண்ட் அதிகளவில் நிலவி வருகிறது. இதனால் அவற்றிற்கான காத்திருப்பு காலும் 4 முதல் 6 மாதங்களாக உள்ளன.

இவ்வாறு, ராயல் என்பீல்டு ட்வின் மோட்டார்சைக்கிள்களுக்கான வெற்றிப் பாதை விரிவடைந்துச் சொன்றுக்கொண்டிருக்க, அண்மையில் இந்த மோட்டார்சைக்கிளை வாங்கிய இளைஞர் ஒருவர் இதனை விற்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஆனால், அவர் கூறும் காரணம் தான் சற்று வேடிக்கையாக இருக்கின்றது.

வாங்கிய வேகத்திலேயே விற்பனைக்கு அறிவித்த இளைஞர்: ராயல் என்பீல்டு ட்வின் பைக்கிற்கு ஏற்பட்ட அவல நிலை!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் அருஜ் சிங்க்ளா, இவர் கடந்த ஜனவரி மாதம் தான், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்வின் பைக்குகளில் ஒன்றான இன்டர்செப்டார் 650-யை ரூ. 2.91 லட்சம் என்ற ஆன்ரோடு விலையில் வங்கியுள்ளார். மேலும், இந்த மோட்டார்சைக்கிளிற்கு ரூ. 12 ஆயிரம் செலவில் அக்ஸசெரீஸ்களையும் கூடுதலாக இணைத்துள்ளார்.

வாங்கிய வேகத்திலேயே விற்பனைக்கு அறிவித்த இளைஞர்: ராயல் என்பீல்டு ட்வின் பைக்கிற்கு ஏற்பட்ட அவல நிலை!

அவ்வாறு, அந்த மோட்டார்சைக்கிளிற்கு ராயல் என்பீல்டு சம்ப் பிளேட், டூரிங் கிராண்ட் டூர் சீட், கிராஷ் குவார்ட், நைட் ஐ ஹெச்டி எல்இடி மின்விளக்குடன் கூடிய ஹெல்லா பீம் ரெஃப்ளெக்டர் என பல அக்ஸசெரீஸ்களை கூடுதலாக பொருத்தியுள்ளார். இதனால், அந்த இன்டர்செப்டார் மோட்டார்சைக்கிள் மேலும் கூடுதலான கவர்ச்சியை அடைந்துள்ளது.

வாங்கிய வேகத்திலேயே விற்பனைக்கு அறிவித்த இளைஞர்: ராயல் என்பீல்டு ட்வின் பைக்கிற்கு ஏற்பட்ட அவல நிலை!

இவ்வாறு, இன்டர்செப்டாருக்கு அனைத்து சிறப்புகளையும் சேர்த்த அருஜ், அவரது ரைடிங் ஸ்டைலுக்கு ஏற்ப அந்த மோட்டார்சைக்கிள் இல்லாத காரணத்தால், செகண்ட் ஹேண்டாக விற்க முடிவு செய்துள்ளார்.

வாங்கிய வேகத்திலேயே விற்பனைக்கு அறிவித்த இளைஞர்: ராயல் என்பீல்டு ட்வின் பைக்கிற்கு ஏற்பட்ட அவல நிலை!

மேலும், மோட்டார்சைக்கிளின் செயல்திறன் பற்றி கூறிய அவர், அது நல்ல முறையில் இருப்பதாகவும், ஆனால் தன்னுடைய ஸ்டைலுக்கு ஏற்ப அந்த மோட்டார்சைக்கிள் இல்லாத ஒரே காரணத்தால் மட்டுமே, அதனை விற்பனைச் செய்ய அறிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

வாங்கிய வேகத்திலேயே விற்பனைக்கு அறிவித்த இளைஞர்: ராயல் என்பீல்டு ட்வின் பைக்கிற்கு ஏற்பட்ட அவல நிலை!

வெறும், 1,313 கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓடியுள்ள இந்த மோட்டார்சைக்கிளை அவர், ரூ. 2.78 லட்சத்திற்கு விற்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் இன்டர்செப்டார் மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக டிரையம்ப் நிறுவனத்தின் போனேவில்லே மோட்டார்சைக்கிளை வாங்கியுள்ளார். இந்த மோட்டார்சைக்கிள் அவரின் ரைடிங் ஸ்டிலைக்கு ஏற்ப இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாங்கிய வேகத்திலேயே விற்பனைக்கு அறிவித்த இளைஞர்: ராயல் என்பீல்டு ட்வின் பைக்கிற்கு ஏற்பட்ட அவல நிலை!

இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், 648 சிசி ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 47பிஎச்பி பவர் மற்றும் 52என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

source: cartoq

Most Read Articles
English summary
India’s 1st Used Royal Enfield Interceptor For Sale. Read In Tamil.
Story first published: Friday, May 3, 2019, 11:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X